ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீதர வெங்கடேச தீட்சிதர் (Sridhara Venkatesa Dikshitar ) (13-8-1635–1720), அய்யாவாள் என பிரபலமாக மக்களால் அழைக்கப்படுவார். இவர் தஞ்சாவூர் மராத்தியப் அரசிற்கு உட்பட்ட திருவிடைமருதூர் என்ற ஊருக்கு அருகில் உள்ள திருவிசைநல்லூர் என்ற கிராமத்தில் பிறந்தவர். சிறந்த இந்து சமய மெய்யிலாரும், கர்நாடக இசை வல்லுனரும் ஆவார். இவர் போதேந்திர சரசுவதி சுவாமிகள் மற்றும் சதாசிவ பிரமேந்திரர் சுவாமிகளின் சமகாலத்தில் வாழ்ந்தவர். சிறந்த சிவபக்தர்.[1]

நிகழ்வுகள்[தொகு]

ஒரு சமயம் ஸ்ரீதர அய்யாவாள் ஒரு தாழ்த்தப்பட்டவருக்கு உணவு வழங்கியதைக் கண்டித்து, கங்கையில் நீராடினால் மட்டுமே, மீண்டும் சமூகத்தில் சேர்ப்போம் என இவரது உறவினர்கள் கூறியதால், வீட்டின் கிணற்றடிக்குச் சென்று கங்கையை குறித்து கங்காஷ்டகம் எனும் தோத்திரத்தை மனமுருகப் பாடினார். பாடிமுடித்தவுடன், கிணற்றிலிருந்து கங்கை நீர் பொங்கி வழிந்து, திருவிடைமருதூர் வீதி முழுவதும் வெள்ளமாய்ப் பாய்ந்தது. ஸ்ரீதர அய்யாவாளின் மேன்மை உணர்ந்த அந்தணர்கள் மன்னிப்பு கேட்டனர். ஸ்ரீதர அய்யாவாள் வாழ்ந்த இல்லக் கிணற்றில் இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று நீர் பொங்கி வருவதைக் காணலாம்[சான்று தேவை].

படைப்புகள்[தொகு]

படைத்த பக்தி நூல்கள்

  1. ஆக்யா சஷ்டி
  2. கிருஷ்ண துவாதச மஞ்சரி
  3. தோத்திர பத்தாதி
  4. கங்காஷ்டகம்
  5. சிவபக்த இலக்கணம்
  6. தயாசதகம்
  7. சிவபக்தி
  8. கல்பலதிகா

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஸ்ரீ ஸ்ரீதர வெங்கடேச அய்யாவாள் வரலாறு
  • R. Krishnamurthy (1979). "Sreedhara Venkatesa Ayyaval". The Saints of the Cauvery Delta. Concept Publishing Company. pp. 38–48.