திம்மம்மா ஆலமரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திம்மம்மா ஆலமரம்
Thimmamma Marrimanu
Thimmamma-marrimanu 1.jpg
வகைஆல் ()
இடம்இந்தியா, ஆந்திரப் பிரதேசம், அனந்தபூர்

திம்மம்மா ஆலமரம் அல்லது ஆள்கூறுகள்: 14°1′40.80″N 78°19′30.37″E / 14.0280000°N 78.3251028°E / 14.0280000; 78.3251028 திம்மமாமா மரிமானு ( தெலுங்கு : తిమ్మమ్మ మర్రిమాను, ) என்பது ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள கதிரி நகரில் இருந்து 25 கிலோமீட்டரில் தொலைவில் உள்ள ஒரு பெரிய ஆல மரமாகும். தெலுங்கு மொழியில், "மர்ரி என்பது ஆல் என்பதையும் மானு என்பது மரத்தையும் குறிக்கும் சொல்லாகும்.[1][2] இந்த மரத்தின் மேல் பரப்பானது 19,107 m2 (4.721 ஏக்கர்கள்) கொண்டுள்ளது.[3][4][5] இது 1989 ஆம் ஆண்டின் கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் உலகின் மிகப் பெரிய மரமாக பதிவு செய்யப்பட்டது.[3][6][7]

தொன்மம்[தொகு]

இந்த மரம் குறித்த தகவலாக கூறப்படுவது என்னவென்றால், செட்டிபலிஜா தம்பதியரான சென்னக்க வெங்கடப்பா, மங்கம்மா ஆகியோருக்கு கி.பி. 1394இல் திம்மம்மா என்ற ஒரு மகள் பிறந்தார். இவரை பால வீரைய்யா என்பவருக்குத் திருமணம் செய்துவைத்தனர். பாலவீரைய்யா 1434இல் இறந்தார். இதையடுத்து திம்மம்மா உடன்கட்டை ஏறினார் .[8][9] இவர் உடன்கட்டை ஏறிய இடத்தில் இந்த மரம் வளர்ந்துள்ளது என நம்பப்படுகிறது.[8] குறிப்பாக, சிதையின் வடகிழக்கு முனையில் இந்த மரம் வளர்ந்தது என்று நம்பப்படுகிறது.

சமய முக்கியத்துவம்[தொகு]

இந்த ஆலமரத்தின் அடியில் திம்மமாவுக்கு ஒரு சிறிய கோயில் உள்ளது. இங்கு வந்து தில்மாமாவை வணங்குகிற குழந்தை இல்லாத தம்பதியருக்கு அடுத்த ஆண்டே குழந்தை பிறக்கும் என்று அப்பகுதியில் வசிக்கும் மக்கள் உறுதியாக நம்புகின்றனர். சிவராத்திரி நாளில் இங்கு திம்மமாவுக்கு ஜத்ரா என்னும் விழா நடத்தப்படுகிறது. இதில் பலர் கலந்து கொள்கின்றனர்.[10]

சாதனைப் பதிவு[தொகு]

இந்த மரத்தை முதன் முதலில் கவனித்து, உலகின் கவனத்திற்கு கொண்டுவந்தவர் சத்யநாராயண ஐயர் என்பவராவார். கர்நாடகத்தின், பெஙுகளூரைச் சேர்ந்த ஒரு பத்திரிகையாளர், ஒளிப்படக் கலைஞராவார். இவரே பின்னர் கின்னஸ் உலக சாதனை பதிவில் இந்த மரத்தைப் பதிவுசெய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இவருடைய பெயரும் இந்த சாதனைப் புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.[சான்று தேவை]

திம்மம்மா மர்ரியாம்மா மரம் குறித்து பிபிசி தொடரான 'தி ட்ரீ ஸ்பிரிட்ஸ்' (29 ஆகஸ்ட் 2017) தெடரின் இரண்டாம் பாகத்தில் விவரிக்கப்பட்டது.[11]

குறிப்புகள்[தொகு]

 1. C. Sudhakar; R. Suguna Kumari (2008). Women and Forestry. The Associated Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-8429-081-3. https://books.google.com/books?id=IFomAQAAMAAJ. பார்த்த நாள்: 5 June 2012. 
 2. Lavanya Vemsani (31 October 2006). Hindu and Jain Mythology of Balarāma: Change and Continuity in an Early Indian Cult. Edwin Mellen Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-7734-5723-2. https://books.google.com/books?id=RXnXAAAAMAAJ. பார்த்த நாள்: 5 June 2012. 
 3. 3.0 3.1 Matthews, Peter; Dunkley McCarthy, Michelle; Young, Mark (CON) (October 1993). The Guinness Book of Records 1994. Facts on File. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8160-2645-6. https://books.google.com/books?id=YgJr2WoC9CkC. பார்த்த நாள்: 5 June 2012. 
 4. Confer "Banyan Trees". Backpacker-Backgammon. மூல முகவரியிலிருந்து 2012-07-10 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2012-07-10.
 5. Confer "Thimmamma Marrimanu". பார்த்த நாள் 2017-01-04.
 6. India Today. Living Media India Pvt. Ltd.. 1992. பக். 53. https://books.google.com/books?id=K2opAQAAIAAJ. பார்த்த நாள்: 5 June 2012. 
 7. Sayeed, Vikhar Ahmed. "Arboreal Wonder". Frontline. பார்த்த நாள் 5 June 2012.
 8. 8.0 8.1 ""Thimmamma Marri Maanu"".
 9. Various (2005). Tourist Guide to South India. Sura Books. பக். 295 et seq.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7478-175-8. https://books.google.com/books?id=ta6AD7MNFioC&pg=PA295. பார்த்த நாள்: 5 June 2012. 
 10. Various. Tourist Guide to Andhra Pradesh. Sura Books. பக். 44 et seq.. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7478-176-5. https://books.google.com/books?id=E4l78qG3TkAC&pg=PA44. பார்த்த நாள்: 5 June 2012. 
 11. http://www.bbc.co.uk/programmes/w3csvntf
"https://ta.wikipedia.org/w/index.php?title=திம்மம்மா_ஆலமரம்&oldid=3030361" இருந்து மீள்விக்கப்பட்டது