பேகம்பேட்டை
பேகம்பேட்டை | |
---|---|
உட்புற நகரம் | |
ஆள்கூறுகள்: 17°26′42″N 78°28′10″E / 17.444865°N 78.469396°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | ஐதராபாத்து |
Metro | ஐதராபாத்து |
அரசு | |
• நிர்வாகம் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு, உருது |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 500 016 |
வாகனப் பதிவு | டிஎஸ் |
மக்களவைத் தொகுதி | சிக்கந்தராபாத் |
சட்டப்பேரவைத் தொகுதி | கைரதாபாத் |
திட்டமிடம் நிறுவனம் | பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி |
இணையதளம் | telangana |
பேகம்பேட்டை (Begumpet) இந்தியாவின் ஐதராபாத், சிக்கந்தராபாத்தின் ஒரு பகுதியாகும். ஆறாவது ஐதராபாத் நிசாமின் (மஹ்புப் அலி கான், ஆறாம் ஆசாஃப் ஜா) மகள் பசீர் உன்னிசா பேகம், பைகா சம்சு உல் உம்ரா அமீர் இ கபீரின் இரண்டாவது அமீரை மணந்தபோது தனது திருமண வரதட்சணையின் ஒரு பகுதியாக இதைப் பெற்றார்.
நகரைப் பற்றி
[தொகு]பேகம்பேட்டை, உசேன் சாகர் ஏரியின் வடக்கே அமைந்துள்ள ஐதராபாத்தில் உள்ள முக்கிய வணிக மற்றும் குடியிருப்பு நகரங்களில் ஒன்றாகும். கிரீன்லாந்து மேம்பாலம் நகரை பஞ்சகுட்டாவுடன் இணைக்கிறது. ஆரம்பத்தில் பேகம்பேட்டை ஐதராபாத்து, சிக்கந்திராபாத் நகரங்களுக்கு இடையில் ஒரு சிறிய புறநகர்ப் பகுதியாக இருந்தது.
பேகம்பேட்டை விமான நிலையம் நகரத்தின் முக்கிய அடையாளமாகும். தற்போது சம்சாபாத்தில் புதிய சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் வணிக விமானங்களுக்காக விமான நிலையம் மூடப்பட்டுள்ள. மேலும், பயிற்சிக்காகவும், பட்டய விமானங்களுக்காகவும் மட்டுமே விமான நிலையம் செயல்படுகிறது.
பைகா அரண்மனை, கீதாஞ்சலி மூத்தோர் பள்ளி, பேகம்பேட்டை எசுப்பானிய மசூதி, ஐதராபாத் பொதுப் பள்ளி, ரொனால்டு ராஸ் நிறுவனம் ஆகியவை இப்பகுதியில் அமைந்துள்ள சில முக்கியமான இடங்களாகும். சஞ்சீவையா பூங்கா என்பது உசேன் சாகர் ஏரியின் கரையில் அமைந்துள்ள ஒரு பொது பூங்காவாகும். நகரத்தின் கிரீன்லாந்து பகுதி 1997 வரை இராஜா ஜிதேந்திர பொதுப் பள்ளிக்கு சொந்தமானது.
மருத்துவமனைகள்
[தொகு]- பேஸ் மருத்துவமனைகள் [1]
- மேக்சிவிஷன் கண் மருத்துவமனைகள்
போக்குவரத்து
[தொகு]பேகம்பேட்டை தொடருந்து நிலையம் இப்பகுதிக்கு தொடருந்து இணைப்பை வழங்குகிறது. அருகிலுள்ள பிற ஐதரபாத் எம்.எம்.டி.எஸ் நிலையங்களில் சஞ்சீவையா பூங்காவும், யேம்சு வீதியும் அடங்கும். அரசுக்கு சொந்தமான பேருந்துக் கழகம் நகர பேருந்து சேவையை நடத்துகிறது. இது பேகம்பேட்டை நகரின் முக்கிய பகுதிகளுடன் இணைக்கிறது. மெற்றோ தொடருந்து சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இப்போது மாணவர்களுக்கும் பிற குடிமக்களுக்கும் மிகவும் பிரபலமான போக்குவரத்து வழிமுறைகளில் இதுவும் ஒன்றாகும்.