அமீர்பேட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமீர்பேட்டை, ஐதராபாத்து
அண்மைப்பகுதி
அமீர்பேட்டை, ஐதராபாத்து, இந்தியா
அமீர்பேட்டை, ஐதராபாத்து, இந்தியா
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஐதராபாத்து மாவட்டம்
Metroஹைதராபாத் பெருநகர மண்டலம்
நிறுவப்பட்டது1900
தோற்றுவித்தவர்அமீர் அலி
அரசு
 • நிர்வாகம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு, உருது, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்500016[1]
மக்களவைத் தொகுதிசிக்கந்தராபாத்
மாநிலச் சட்டப் பேரவைத் தொகுதிசனத் நகர்
திட்டமிடல் நிறுவனம்ஐதராபாத்து நகர அபிவிருத்தி ஆணையம்
நிர்வாகம்பெருநகர ஐதராபாத்து மாநகராட்சி

அமீர்பேட்டை (Ameerpet) தெலங்காணாவின் ஐதராபாத்தின் வடமேற்கில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பு மையமாகும். அமீர்பேட்டை ஐதராபாத் மாவட்டத்தில் ஒரு மண்டலமாகும். வட்டாரம் அதன் எல்லைகளை சர்தார் படேல் சாலையுடனும், தேசிய நெடுஞ்சாலை 65 உடனும் பகிர்ந்து கொள்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை காலியாக உள்ள இடங்களைக் கொண்டிருந்தாலும், இப்பகுதி இப்போது சில வணிக மற்றும் குடியிருப்பு நிறுவனங்களுடன் பரப்பரப்பான இடமாக இருக்கிறது.

அமீர்பேட்டைக்கு அருகில் அமைந்துள்ள பிரபலமான பகுதிகளில் பஞ்சகுட்டா, பஞ்சாரா ஹில்ஸ், பேகம்பேட்டை, சனத் நகர், சோமாஜிகுடா ஆகியவை அடங்கும்.

90களின் முற்பகுதியில் வரை, வகந்த் அடுக்ககம், சாகிர்தார் நிலங்கள், நவாப்களின் வீடுகள், தோட்டங்கள், சாலையோர உணவகங்கள் ஆகியவை பெரும்பாலும் மும்பைக்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை 9இல் அமைந்துள்ளது. 1990களில் ஐதராபாத்தின் வடக்கு புறநகர்ப் பகுதிகளின் விரிவாக்கத்துடன் வணிக நடவடிக்கைகள் முதன்முதலில் நகரின் மையத்திலிருந்து இங்கு மாற்றப்பட்டன. இன்று இது பல வணிக நிறுவனங்களுடன் உயர் பாதசாரி மற்றும் வாகன போக்குவரத்துடன் ஒரு பரப்பரப்பான இடமாகும்.

வரலாறு[தொகு]

1900களின் முற்பகுதியில் ஐதராபாத் நிசாம் தனது சாகிர்தார்களில் ஒருவரான அமீர் அலி என்பவருக்கு இந்த நிலத்தை பரிசளித்தார். அவர் தனது கோடைகால இல்லமாக ஒரு சிறிய அரண்மனையை கட்டினார். மேலும் இது ஒரு கோடைகால தங்குமிடமாகவும் பயன்படுத்தப்பட்டது. ஏனெனில் அது அடர்த்தியான தாவரங்கள் மற்றும் இனிமையான காலநிலை மற்றும் நீர்நிலைகளையும் கொண்டிருந்தது. [2] இந்த அரண்மனையில் இப்போது "இயற்கை சிகிச்சை மருத்துவமனை"யும் அமைந்துள்ளது.

ஐதராபாத் நிசாம்களால் இங்கு அமைக்கப்பட்ட இந்தியாவின் மூன்றாவது ஆய்வகம் " நிசாமியா ஆய்வகம்" என்று அழைக்கப்படுகிறது. 1908ஆம் ஆண்டில், நவாப் சாபர் சங் இங்கிலாந்தில் வானியல் பயின்றார். அவர் இரண்டு தொலைநோக்கிகளுடனும், ஒரு நிபுணருடன் ஐதராபாத்து திரும்பி, தொலைநோக்கிகளை நிசாமுக்கு வழங்கினார். நிசாம் தொலைநோக்கிகளை அமீர்பேட்டையில் நிறுவ உத்தரவிட்டார். அவை அடுத்த 50 ஆண்டுகள் அங்கேயே இருந்தன.

