சதாசிவ திரிபாதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதாசிவ திரிபாதி
Sadashiva Tripathy
ସଦାଶିବ ତ୍ରିପାଠୀ
ஒடிசாவின் 5 ஆவது முதலமைச்சர்
பதவியில்
21 பிப்ரவரி 1965 – 8 மார்ச்சு 1967
முன்னையவர்பைரன் மித்ரா
பின்னவர்ராசேந்திர நாரயண் சிங் தியோ
தொகுதிஉமர்கோட்டு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1910-04-21)21 ஏப்ரல் 1910
நபரங்குபூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு9 செப்டம்பர் 1980(1980-09-09) (அகவை 70)
கட்டக், ஒடிசா, இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்திலோத்தமா திரிபாதி
பிள்ளைகள்3 மகன்கள்
வாழிடம்நபரங்குபூர் (ஒடிசா)
தொழில்அரசியல்வாதி

சதாசிவ திரிபாதி (Sadashiva Tripathy) இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் தலைவர்களில் ஒருவரான இவர் 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி முதல் 1967 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 8 ஆம் தேதி வரை ஒடிசா[1] மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தார்.[2]

தொடக்கக்காலம்[தொகு]

1910 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் தேதியன்று ஒடிசா மாநிலத்தின் நபரங்குபூர் நகரில் ஒரு நிலபிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தார். ஏராளமான நிலத்திற்குச் சொந்தக்காரரான இவர் இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்றார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

சதாசிவ திரிபாதி இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக இருந்தார். 1951, 1957, 1961. 1967 ஆம் ஆண்டுகளில் தொடர்ந்து நான்கு முறை ஒடிசா மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நீண்ட காலம் இவர் வருவாய்த் துறை அமைச்சராக பணிபுரிந்தார். ஒடிசாவின் முதல்வராக இவர் இருந்த காலத்தில் அங்கு நிலச் சீர்திருத்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தனது மூன்று மகன்களுக்கும் தலா 22 ஏக்கர் நிலத்தை பிரித்துக் கொடுத்துவிட்டு மீதமுள்ள நிலத்தை அரசாங்கத்திற்கு கொடையளித்தார். இவர் தலைமையிலான இந்திய தேசிய காங்கிரசு கட்சி 1967 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தது. ஒடிசா சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக 1967 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18 முதல் 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 வரை பணியாற்றினார்.

இறுதி நாட்கள்[தொகு]

தனது வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இவர் குறைந்த நடுத்தர பிரிவு வாழ்க்கையை கடைபிடித்தார். அந்த நேரத்தில் கடுமையாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். மாநில அரசு திரிபாதிக்கு ஐந்து மாதங்கள் சிகிச்சை அளித்தது. சிகிச்சை பலனின்றி இவர் 1980 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 அன்று இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Rabindra Kumar Sethy (2003). Political Crisis and President's Rule in an Indian State. APH Publishing. பக். 138–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7648-463-3. https://books.google.com/books?id=-2kJusgGxiQC&pg=PA138. பார்த்த நாள்: 25 May 2018. 
  2. "Bio-Data of Chief Ministers of Orissa" (PDF). Orissa Reference Manual - 2004. p. 192. பார்க்கப்பட்ட நாள் 22 May 2010.
முன்னர்
பைரேன் மித்ரா
ஒடிசா முதலமைச்சர்
21 பிப்ரவரி 1965-8 மார்ச் 1967
பின்னர்
இராஜேந்திர நாராயண் சிங் தியோ
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதாசிவ_திரிபாதி&oldid=3613962" இலிருந்து மீள்விக்கப்பட்டது