கொல்கத்தா பெரிய ஆலமரம்

ஆள்கூறுகள்: 22°33′39″N 88°17′12″E / 22.5608°N 88.2868°E / 22.5608; 88.2868
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொல்கத்தா பெரிய ஆலமரம்
The Great Banyan
பெரிய ஆலமரம்
வகைஆல மரம் ()
இடம்ஆச்சார்யா ஜகதீசு சந்திர போசு இந்தியத் தாவரவியல் தோட்டம், சிபுபூர், ஹவுரா
விதைக்கப்பட்டது1800 முன்னர்

கொல்கத்தா பெரிய ஆலமரம் (The Great Banyan) என்பது இந்தியாவின் கொல்கத்தாவிற்கு அருகிலுள்ள ஹவுராவின் ஷிப்பூர், ஆச்சார்யா ஜெகதீசு சந்திர போசு இந்தியத் தாவரவியல் பூங்காவில் உள்ள ஒரு ஆலமரமாகும் (பிகசு பெங்காலென்சிசு).[1] ஐந்து கண்டங்களில் தாவரங்களின் சேகரிக்கச் சென்றவர்களை விடப் பெரிய ஆலமரம் தோட்டத்திற்கு அதிக பார்வையாளர்கள் வந்துள்ளனர். இரண்டு சூறாவளிகளால் தாக்கப்பட்ட பிறகு இதன் முக்கிய தண்டு பூஞ்சைகளால் பாதிக்கப்பட்டது. 1925-ல் மரத்தின் முக்கிய தண்டு துண்டிக்கப்பட்டது. மீதமுள்ளவை பகுதியின் ஆரோக்கியத்தினை கருதிப் பாதிக்கப்பட்ட தண்டு துண்டிக்கப்பட்டது. சுமார் 330-மீட்டர்-long (1,080 அடி) சுற்றளவு கொண்ட சாலை ஒன்று இந்த மரத்தினைச் சுற்றி அமைக்கப்பட்டது. ஆனால் ஆலமரம் இதைத் தாண்டி பரவிக்கொண்டே இருக்கிறது.

பெரிய ஆலமரம்

இந்த ஆலமரம் குறித்த தகவல் 1989-ல் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் உலகின் மிகப்பெரிய மரமாகப் பதிவு செய்யப்பட்டது.[2]

தாவரவியல் வகைப்பாடு[தொகு]

தாவரவியல் ரீதியாக ஆல், பிகசு பெங்காலென்சிசு (Ficus benghalensis) என இருசொற் பெயரில் அழைக்கப்படுகிறது. மேலும் மொரேசி குடும்பத்தைச் சேர்ந்த இந்த மரம் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. ஆலம் பழம் சிறிய அத்திப்பழம் போன்றது. சிலர் இதனைச் சாப்பிடுகிறார்கள். இது அத்திப்பழத்தை விட இனிமையானது. ஆலமரம் சில சமயங்களில் கட்டிடங்களில் உள்ள சிறிய ஈரமான தூசி படிவுகளிலிருந்து வளரும். ஏனெனில் பறவைகள் இவற்றை உண்பதற்காக எடுத்துச் செல்கின்றன. பழம் சிவப்பு நிறமாகவும், பழுத்தவுடன் மென்மையாகவும் இருக்கும்.

வரலாறு மற்றும் விளக்கம்[தொகு]

முக்கிய தண்டு இருந்த இடத்தில் உள்ள நினைவுக் கல்தூண். இரண்டு புயல்களினால் சேதமடைவதற்கு முன்பு அசல் தண்டு 50' விட்டம் கொண்டது. 1925, மற்றும் மரத்தின் எஞ்சியவற்றைப் பாதுகாப்பதற்காக இத்தண்டு அகற்றப்பட வேண்டியிருந்தது.

பெரிய ஆலமரம் குறைந்தது 250 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது. மேலும் இது பல பயண புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்தது பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தியது எனத் தெரிகின்றது. ஆரம்பக்கால பயண எழுத்தாளர்கள் இதன் பெரிய அளவு மற்றும் வழக்கத்திற்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான வேர்க் கிளைகள் காரணமாக இதனைக் குறிப்பிட்டுள்ளனர். இது 1864, 1867 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் இதன் முக்கிய கிளைகள் சில உடைந்தபோது மூன்று பெரிய சூறாவளிகளிலிருந்து தப்பியது. கிளைகளிலிருந்து வளர்ந்து செங்குத்தாகத் தரையில் ஓடும் ஏராளமான காற்று வேர்களைக் கொண்டு, பெரிய ஆலமரம் ஒரு தனி மரமாக இருப்பதை விட அடர்ந்த காடு போல் தோன்றுகிறது.

மரம் இதன் முக்கிய தண்டு இல்லாமல் வாழ்கிறது. முதன்மைத் தண்டு 1925-ல் சிதைந்ததால் அகற்றப்பட்டது. மரத்தின் மையத்திற்கு அருகில் இறந்த தண்டுக்கு ஒரு நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மரத்தின் தடிமனான வேர்கள் மற்றும் கிளைகளின் அடர்த்தியான உள் சிக்கலுக்குள் எப்போதாவது பயணிக்கும் பார்வையாளர்களால் முதன்மைப் பகுதியினை அணுக முடியாது. பார்வையாளர்கள் பொதுவாக மரத்தின் சுற்றளவுக்குப் பகுதிக்கு மட்டுமே செல்ல விரும்புகிறார்கள். மரத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பரப்பளவு சுமார் 18,918 சதுர மீட்டர் (சுமார் 1.89 ஹெக்டேர் அல்லது 4.67 ஏக்கர்) ஆகும். மரத்தின் தற்போதைய பரப்பளவு 486 மீ சுற்றளவு கொண்டது. மற்றும் மிக உயர்ந்த கிளை 24.5 மீ உயரமுடையது. இது தற்போது 3772 வான்வழி வேர்களைக் கொண்டுள்ளது. இதன் உயரம் ஏறக்குறைய இந்தியாவின் நுழைவாயில் (மும்பை) உயரத்திற்குச் சமமானதாகும்.

20 மே, 2020 அன்று ஆம்பன் புயல் மேற்கு வங்கத்தைக் கடந்து சென்றபோது மரம் பல முட்டு வேர்களை இழந்தது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Sambamurty 2005, ப. 206.
  2. Sayeed, Vikhar Ahmed. "Arboreal Wonder". Frontline. பார்க்கப்பட்ட நாள் 5 June 2012.
  3. "Winds fell old giants at Botanic Garden, Horti Society & Lake". The Times of India (in ஆங்கிலம்).
  4. "Storm strikes 270-year-old Great Banyan Tree". www.telegraphindia.com (in ஆங்கிலம்).

மேலும் பார்க்கவும்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்கத்தா_பெரிய_ஆலமரம்&oldid=3788678" இலிருந்து மீள்விக்கப்பட்டது