சாந்தி தேவி (அரசியல்வாதி)
சாந்தி தேவி | |
---|---|
ஆறாவது மக்களவை உறுப்பினர் சம்பல் நாடாளுமன்றத் தொகுதி | |
பதவியில் 1977–1980 | |
பின்னவர் | பிஜேந்திர பால் சிங் |
எட்டாவது மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 1984–1989 | |
முன்னையவர் | பிஜேந்திர பால் சிங் |
பின்னவர் | சிறீபால் சிங் யாதவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 30 சனவரி 1937 ஜாரிப் நகர், பதாயூன் மாவட்டம், உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
பிற அரசியல் தொடர்புகள் | |
சாந்தி தேவி (Shanti Devi)(பிறப்பு 1937) உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இரண்டு முறை சம்பல் மக்களவை தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]சாந்தி தேவி சௌத்ரி பதன் சிங் யாதவ் என்பவரின் மகளாக 1937ஆம் ஆண்டு சனவரி 30 ஆம் தேதி பதாயூன் மாவட்டத்தின் ஜாரிப் நகரில் பிறந்தார். பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு வரை படித்துள்ளார்.[1]
தொழில்
[தொகு]1962 முதல் 1968 வரை, தேவி உத்தரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார். இவர் 1974-ல் உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் 1977ஆம் ஆண்டு இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய லோக் தளத்தின் உறுப்பினராகச் சம்பலிலிருந்து வெற்றி பெற்றார். மொத்த வாக்குகளில் 64.29% வாக்குகளைத் தேவி பெற்றார். அடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவர் ஜனதா கட்சியில் (மதச்சார்பற்ற) சேர்ந்தார், ஆனால் இந்தியத் தேசிய காங்கிரசின் (இந்திரா) பிஜேந்திர பால் சிங்கிடம் வெற்றிவாய்ப்பினை இழந்தார்.[2]
1984 இந்தியப் பொதுத் தேர்தலில் தேவி இதேகா கட்சிக்கு மாறி, 36.46% வாக்குகளைப் பெற்று, வெற்றி பெற்றார். ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்த பிறகு, இவர் சம்பல் தொகுதியில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இம்முறை ஜனதா தளத்தின் சிறீபால் சிங் யாதவிடம் தோற்றார். இவர் 39.28% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.[2]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சௌத்ரி ஜகந்நாத் சிங் யாதவ் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட தேவிக்கு நான்கு மகன்கள் உள்ளனர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Members Bioprofile: Shanti Devi, Shrimati". மக்களவை (இந்தியா). பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.
- ↑ 2.0 2.1 "Sambal Partywise Comparison". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 27 November 2017.