தொட்டா ஆலத மரா
தொட்டா ஆலத மரா | |
---|---|
![]() மரத்தினுடைய வேர் | |
வகை | ஆலமரம் (ஆல்) |
இடம் | கேட்டோஹள்ளி, பெங்களூரு, கருநாடகம், இந்தியா |
ஆள்கூறுகள் | 12°54′34″N 77°23′44″E / 12.90944°N 77.39556°E |
விதைக்கப்பட்டது | 17ம் நூற்றாண்டு |
தொட்டா ஆலத மரா என்னும் பெரிய ஆலமரம், 400 ஆண்டுகள் பழமையான ஆலமரமாகும். இது கருநாடகத்தின் பெங்களூருவில் உள்ள கேட்டோஹள்ளி என்ற கிராமத்தில் உள்ளது.[1] இந்த ஒற்றை மரம் சுமார் 3 ஏக்கர் (12,000 சதுர மீட்டர்) பரப்பளவில் அமைந்துள்ளது.
இம்மரத்தினுடைய முக்கியத்தண்டானது 2000-களில், ஏதோ ஒரு இயற்கை நோயினால் பாதிக்கப்பட்டு அழிந்துவிட்டது, தற்போது இதனுடைய கிளைகளைக்கொண்டு வாழ்ந்து வருகிறது.
சுற்றுலா[தொகு]
இப்பெரிய ஆலமரமானது பெங்களூரில் இருந்து 28 கிமீ தொலைவில் பெங்களூரு-மைசூரு நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது[1].மெஜஸ்டிக்கிலிருந்து, கெங்கேரி வரையிலும் பேருந்து வாயிலாக சென்றால், கெங்கேரியில் இருந்து தொட்ட ஆலட மராவிற்குப் பேருந்து வசதிகள் உள்ளன. கே. ஆர். மார்க்கெட்டிலிருந்து நேரடிப்பேருந்து வசதியும் உள்ளது.
படக்காட்சியகம்[தொகு]
-
ஆலமரத்தினடியில் விளையாடும் குரங்குகள்
-
ஆலமரத்தின் அருகாண்மையிலுள்ள குரங்கு
-
ஆலமரக்கிளையின் மீதுள்ள குரங்கு
இவற்றையும் பார்க்க[தொகு]
- சவந்துர்கா
- கனவா நீர்த்தேக்கம்
- இந்தியாவிலுள்ள ஆலமரங்கள்
- திப்பக்கொண்டஹள்ளி நீர்த்தேக்கம்
குறிப்புகள்[தொகு]
- ↑ 1.0 1.1 "10 trees may get heritage status in Karnataka". Business Line. 2010-08-05. http://www.thehindubusinessline.com/todays-paper/tp-economy/10-trees-may-get-heritage-status-in-karnataka/article1000482.ece?ref=archive. பார்த்த நாள்: 2013-08-22.