ஜானகி பல்லப் பட்நாயக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜானகி பல்லாம் பட்நாயக்
ଜାନକୀ ବଲ୍ଲଭ ପଟ୍ଟନାୟକ
அசாம் ஆளுநர்
பதவியில்
11 திசம்பர் 2009 – 10 திசம்பர் 2014
முதலமைச்சர்தருண் கோகய்
முன்னையவர்சையத் சிப்தே ராசி
பின்னவர்பத்மநாபா ஆச்சாரியா
11வது ஒடிசா முதலமைச்சர்
பதவியில்
15 மார்ச் 1995 – 17 பிப்ரவரி 1999
ஆளுநர்பி. சத்ய நாராயண் ரெட்டி
கோபால இராமானுஜம்
கே. வி. ரகுநாத ரெட்டி
சக்ரவர்த்தி ரங்கராஜன்
முன்னையவர்பிஜு பட்நாயக்
பின்னவர்கிரிதர் கமாங்
பதவியில்
9 ஜூன் 1980 – 7 திசம்பர் 1989
ஆளுநர்செ. மு. பூஞ்சா
எஸ். கே. ராய் (பொறுப்பு)
ரங்கநாத் மிஸ்ரா (பொறுப்பு)
பிசாம்பர் நாத் பாண்டே
சாயித் நூருல் ஹாசன்
முன்னையவர்நீலமணி ரௌத்ரே
பின்னவர்ஏமானந்தா பிசுவால்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1927-01-03)3 சனவரி 1927
இராமேசுவர், பூரி மாவட்டம்
இறப்பு21 ஏப்ரல் 2015(2015-04-21) (அகவை 88)
திருப்பதி, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்ஜெயந்தி பட்நாயக்
முன்னாள் கல்லூரிஉத்கல் பல்கலைக்கழகம்,
பனாரசு இந்து பல்கலைக்கழகம்
இணையத்தளம்Official Website

ஜானகி பல்லப் பட்நாயக் (Janaki Ballabh Patnaik)(3 ஜனவரி 1927 - 21 ஏப்ரல் 2015) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அசாமின் முன்னாள் ஆளுநரும் ஆவார்.

இளமை[தொகு]

ஒடிசாவில் உள்ள குர்தா உயர்நிலைப் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த பிறகு பட்நாயக், 1947-ல் உத்கல் பல்கலைக்கழகத்தில் சமசுகிருதத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1949-ல் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1950-ல், இவர் காங்கிரசின் இளைஞர் பிரிவின் ஒடிசா மாநிலப் பிரிவின் தலைவராக ஆனார். 1980-ல் மத்திய சுற்றுலா, உள்நாட்டு விமான போக்குவரத்து மற்றும் தொழிலாளர் துறை அமைச்சரானார். புதிய ஜெகநாத் சதக் (பூரி மாவட்டத்தின் சந்தன்பூர் முதல் நாயகர் மாவட்டத்தின் சரங்குல் வரை) நிர்மாணம் செய்ததும், ஒடிசாவின் போக்குவரத்து மற்றும் சுற்றுலாவிற்கு இவர் செய்த ஆற்றிய பணிகள் இவரது முக்கிய பங்களிப்புகளாகும்.

முதல்வர் & ஆளுநர்பணி[தொகு]

இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவர்களுள் ஒருவரான இவர், ஒடிசாவின் முதலமைச்சராக 1980 முதல் 1989 வரையிலும், மீண்டும் 1995 முதல் 1999 வரையிலும் பணியாற்றினார். நவீன் பட்நாயக்கிற்கு முன் அதிக காலம் முதல்வர் பதவியை வகித்தவரும் இவரே ஆவார்.

பட்நாயக் 2009 முதல் 2014 வரை அசாமின் ஆளுநராக இருந்தவரும் ஆவார்.[1]

சர்ச்சை[தொகு]

பட்நாயக அஞ்சனா மிசுரா பலாத்கார வழக்கில் தொடர்புடையவர் என்ற சர்ச்சையில் சிக்கியவர் ஆவார்.[2][3]

இறப்பு[தொகு]

கோர்தாவில் உள்ள ஜேபி பட்நாயக் நினைவு பூங்காவில் ஜானகி பட்நாயக்கின் சிலை.

இவர் 21 ஏப்ரல் 2015 செவ்வாய் அன்று தனது 88வது வயதில் ஆந்திராவில் உள்ள திருப்பதியில் காலமானார். ஏப்ரல் 20, 2015 (திங்கட்கிழமை) அன்று, இவர் வேந்தராக இருந்த தேசிய சமசுகிருந்தப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தார். அப்போது திருமலையில் உள்ள வெங்கடாசலபதி கோயிலுக்கும் சென்றார்.[4][5][1] பின்னர் இரவில், கடுமையான நெஞ்சுவலியால் ஸ்ரீவெங்கடேசுவரா மருத்துவ அறிவியல் கழகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இங்கு இவர் சுமார் 3:00 மணியளவில் இறந்தார்.

மொழிப்பெயர்ப்பு[தொகு]

பட்நாயக், சமசுகிருத-ஒடியா அறிஞராக இருந்ததால், மகாபாரதம், இராமாயணம் மற்றும் பகவத் கீதையை தனது தாய்மொழியில் மொழிபெயர்த்த பெருமையினைப் பெறுகின்றார்.[6]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜானகி_பல்லப்_பட்நாயக்&oldid=3420752" இலிருந்து மீள்விக்கப்பட்டது