சயாத்திரி காட்டு எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சயாத்திரி காட்டு எலி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
ரேட்டசு
இனம்:
ரே. சத்தாரே
இருசொற் பெயரீடு
ரேட்டசு சத்தாரே
(கிண்டன், 1918)

சயாத்ரி காட்டு எலி (Sahyadris forest rat) ரேட்டசு சத்தாரே) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த எலி சிற்றினமாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையின் வடக்குப் பகுதியில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். இது மகாராட்டிராவின் சாத்தாரா, தமிழ்நாட்டின் நீலகிரி மலைகள் மற்றும் கருநாடகாவின் குடகு மாவட்டம் என மூன்று பகுதிகளுக்கு இடையில் பிரிக்கப்பட்டுள்ளது.[1]

பாதிப்பு[தொகு]

ரே. சதாரே பன்னாடு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் பாதிக்கப்படக்கூடியதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏனெனில் இதன் எண்ணிக்கை 2,000 சதுர கி.மீக்கும் குறைவான வாழிடப்பகுதியில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாழிடம் காடுகளில் மிகவும் துண்டு துண்டாக உள்ளன. இதன் வாழ்விடத்தில் ஏற்படும் மாற்றங்களால் இது பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. இதன் வாழ்விடத்தின் தரம் மற்றும் மக்கள்தொகையில் முதிர்ந்த எலிகளின் எண்ணிக்கையில் சரிவை எதிர்கொள்கின்றன. இந்தச் சிற்றினங்கள் எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல்களாகத் தோட்டங்களுக்குக் காடுகளை அழித்தல், மரம் வெட்டுதல், பூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் அயல்நாட்டு இனங்கள் ஆகியவை அடங்கும்.[1]

வாழ்விடம்[தொகு]

இந்தியாவில் இவை கடல் மட்டத்திலிருந்து சுமார் 700 முதல் 2,150 மீ வரையிலான மேற்குத் தொடர்ச்சி மலைகளின் வடக்குப் பகுதியில் உள்ள ஈரமான இலையுதிர் மற்றும் பசுமையான காடுகளில் மட்டுமே இந்த சிற்றினங்கள் காணப்படுகின்றன. இது கிட்டத்தட்ட நடுவில் அல்லது உயரமான விதானத்தில் உள்ள கூடுகளில் அல்லது வளைகளில் மட்டுமே வாழ்கிறது. இது பழங்கள் மற்றும் பூச்சிகளை உண்ணும்.[1][2]

தோற்றம்[தொகு]

ஆர். சதாரே ஒரு நீளமான, மென்மையான தோலினையும் தங்கப் பழுப்பு நிற முதுகினையும் வெள்ளை அடிப்பகுதியையும் கொண்ட எலியாகும். இதன் வால் மிக நீளமானது.[2] இதன் ஒத்த தோற்றம் காரணமாக இது முதலில் கருப்பு எலியின் (ரேட்டசு ரேட்டசு) துணையினமாக விவரிக்கப்பட்டது. இருப்பினும், டி. என். ஏ. சான்றுகள் இவை ஒரே வாழ்விடத்தை ஆக்கிரமித்துள்ள போதிலும் இனப்பெருக்கம் இல்லாத இரண்டு தனித்துவமான சிற்றினங்களாக உள்ளன. இவற்றின் ஒற்றுமைகள் ஒரே சூழலியல் இடத்தைப் பகிர்ந்து கொள்வதன் விளைவாக ஒன்றிணைந்ததாகக் கருதப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 Molur, S. (2017). "Rattus satarae". IUCN Red List of Threatened Species 2016: e.T136517A115209466. https://www.iucnredlist.org/species/136517/115209466. பார்த்த நாள்: 12 March 2020. 
  2. 2.0 2.1 Musser, GG; Carleton, MD (2005). Superfamily Muroidea. In Wilson, DE & Reeder, DM (eds.). Mammal Species of the World. 3rd ed. JHU Press. 
  3. Pagès, Marie (2011). "Morphological, chromosomal, and genic differences between sympatric Rattus rattus and Rattus satarae in South India". Journal of Mammalogy 92 (3): 659–670. doi:10.1644/10-MAMM-A-033.1. https://archive.org/details/sim_journal-of-mammalogy_2011-06_92_3/page/659. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சயாத்திரி_காட்டு_எலி&oldid=3761400" இலிருந்து மீள்விக்கப்பட்டது