கோலாகாந்தசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோலாகாந்தசு
Holacanthus ciliaris 2.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
பிரிவு: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: பெர்சிபார்மிசு
குடும்பம்: போமாகேந்திடே
பேரினம்: கோலாகாந்தசு
லேசிபெடி, 1802
மாதிரி இனம்
'கேடோடான் டிரைகலர்
பிளாச், 1795[1]
சிற்றினம்

8, உரையினைப் பார்க்கவும்.

வேறு பெயர்கள் [2]
  • ஏஞ்செலிக்திசு ஜோர்டன் & எவர்மான், 1896
  • போமாகேந்தோடெசு கில், 1862

கோலாகாந்தசு (Holacanthus) என்பது கடல் தேவதை மீன்களின் பேரினமாகும் (குடும்பம் போமாகேந்திடே). இந்த பேரினத்தின் எட்டு சிற்றினங்கள் தீப்பாறை மற்றும் பவளத் தீவுகளுக்கு அருகில் ஏராளமாகக் காணப்படுகின்றன. சில மீன்கள் உணவு மதிப்புடையதாகவும், சில நீர்வாழ் உயிரினங்கள் காட்சிச்சாலை வணிகத்திலும் பயன்படுகின்றன. இவை அனைத்தும் பிரகாசமான நிறத்தில் உள்ளன.

சிற்றினங்கள்[தொகு]

பின்வரும் சிற்றினங்கள் கோலாகாந்தசு பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன:[3]

படம் அறிவியல் பெயர் பொதுப் பெயர் பரவல்
Holacanthus africanus.jpg கோலாகாந்தசு ஆப்பிரிக்கானசு, கேடெனட், 1951 . கினிய தேவதை மீன் , வெப்பமண்டல மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரை, கிழக்கு அத்திலாந்திக் பெருங்கடலின் வெப்பமான பகுதிகளில்.
Holacanthus bermudensis, NOAA.jpg கோலாகாந்தசு பெர்மூடென்சிசு குட்டீ, 1876 பெர்முடா நீல தேவதை மீன் , மேற்கு அத்திலாந்திக் வட கரோலினாவிலிருந்து பெர்முடா வரை, பகாமாசு மற்றும் புளோரிடா வரை மெக்சிகோ வளைகுடா வரை, மேலும் மெக்சிகோவின் யுகடான் வரை.
Holacanthus ciliaris 10.jpg கோலாகாந்தசு சிலியாரிசு (லின்னேயஸ், 1758 ) இராணி தேவதைமீன் புளோரிடா கீஸ், மேலும் பகாமாசு மற்றும் மெக்சிகோ வளைகுடா
Clarion angelfish (Holacanthus clarionensis) (19185438555).jpg கோலாகாந்தசு கிளாரியோனென்சிசு கில்பர்ட், 1891 . கிளாரியன் தேவதைமீன் மெக்சிகோவின் பசிபிக் கடற்கரை
Holacanthus limbaughi.jpg கோலாகாந்தசு லிம்பாகி பால்ட்வின், 1963 . கிளிப்பர்டன் தேவதைமீன், பசிபிக் - கிழக்கு மத்திய
Holacanthus passer 1.jpg கோலாகாந்தசு பாசர் வாலென்சியென்சு,1846 . இராச தேவதைமீன் கிழக்கு பசிபிக் பெருங்கடல் பெருவின் வடக்கிலிருந்து கலிபோர்னியா வளைகுடா வரை, மேற்கு கலாபகசு வரையிலான கடல் தீவுகள் உட்பட,
Holacanthus tricolor 1.jpg கோலாகாந்தசு டிரைகலர் (பிளாச், 1795) . பாறை அழகு தேவதை மீன் , வெப்பமண்டல மேற்கு அட்லாண்டிக் பெருங்கடல் முதல் மெக்சிகோவின் வடக்கு வளைகுடா வரை

மேற்கோள்கள்[தொகு]

  1. Eschmeyer, William N.; Fricke, Ron & van der Laan, Richard (eds.). "Species in the genus Holacanthus". Catalog of Fishes. California Academy of Sciences. Retrieved 20 February 2021.
  2. Eschmeyer, William N.; Fricke, Ron & van der Laan, Richard (eds.). "Genera in the family Pomacanthidae". Catalog of Fishes. California Academy of Sciences. Retrieved 25 February 2021
  3. Froese, Rainer, and Daniel Pauly, eds. (2006). Species of Holacanthus in FishBase. April 2006 version.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோலாகாந்தசு&oldid=3311218" இருந்து மீள்விக்கப்பட்டது