வர்த்தகம்[தொகு]

அமீர்பேட்டை அனைத்து வகையான வர்த்தகத்திற்காகவும், வணிகத்திற்காகவும் அறியப்படுகிறது. ஆனால் முக்கியமாக ஒரு கல்வி மையமாகவும் திகழ்கிறது. [3] இது பல சில்லறை கடைகளையும், பல கல்வி நிறுவனங்களையும் கொண்டுள்ளது. இது மாணவர்களுக்கு உயர் படிப்பைத் தொடர நிறுவனங்களில் சேர உதவுகிறது.

மென்பொருள் பயிற்சி மையம்[தொகு]

அமீர்பேட்டை இந்தியாவில் மென்பொருள் பயிற்சிக்கான நன்கு அறியப்பட்ட இடமாகும். [4] மென்பொருள் பயிற்சி வகுப்புகளில் சேர நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் அமீர்பேட்டைக்கு வருகிறார்கள். [5] அவர்கள் ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் தரமான மென்பொருள் பயிற்சியைப் பெறுகிறார்கள். இதன் விளைவாக, அமீர்பேட்டும் உலகளாவிய நற்பெயரைப் பெற்று வருகிறது. மேலும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களும் பல்வேறு வகையான மென்பொருள்களில் பயிற்சி பெற இங்கு வரத் தொடங்குகின்றனர். பிரபலமான மத்திய உயர்கணிணி மேம்பாட்டு மையம் (சி-டாக் ஐதராபாத்து) இந்த பகுதியில் அமைந்துள்ளது.

முக்கிய அடையாளங்கள்[தொகு]

நிசாமியா ஆய்வகம், சாரதி படப்பிடிப்பு அரங்கம், ஐதராபாத்து நகர அபிவிருத்தி ஆணைய மைத்ரிவனம், ஐதராபாத்து நகர அபிவிருத்தி ஆணைய சுவர்ண ஜெயந்தி வளாகம், ஆதித்யா என்க்ளேவ், ஆதித்யா வர்த்தக மையம், ஆஸ்டர் பிரைம் மருத்துவமனை, அமீர்பேட்டை குருத்வாரா, மஸ்ஜித்-இ-அக்தருனிசா பேகம், விகேர் பல்துறை சிறப்பு மருத்துவமனை போன்றவை அமீர்பேட்டையின் முக்கிய அடையாளங்களாகும். [6] மைத்ரிவனம் கட்டிடத்தில், பல கணினி மையங்கள் அமைந்துள்ளன. எஸ்.ஆர். நகர் அஞ்சல் நிலையமும் மைத்ரிவனம் கட்டிடத்தில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pin code of Ameerpet(Secunderabad)". 10 July 2020 இம் மூலத்தில் இருந்து 9 பிப்ரவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210209105926/https://pincodeindia.net.in/500016. 
  2. Ameerpet: Busiest and commercially diverse
  3. Ameerpet houses hundreds of IT institutes and over one lakh students
  4. "Ameerpet, India's unofficial IT training hub".
  5. "Ameerpet-Blooming IT Institutes". Archived from the original on 2013-02-16. பார்க்கப்பட்ட நாள் 2021-02-09. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  6. Training and Consulting Services .
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Ameerpet
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

6. Ameerpet mosque [1]

  1. "In PICTURES: A Hyderabad Mosque Shows Us What It Takes to Feed 1,000 People Every Day of Ramzan" (in en-US). The Better India. 2016-07-07. https://www.thebetterindia.com/60971/ramzan-iftar-dinner-hyderabad-mosque/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமீர்பேட்டை&oldid=3592580" இலிருந்து மீள்விக்கப்பட்டது