ஐதராபாத் பொதுப் பள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐதராபாத் பப்ளிக் ஸ்கூல்
The Hyderabad Public School
ద హైదరాబాద్ పబ్లిక్ స్కూల్
அமைவிடம்
பேகம்பேட்
ஐதராபாத், தெலங்கானா
இந்தியா
தகவல்
பிற பெயர்HPS, Begumpet
பழைய பெயர்ஜாகிர்தார் கல்லூரி
வகைதனியார் பள்ளி
தொடக்கம்1923; 101 ஆண்டுகளுக்கு முன்னர் (1923)
நிறுவனர்ஐதராபாத் நிசாம் உஸ்மான் அலி கான்
அதிபர்கந்த பளி (2017 ஆகத்து முதல்)
பீடம்155
மொத்த சேர்க்கை3200 (PP1 - 12)
Campus size152 ஏக்கர்
இணையம்

ஐதராபாத் பப்ளிக் ஸ்கூல் (The Hyderabad Public School, Begumpet (HPS, Begumpet) என்பது இந்தியாவின் தெலங்கானாவின் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளி ஆகும். இந்தப்பள்ளியானது 1923 ஆம் ஆண்டு  ஐதராபாத்தின் ஏழாவது நிசாமான, உஸ்மான் அலி கானால் ஜாகிர்தார் கல்லூரி என்ற பெயரில் நிறுவப்பட்டது.  இந்தக் கல்விக்கூடத்தின் நோக்கம், நவாப், சாகிர்தார் போன்ற பிற உயர்குடி மக்களின் குழந்தைகளுக்கு உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குவது ஆகும். இந்தப் பள்ளியை வடிவமைத்தவர் தலைமைக் கட்டிட வடிவமைப்பாளரான நவாப் கான் பகதூர் மிஸ்ரா பெய்க் என்பவராவார். 1950இல் ஜமீன்தாரி முறை ஒழிந்ததை அடுத்து 1951இல் இந்தப் பள்ளியின் பெயர் ஐதராபாத் பப்ளிக் ஸ்கூல் என்றானது.[1] இந்தப் பள்ளி வளாகமானது 152 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இங்கு முன் துவக்கப்பள்ளியில் இருந்து 12 ஆம் வகுப்பு (வயது 3 முதல் 17 வயது வரை) வரை குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது. இந்தப் பள்ளி இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகள் சபை  அமைப்பின் அங்கீகாரம் பெற்றது. இப்பள்ளியை ஐதராபாத் பொது பள்ளி சங்கம் மற்றும் ஆளுநர் வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.

அங்கீகாரம்[தொகு]

கல்வி உலகம்: 2018-19 ஆண்டுக்கான பள்ளிகளின் தரவரிசைப் பட்டியலில் தெலுங்கானா மாநிலம் மற்றும் ஐதராபாத் நாகர அளவில் முதலிடத்திலும் தேசிய அளவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.[2]

எதிர்காலம் 50 விருது : ஐதராபாத் பப்ளிக் ஸ்கூல் நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கும் எதிர்கால 50 பள்ளிகளில் ஒன்று.[3]

எஜுகேசன் டுடே: இந்திய ஸ்கூல் மெரிட் அவார்ட் : ஐதராபாத் பப்ளிக் ஸ்கூலானது பள்ளிகளின் தரவரிசைப் பட்டியலில் மாநில அளவிலும் மாநகர அளவிலும் முதலிடத்திலும் தேசிய அளவில் மூன்றாம் இடத்திலும் உள்ளது.[4]

குளோபல் லீக் இன்ஸ்டிடியூட் ஆய்வ்வில் உயர்ந்த இடம் : மாணவர் திருப்தியை அடிப்படையாக கொண்ட கருத்துக்கணிப்பில் அடிப்படையில் குளோபல் லீக் இன்ஸ்டிடியூட்டால்  'படிக்க சிறந்த இடங்கள்' என்ற பட்டியலில் இந்த பள்ளி இடம்பெற்றது. மேலும் இப்பள்ளியானது ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையிடம் விருது பெற்றுள்ளது.[5][6]

குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hyderabad Public School, Begumpet". My-Telugu.com. பார்க்கப்பட்ட நாள் 2011-09-20.
  2. Education World Rankings, Education World, பார்க்கப்பட்ட நாள் 2018-11-05
  3. Future 50 schools shaping success. https://www.future50schools.com/wp-content/uploads/2018/03/full-magazine2.pdf. பார்த்த நாள்: 2018-11-14. 
  4. EducationToday.co. "The Hyderabad Public School". Educationtoday.co (in ஆங்கிலம்). Archived from the original on 2018-08-13. பார்க்கப்பட்ட நாள் 2018-08-13.
  5. "The Hyderabad Public School Begumpet". Forbes India Marquee: 50. February 2018. https://greatplacetostudy.org/presentation/The%20Great%20Indian%20Schools%202018.pdf. பார்த்த நாள்: 2018-11-14. 
  6. "youandimag You & I Monthly Magazine dated Mon, 2 Jul 18". http://emag.youandi.com/1719994/You-I-Monthly-Magazine/July-2018-Issue-23-Richa-Chadha#dual/40/1. 
  7. "All for love: When Microsoft CEO Satya Nadella surrendered his Green Card for wife Anu". Firstpost. Archived from the original on 3 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 5 நவம்பர் 2017.
  8. Satya Nadella: Executive Vice President, Cloud and Enterprise
  9. Shantanu Narayen Chairman, President and Chief Executive Officer
  10. T K Kurien: CEO, Wipro Ltd
  11. "What do Satya Nadella, Ajay Banga, Syed Akbaruddin have in common? It's the Hyderabad Public School - Mumbai Mirror -". Mumbai Mirror. https://mumbaimirror.indiatimes.com/others/sunday-read/the-school-of-dreams/articleshow/61800591.cms. 
  12. [1]
  13. [2]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதராபாத்_பொதுப்_பள்ளி&oldid=3586419" இலிருந்து மீள்விக்கப்பட்டது