உள்ளடக்கத்துக்குச் செல்

சனத்நகர் சட்டமன்றத் தொகுதி

ஆள்கூறுகள்: 17°27′25″N 78°26′31″E / 17.457°N 78.442°E / 17.457; 78.442
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சனத்நகர்
Sanathnagar
தெலங்காணா சட்டப் பேரவை, தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்தென்னிந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஐதராபாத்து
மொத்த வாக்காளர்கள்2,20,969
சட்டமன்ற உறுப்பினர்
3-ஆவது தெலங்காணா சட்டப் பேரவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரத் இராட்டிர சமிதி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2023

சனத்நகர் சட்டமன்றத் தொகுதி (Sanathnagar Assembly constituency) என்பது இந்தியாவின் தெலங்காணா சட்டப் பேரவையின் ஒரு தொகுதியாகும். ஐதராபாத்தில் உள்ள 15 தொகுதிகளில் இதுவும் ஒன்று. இது செகந்திராபாது மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.

பாரத் இராட்டிர சமிதி கட்சியினைச் சார்ந்த தெலங்காணாவின் மேனாள் கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் ஒளிப்பதிவுத் துறை அமைச்சரான தலசானி சீனிவாசு யாதவ், மூன்றாவது முறையாக இத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தொகுதியின் பரப்பளவு

[தொகு]

சட்டமன்றத் தொகுதி தற்போது பின்வரும் பகுதிகளை உள்ளடக்கியது:

அக்கம்
சனத்நகர்
அமீர்பேட்டை
எஸ்.ஆர்.நகர்
பத்மாராவ் நகர்
மோண்டா சந்தை
பால்கம்பேட்
பான் பஜார்
பொது சந்தை
பேகம்பேட்டை (பகுதி)
ரஸ்த்ரபதி சாலை (பகுதி)

சட்டமன்ற உறுப்பினர்கள்

[தொகு]
ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1978 எசு. இராம் தாசு இந்திய தேசிய காங்கிரசு (இ)[1]
1983 கத்ரகடா பிரசுனா சுயேச்சை
1985 ஸ்ரீபதி ராஜேஷ்வர் ராவ் தெலுங்கு தேசம் கட்சி
1989 மரி சென்னா ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
1992 மரி சசிதர் ரெட்டி
1994
1999 ஸ்ரீபதி ராஜேஷ்வர் ராவ் தெலுங்கு தேசம் கட்சி
2004 மரி சசிதர் ரெட்டி இந்திய தேசிய காங்கிரசு
2009 மரி சசிதர் ரெட்டி
2014 தலசனி சீனிவாச யாதவ் தெலுங்கு தேசம் கட்சி
2018 பாரத் இராட்டிர சமிதி
2023

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sanath Nagar Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency".