சதாசிவ பிரமேந்திரர்
சதாசிவ பிரமேந்திரர் | |
---|---|
சித்தர் சதாசிவ பிரம்மேந்திரரின் உருவப்படம் | |
பிறப்பு | 17-18வது நூற்றாண்டு திருவிசைநல்லூர், கும்பகோணம்[1] |
சதாசிவ பிரம்மேந்திரர் (Sadasiva Brahmendra) தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அத்வைத வேதாந்தியும், கருநாடக இசை அறிஞரும் ஆவார். [2]போதேந்திர சரஸ்வதி மற்றும் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியோர்களின் சமகாலத்தில் வாழ்ந்தவர்.
வாழ்க்கை
[தொகு]சோமசுந்தர அவதானி - பார்வதி இணையருக்கு சிவராமகிருஷ்ணன் எனும் இயற்பெயருடன் கும்பகோணத்தில் பிறந்தவர். போதேந்திர சரஸ்வதி மற்றும் ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் ஆகியவர்களுடன் ஒரே குருகுலத்தில் வேதம் பயின்றவர்.
பின்னர் வீட்டை விட்டு வெளியேறி, பிரம்ம ஞானம் பெற சந்நியாசம் மேற்கொண்டு உலகைச் சுற்றிவரலானார். [3] பரமஹம்ச யோகானந்தரின் வாழ்க்கை வரலாறு நூல் மூலம், சதாசிவ பிரமேந்திரரின் யோக சக்திகள் அறிய முடிகிறது. அட்டாங்க யோக சித்திகளை அடைந்தவர்.[4][5][6][7]
கோயில் பணியில்
[தொகு]புதுக்கோட்டை சமஸ்தான மன்னருக்கு தட்சிணாமூர்த்தி மந்திரத்தை, மண்ணில் எழுதிக் கொடுத்தது, இன்றும் புதுக்கோட்டை அரண்மனையில் உள்ள தட்சிணாமூர்த்தி கோயிலில் உள்ளது.[8][9]
தஞ்சாவூரில் உள்ள புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அமைக்க காரணமானவர். தேவதானப்பட்டியில் காமாட்சி அம்மன் கோயிலை நிறுவியவர். கரூரில் கல்யாண வெங்கடேச பெருமாள் கோயிலை நிர்மாணிப்பதில் பங்கு கொண்டவர்.[10] தஞ்சாவூர் பிரசன்ன வெங்கடேச கோயிலில் அனுமார் விக்கிரகத்தை நிர்மாணித்தவர்.[11]
திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலின் ராகு தலத்தில் கணபதி இயந்திர மந்திரத் தகட்டை எழுதிப் பதித்தவர்.
சமாதிகள்
[தொகு]சதாசிவ பிரமேந்திரரின் சமாதி மூன்று இடங்களில் உள்ளது.
