கிரிதர் கமாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரிதர் கமாங்
ଗିରିଧର ଗମାଙ୍ଗ
Giridhar-Gamang.jpg
13வது ஒடிசா முதலமைச்சர்
பதவியில்
17 பிப்ரவரி 1999 – 6 திசம்பர் 1999
ஆளுநர் யாக்யா தத் சர்மா
முன்னவர் ஜான்கி பல்லாப் பட்நாயக்
பின்வந்தவர் ஏமானந்தா பிசுவால்
தொகுதி லட்சுமிபூர்
நாடாளுமன்ற உறுப்பினர், 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 14வது நாடாளுமன்றம்
பதவியில்
2004–2009
முன்னவர் ஹேமா கமாங்
பின்வந்தவர் செயராம் பாங்கி
தொகுதி கோரபுட் நாடாளுமன்றத் தொகுதி
பதவியில்
1972–1999
முன்னவர் பாகீரதி கமாங்
பின்வந்தவர் ஹேமா கமாங்
தனிநபர் தகவல்
பிறப்பு 8 ஏப்ரல் 1943 (1943-04-08) (அகவை 79)
திப்ரிசிங்கி கிராமம், ராயகடா மாவட்டம், ஒரிசா மாகாணம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ஹேமா கமாங்
பிள்ளைகள் 2 மகன்கள் & 1 மகள்
இருப்பிடம் ராயகடா, ஒடிசா
As of 22 சூன், 2013
Source: [1]

கிரிதர் கமாங் (Giridhar Gamang)(பிறப்பு 8 ஏப்ரல் 1943) என்பவர் இந்திய தேசிய காங்கிரசின் முன்னாள் தலைவர்[1] மற்றும் ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் ஆவார். இவர் 2015-ல் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இவர் ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் உள்ள திபிரிசிங்கி கிராமத்தில் பிறந்தார். 1972ல், கோராபுட்டில் இருந்து 5வது மக்களவைக்கு முதல்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, 1977, 1980, 1984, 1989, 1991, 1996, 1998 மற்றும் 2004 ஆகிய ஆண்டுகளில் மக்களவைக்கு மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இவர் 17 பிப்ரவரி 1999 முதல் 6 திசம்பர் 1999 வரை ஒடிசாவின் முதலமைச்சராகவும் இருந்துள்ளார்.[2][3]

இவரது மனைவி ஹேமா கமாங் ஆவார். கிர்தர் கமாங் ஒடிசாவின் முதலமைச்சராக இருந்தபோது, ஹேமா கமாங், 1999ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியாவின் 13வது மக்களவைக்கு நடந்த தேர்தலில் கோராபுட் தொகுதியிலிருந்து வெற்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1998ஆம் ஆண்டில், கமாங் 12வது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, ஒடிசாவின் முதல்வரானார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது. கிரிதர் காங்கிரசு கட்சியினைச் சேர்ந்தவர் என்பதால் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க நாடாளுமன்றத்திற்குச் சென்றார். (இவர் முதல்வர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஆகிய ஒன்றிலிருந்து விலக வேண்டியிருந்தது, இருப்பினும் 6 மாதங்களுக்குள் சட்டமன்ற உறுப்பினர் ஆகலாம்). பாஜக அரசு 1 வாக்கு வித்தியாசத்தில் (269–270) அதிகாரத்தை இழந்தது. மேலும் கிரிதர் வாக்களிக்காமலிருந்திருந்தால், சபாநாயகர் ஜி. எம். சி. பாலயோகி தனது வாக்கைப் பயன்படுத்தி ஆட்சியைக் காப்பாற்றியிருப்பார் என்று பரவலாக நம்பப்படுகிறது. அரசாங்கத்தின் வீழ்ச்சி காரணமாக நாடு மே 1999-ல் மற்றொரு பொதுத் தேர்தலை உடனடியாக சந்திக்க நேர்ந்தது.[4]

பின்னர் 2009 தேர்தலில் கோராபுட் மக்களவைத் தொகுதியில்பிஜு ஜனதா தளத்தின் செயராம் பாங்கியிடம் முதல்முறையாகத் தோல்வியினைச் சந்தித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "BJP to Hold Surveys Across UP Before Finalising CM Face". 16 September 2018 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Veteran Congress leader Giridhar Gamang quits party". Hindustan Times. 30 May 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-05-30 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Former Odisha CM Giridhar Gamang quits Congress - The Economic Times". 2015-05-30 அன்று பார்க்கப்பட்டது.
  4. Barik, Satyasundar (30 May 2015). "Former Odisha CM Giridhar Gamang resigns from Congress" (in en). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. http://www.thehindu.com/news/national/former-odisha-cm-giridhar-gamang-resigns-from-congress/article7263826.ece. 
முன்னர்
ஜானகி பல்லப் பட்நாயக்
ஒடிசா முதலமைச்சர்
17 பிப்ரவரி 1999 - 6 திசம்பர் 1999
பின்னர்
ஏமானந்தா பிசுவால்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரிதர்_கமாங்&oldid=3420753" இருந்து மீள்விக்கப்பட்டது