இராணி தேவதைமீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராணி தேவதை மீன் (queen angel fish) என்பது தேவதை மீன் இனத்தை சேர்ந்த கடல் வாழ் உயிரினம் ஆகும். பொதுவாக மேற்கு அத்திலாந்திக் கடலில் வெப்பமான கடலடிப் பாறைகளின் அருகில் வசிக்கின்றன. நீல தேவதை மீன், தங்க தேவதை மீன், மஞ்சள் தேவதை மீன் என பல வகையான தேவதை மீன்கள் காணப்படுகின்றன.[1] நீல தேவதை மீன்களும் இராணி தேவதை மீன்களும் ஒத்த தோற்றத்தை கொண்டிருந்தாலும் வெவ்வேறு வகையான இனங்களை சேர்ந்தவை.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Holacanthus|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
இராணி தேவதைமீன்
Holacanthus ciliaris 10.jpg
Adult Queen angelfish
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Holacanthus
இனம்: Template:Taxonomy/HolacanthusH. ciliaris
இருசொற் பெயரீடு
Holacanthus ciliaris
(Linnaeus, 1758)

உருவ அமைப்பு[தொகு]

இராணி தேவதை மீன்கள் பவளப் பாறையில் காணப்படும் மீன் வகைகளில் மிகவும் வண்ணமயமானவை. முதிர் பருவத்தை அடைந்த இராணி தேவதை மீனின் உடல் நீல நிறம் சார்ந்த நீல-பச்சை நிறமாகவும் அதன் செதில்கள் மஞ்சள் நிறத்துடனும் காணப்படும். உதடுகள், மார்புச் செட்டைகள் மற்றும் வயிற்றுப் புற செட்டைகள் மஞ்சள் நிறத்திலும், முதுகுப் புறச் செட்டை, குதச் செட்டைகளின் விளிம்புகள் கடும் நீல நிறத்திலும் காணப்படும். இவற்றின் செவுள்முட்கள் நீல நிற அடையாளத்தினை கொண்டிருப்பதாக அறியப்படுகிறது. இவை 15 ஆண்டுகள் வரை வாழும். மேலும் 3.5 பவுன்ட் (ஏறத்தாழ 1.5 கிலோ கிராம்) எடையிலும், 45 செ.மீ (17 அங்குலங்கள்) நீளம் வரையிலும் வளரக் கூடியவை.[2]

உணவு முறை[தொகு]

இராணி தேவதை மீன்களின் முதன்மையான உணவு கடற்பஞ்சுகள் ஆகும். இவை டியுனிகேட்கள், நுங்குமீன்கள், பிளாந்தன்கள், பாசிகள் என்பவற்றையும் உட்கொள்கின்றன. மீன் குஞ்சுகள் பெரிய மீன்களில் வாழும் ஒட்டுண்ணிகளை உண்ணும். மீன் தொட்டிகளில் வளர்க்கப்படும் இவ்வின மீன்களுக்கு மாமிச, பாசி வகையான உணவுகளை உண்ணக் கொடுக்கலாம்.

வாழிடம்[தொகு]

இராணி தேவதை மீன்கள் பொதுவாக மேற்கு அத்திலாந்திக், புளோரிடா (அமெரிக்கா) மற்றும் மெக்சிகோ வளைகுடா முதல் பிரேசில் வரையிலும், கரீபியன், அண்டில்லஸ், தென் அமெரிக்க கடற்கரை மற்றும் கிழக்கு மத்திய அத்திலாந்திக் பகுதிகளில் 1 - 70 மீற்றர் ஆழத்தில் வாழ்வதாக அறியப்படுகின்றன. பெர்முடா முக்கோண பகுதிகளில் அரிதாக காணப்படுகின்றன. பவளப் பாறைகளிலும், கடலடிப் பாறைகளிலும் வசிக்கின்றன. இவை தனியாக அல்லது பெரும்பாலும் சோடிகளாக காணப்படும்.[1]

இனப்பெருக்கம்[தொகு]

முதிர் பருவத்தை அடைந்த மீன்கள் ஆண்டு முழுவதும் சோடிகளாக காணப்படும். இவற்றில் புறச் சூழலுக்கு இன விருத்தியணுக்களை விடுவிப்பதன் மூலம் புறக் கருக்கட்டல் நிகழ்கின்றது. இவை இனப் பெருக்க காலத்தின் போது ஒவ்வொரு மாலையும் 25 முதல் 75 ஆயிரம் முட்டைகள் வீதம் ஏறத்தாழ 10 மில்லியன் முட்டைகளை வெளியிடுவதாக அறியப்படுகின்றது. முட்டைகள் ஒளி ஊடுபுகவிடக் கூடியவை. முட்டையிட்டு 15 - 20 மணி நேரங்களில் குடம்பிகள் வெளிப்படும். குடம்பிகள் பிளாந்தன்களை உணவாக உட்கொள்ளும். 3-4 வாரங்களுக்கு பின் 15-20 மில்லி மீற்றர் நீளம் வரையிலும் வளரக் கூடியவை.

மீன் தொட்டிகளில்[தொகு]

இராணி தேவதை மீன்களை முன் அனுபவமற்றவர்கள் மீன் தொட்டிகளில் வளர்ப்பது சிரமமாகும். 150 - 180 கலன்கள் கொள்ளளவு உடைய பெரிய அளவிலான தொட்டிகளிலயே வளர்க்க வேண்டுமென மீன்வள வல்லுனர்கள் பரிந்துரைக்கின்றனர். மேலும் இவை மற்ற தேவதை மீன்களை துன்புறுத்தக் கூடும்.

ஒட்டுண்ணிகள்[தொகு]

ஏனைய மீன்களைப் போலவே இராணி தேவதை மீன்களிலும் பல விதமான ஒட்டுண்ணிகள் வாழ்கின்றன. இவற்றின் செவுளில் மோனோ ஜினியன் மைக்ரோகோடைல் எனும் ஒட்டுண்ணிகள் காணப்படுகின்றன.

குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 Pyle, R., et al. 2010. In: IUCN 2012. IUCN Red List of Threatened Species. Version 2012.2. Downloaded on 03 June 2013.. "Holacanthus ciliaris".
  2. "Queen Angelfish | National Geographic" (en) (2010-11-11).

மேலதிக வாசிப்பு[தொகு]

  • Humann, P. and N. Deloach. ''Reef Fish Identification: Florida, Caribbean, Bahamas''. New World Publications Inc. Jacksonville. pp. 20–21.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Holacanthus ciliaris
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:


"https://ta.wikipedia.org/w/index.php?title=இராணி_தேவதைமீன்&oldid=2866553" இருந்து மீள்விக்கப்பட்டது