படைப்புகள்
[தொகு]நூல்கள்
[தொகு]- ஆத்ம வித்தியா விலாசம் (அத்வைத விளக்க நூல்)
- பிரம்ம சூத்திர விளக்கம்
- யோக சுதாகர (பதஞ்சலி யோக சூத்திர விளக்க நூல்)
- சித்தாந்த கல்பவல்லி
- அத்வைதரசமஞ்சரி
- ஆத்மானுசந்தானம்
- சிவமானசபூஜை
- தட்சினாமூர்த்தி தியானம்
- நவமணிமாலா
- நவ்வர்ண இரத்தினமாலா
- சுவானுபூதி பிரகாசிதகம்
- மனோனியமானம்
- பரமஹம்ச ஆச்சாரியார்
- சிவயோக தீபிகா
- உபநிடத வியாக்கியானம்
- கேசரவல்லி
- சூத்திர சம்கிதா
- பாகவத சாரம்
- ஆத்ம-அனாத்ம விவேக பிரகாசிகா
பாடல்கள்
[தொகு]பாமர மக்கள் அத்வைத அறிவை பெறும் பொருட்டு கருநாடக இசையில் எளிய பாடல்களில் விளக்கியுள்ளார். அவைகளில் பிரபலமானவைகள்:
- ஆனந்த பூரண போதகம் சச்சிதானந்தா - இராகம் சங்கராபரணம்
- ஆனந்த பூர்ணா போதக சதகம் - மத்தியமாவதி
- பஜரே கோபாலம் - ஹிந்தோளம்
- பஜரே ரகுவீரம் -
- பஜரே யதுநாதம் - பீலு
- பிரம்மவைபவம் - நடனமாக்கிரியா
- சேட்டா ஸ்ரீராமம்
- சிந்தா நாஸ்தி கிலா
- காயதி வனமாலி
- பிபரே ராம ரசம்
- பூர்ண போதகம்
- ஸ்மாரவரம்
திரைப்படத்தில்
[தொகு]மகாசக்தி மாரியம்மன் என்ற திரைப்படத்தில், சதாசிவ பிரமேந்திரின் அஷ்டாங்க யோக சித்திகள் காட்டப்படுகிறது.[சான்று தேவை]
கலைகளில்
[தொகு]தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சதாசிவ பிரமேந்திரரின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு, தோழன் எனும் புதினத்தை எழுதியுள்ளார்.
படக்காட்சியகம்
[தொகு]-
சதாசிவ பிரம்மேந்திரர் சமாதியில் உள்ள மரத்தினை உயிர்பித்த தருணத்தினை குறிக்கும் கல்வெட்டு
-
படிமம்:Sadasiva Brahmendra samathi - சதாசிவ பிரம்மேந்திரர் சமாதி.jpg
-
நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஜீவசமாதி
இதனையும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- நெரூரில் சதாசிவ பிரமேந்திரர் ஆராதனை விழா தொடக்கம்
- Sri Kailasha Ashramam பரணிடப்பட்டது 2015-02-24 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
- SADASIVA BRAHMENDRA SARASVATI by N. RAGHUNATHAN M.A., B.L. (ஆங்கிலம்)
- Sada Siva Brahmendra Swami (ஆங்கிலம்)
- Santa Shreshta Sadasiva Bramhendra and his miracles பரணிடப்பட்டது 2015-02-17 at the வந்தவழி இயந்திரம் (ஆங்கிலம்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sadasiva Brahmendra (18th Century)". பார்க்கப்பட்ட நாள் 2 December 2010.
- ↑ "Commentaries of Sadasiva Brahmendra on Brahmasutra & Yogasutra". 2010-07-29. பார்க்கப்பட்ட நாள் 2 December 2010.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "Sri Sadasiva Brahmendral - Part II ...Contd". 2007-07-03. Archived from the original on 15 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 2 December 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Autobiography of a Yogi by Parahamsa Yogananda". Archived from the original on 23 ஜூன் 2012. பார்க்கப்பட்ட நாள் 20 June 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Devi R, Priya (2007-07-03). "Sri Sadasiva Brahmendral - Part II". Archived from the original on 9 மார்ச் 2009. பார்க்கப்பட்ட நாள் 2 December 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Sadasiva Brahmendra: Perhaps two of the greatest mystics of India belong to the Tamil region". பார்க்கப்பட்ட நாள் 27 July 2012.
- ↑ http://ananthablahblah.wordpress.com/tag/pudukottai/
- ↑ http://newindianexpress.com/magazine/article1306352.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-07-25. பார்க்கப்பட்ட நாள் 2015-12-06.
- ↑ http://vayusutha.in/vs4/temple30.html
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-07. பார்க்கப்பட்ட நாள் 2015-12-06.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-07-20. பார்க்கப்பட்ட நாள் 2015-12-06.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ http://columbuscarnatic.org/2011/10/sadasiva-brahmendra/[தொடர்பிழந்த இணைப்பு]