தலசனி சீனிவாச யாதவ்
தலசனி சீனிவாச யாதவ்
Talasani Srinivas Yadav | |
---|---|
![]() | |
கால்நடை, பால்வளம், மீன்வளத்துறை அமைச்சர், தெலுங்கான மாநிலம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2019 | |
தகவல், ஒலிபரப்பு, ஒளிப்பதி அமைச்சர், தெலுங்கான அரசாங்கம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியேற்பு 2019 | |
தொகுதி | சனந்தா நகர் சட்டமன்ற தொகுதி |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | 6 அக்டோபர் 1965 செகந்திராபாத் |
அரசியல் கட்சி | தெலுங்கானா இராட்டிர சமிதி |
வாழ்க்கை துணைவர்(கள்) | திருமதி சுவர்ணா |
பிள்ளைகள் | 1 மகன், 2 மகள்கள் |
பெற்றோர் | ஸ்ரீ வெங்கடேசம் யாதவ் |
இருப்பிடம் | மேற்கு மாரெட்பள்ளி, ஐதராபாத் |
தலசனி சீனிவாச யாதவ் (Talasani Srinivas Yadav)(பிறப்பு: அக்டோபர் 6, 1965) என்பார் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போதைய க. சந்திரசேகர் ராவ் அமைச்சரவையில் கால்நடை பராமரிப்பு, மீன்வள மற்றும் ஒளிப்பதிவு அமைச்சராக உள்ளார்.[1] இவர் சனத்நகர் சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். முன்னதாக இவர் செகந்திராபாத் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். [2]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
தலசனி சீனிவாச யாதவ் அக்டோபர் 7, 1965 அன்று செகந்திராபாத்தில் பிறந்தார். இவரது தந்தை வெங்கடேசு யாதவ் மொண்டா சந்தையின் தலைவராக இருந்தார்.
அரசியல் வாழ்க்கை[தொகு]
1986ஆம் ஆண்டில் ஜனதா கட்சி வேட்பாளராக மொண்டா சந்தையின் கார்ப்பரேட்டராக போட்டியிட்டு யாதவ் அரசியலில் நுழைந்தார். இத்தேர்தலில் தோல்வியுற்ற சீனிவாச யாதவ் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். பின்னர் 1994இல் செகந்திராபாத் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1999ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், தலசனி இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மேரி ரவீந்திரநாத்தை தோற்கடித்து, நா. சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் ஆந்திர மாநில தொழிலாளர், சுற்றுலாத்துறை அமைச்சரானார். 2004 சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கானா இராட்டிர சமிதியிலிருந்து போட்டியிட்ட டி. பத்மா ராவ் கவுட் என்பவரைத் தோற்கடித்தார். 2008இல் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளர் பிட்லா கிருட்டிணாவை 18,067 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இதனைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் இதே தொகுதியிலிருந்து போட்டியிட்டு திரைப்பட நடிகையும், காங்கிரசு வேட்பாளருமான ஜெயசுதாவிடம் கிட்டத்தட்ட 5000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 2005இல் இவர் மாநில தெலுங்கு யுவதாவின் தலைவரானார்.
தெலங்காணா மாநிலம் உருவான பின்னர் இவர் 2014ஆம் ஆண்டு தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து சனத் நகர் தொகுதியிலிருந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியில் சேர்ந்து முதலமைச்சர் க. சந்திரசேகர் ராவ் அமைச்சரவையில் சேர்ந்து வணிக வரி அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2018 ஆம் ஆண்டில் தெலுங்கானா இராட்டிர சமிதி கட்சியின் சார்பில் மீண்டும் சனத் நகர் தொகுதியிலிருந்து போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 2019 பிப்ரவரி 19 அன்று மாநில அமைச்சராக பதவியேற்றார்.
மேலும் காண்க[தொகு]
- தெலுங்கானா சட்டமன்றத்தின் தொகுதிகளின் பட்டியல்
- செகந்திராபாத் (சட்டமன்றத் தொகுதி)
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Talasani Srinivas Yadav Profile". 2016-05-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2021-01-07 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter
|dead-url=
(உதவி); Invalid|dead-url=dead
(உதவி) - ↑ "Talasani Srinivas Yadav resigns as MLA to take oath as Cabinet minister". NewsWala. 16 December 2014. Archived from the original on 23 ஜூன் 2015. https://web.archive.org/web/20150623191644/http://www.newswala.com/Hyderabad-News/Talasani-Srinivas-Yadav-resigns-as-MLA-to-take-oath-as-Cabinet-minister-116179.html. பார்த்த நாள்: 23 June 2015.