இராஜேந்திர நாராயண் சிங் தியோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முன்னாள் மகராஜா
இராஜேந்திர நாராயண் சிங் தியோ
ରାଜେନ୍ଦ୍ର ନାରାୟଣ ସିଂହଦେଓ
6ஆவது ஒரிசா முதலமைச்சர்
பதவியில்
8 மார்ச் 1967 – 9 சனவரி 1971
முன்னவர் சதாசிவ திரிபாதி
பின்வந்தவர் பிசுவாநாத் தாசு
தனிநபர் தகவல்
பிறப்பு மார்ச்சு 31, 1912(1912-03-31)
பலாங்கீர், மத்திய மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 23 பெப்ரவரி 1975(1975-02-23) (அகவை 62)
அரசியல் கட்சி சுதந்திராக் கட்சி
பிற அரசியல்
சார்புகள்
அகில இந்திய கணதந்திர பரிசத்
வாழ்க்கை துணைவர்(கள்) கைலாசு குமாரி தேபி
பிள்ளைகள் 2 மகன்கள் (ராஜ் ராஜ் சிங் தியோ,
அனாங்கா உதயா சிங் தியோ)
& 4 மகள்கள்
படித்த கல்வி நிறுவனங்கள் மாயோ கல்லூரி,
தூய கொலம்பியா கல்லூரி
தொழில் அரசியல்வாதி

மகாராஜா சர் இராஜேந்திர நாராயண் சிங் தியோ கேசிஐஇ (Rajendra Narayan Singh Deo)(31 மார்ச் 1912 - 23 பிப்ரவரி 1975) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் 1947-ல் இந்தியச் சுதந்திரத்திற்கு முன்பு ஒடிசாவில் உள்ள பாட்னா மன்னர் அரசின் கடைசி ஆட்சியாளர் ஆவார். இவர் 1950 முதல் 1962 வரை கணதந்திர பரிஷத் அரசியல் கட்சியின் தலைவராகவும், 1962 இல் கணதந்திர பரிசத்துடன் இணைந்த பிறகு சுதந்திராக் கட்சியின் ஒடிசா மாநிலத் தலைவராகவும் இருந்தார். 1967[1] முதல் 1971 வரை ஒரிசாவின் முதலமைச்சராக இருந்தார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

ராஜேந்திர நாராயண் சிங் தியோ இளமையில்.

ராஜேந்திர நாராயண் சிங் தியோ, செரைகேலா மன்னர் அரசின் ஆட்சியாளரான ராஜா ஆதித்ய பிரதாப் சிங் மற்றும் ராணி பத்மினி குமாரி தேவிக்கு மகனாகப் பிறந்தவர். இவரை பாட்னா மாநிலத்தின் மகாராஜா பிருத்விராஜ் சிங் தியோ தத்தெடுத்தார். இவர் அஜ்மீரில் உள்ள மாயோ கல்லூரியிலும், ஹசாரிபாக்கில் உள்ள தூய கொலம்பியா கல்லூரியிலும் படித்தார்.[1] இவர் 1924-ல் பாட்னா மாநிலத்தின் மகாராஜாவானார். 1933-ல் முழு அதிகாரங்களையும் ஏற்றுக்கொண்டார். 1946 புத்தாண்டு கௌரவப் பட்டியலில் இவர் நைட் கமாண்டர் ஆப் தி ஆர்டர் ஆப் தி இந்தியன் எம்பயர் ஆக நியமிக்கப்பட்டார். 1948-ல், பாட்னா மன்னர் அரசு இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.

அரசியல் வாழ்க்கை[தொகு]

1951-ல், இராஜேந்திர நாராயண் சிங் தியோ, ஒடிசாவில் உள்ள கலஹண்டி போலங்கிர் தொகுதியிலிருந்து முதலாவது மக்களவைக்கு கணதந்திர பரிஷத் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

1957ஆம் ஆண்டில், இவர் திட்லாகர் தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3] மேலும் ஒடிசா சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆனார். சிறுபான்மை காங்கிரஸ் அரசாங்கம் வீழ்ச்சியடைந்த பிறகு, 22 மே 1959 அன்று காங்கிரசுடன் கணதந்திர பரிஷத் கூட்டணி ஆட்சியை அமைத்தார். இந்த அரசில் இராஜேந்திர நாராயண் சிங் தியோ நிதி அமைச்சரானார். 21 பிப்ரவரி 1961 அன்று கூட்டணி ஆட்சி கவிழ்ந்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 1961-ல், இவர் காந்தபாஞ்சி தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

1967-ல், இவர் போலங்கிர் தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 8 மார்ச் 1967-ல் ஒடிசாவின் முதலமைச்சரானார். சுவதந்த்ரா கட்சி மற்றும் ஹரேக்ருஷ்னா மகதாப்பின் ஒரிசா ஜன காங்கிரசினை இணைந்து அமைத்த கூட்டணி அரசாங்கத்திற்கு இவர் தலைமை தாங்கினார். இவர் 9 ஜனவரி 1971 அன்று பதவி விலகினார். பின்னர் 11 ஜனவரி 1971 அன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.[5] 1971 மற்றும் 1974ஆம் ஆண்டுகளில், இவர் இதே தொகுதியிலிருந்து ஒடிசா சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

முன்னர்
சதாசிவ திரிபாதி
ஒடிசா முதலமைச்சர்
8 மார்ச் 1967- 9 சனவரி 1971
பின்னர்
பிசுவநாத் தாசு