கெப்லர் (விண்கலம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கெப்லர் விண்கலம்

கெப்லர் (Kepler) என்பது வேறு விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற கோள்களை ஆராய்வதற்கென நாசா ஆய்வு நிறுவனத்தினால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஒரு விண்வெளித் தொலைநோக்கி விண்கலம் ஆகும்[1]. இதனுடன் பொருத்தப்பட்டிருக்கும் ஒளியளவியின் உதவியுடன், 3.5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100,000 விண்மீன்களின் ஒளிச்செறிவைக் கணக்கிடும். இதன் மூலம் விண்மீன் ஒன்றை அதன் கோள்கள் சுற்றிவரும் முறையை பார்த்து அறியலாம் எனக் கருதப்படுகிறது. ஜெர்மனியின் புகழ்பெற்ற வானியலாளர் ஜொகான்னஸ் கெப்லர் அவர்களின் நினைவாக இத்திட்டத்திற்கு கெப்லர் திட்டம் எனப் பெயர் வைக்கப்பட்டது[2].

கெப்லர் விண்கலம் 2009, மார்ச் 6 ஆம் நாள் கீழைத்தேய நேரத்தின் படி 22:49 மணிக்கு (மார்ச் 7, 03:49 UTC)[3] விண்ணுக்கு ஏவப்பட்டது.

கெப்லர் விண்வெளித் திட்டத்தின் முதல் ஆய்வு முடிவுகள் 2010, ஜனவரி 4 ஆம் நாள் அறிவிக்கப்பட்டன: முதல் ஆறுவார கால ஆய்வுகளின் படி முன்னர் எப்போது கண்டுபிடிக்கப்படாத ஐந்து புதிய புறக்கோள்களை கெப்லர் விண்கலம் கண்டுபிடித்திருக்கிறது. இவை அனைத்தும் தமது விண்மீன்களுக்கு மிகக் கிட்டவாகச் சுற்றி வருபவை. இவற்றில் ஒன்று ஏறத்தாழ நெப்டியூன் அளவிலும், ஏனையவை வியாழன் அளவிலும் உள்ளன[4]. இவற்றில் கெப்லர்-7பி இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட புறக்கோள்களில் மிகவும் அடர்த்தி குறைவானதாகும்[5].

2016 ஆம் ஆண்டு கணக்குப்படி இதுவரை 100 புதிய கிரகங்களை இது கண்டுபிடித்துள்ளது. இது அன்மையில் பழுதடைந்தபோதிலும் இதன் இரண்டாவது சுற்றில் கே2 மிஷன் (Second Light (K2)) மூலம் புதிய கிரகங்களை கண்டுபிடிக்க ஆரம்பித்தது குறிப்பிடட்தக்கது. இதன் அறுகில் கடந்து செல்லும் வெளிச்சத்தைக்கொண்டு வேறு வேறு கிரகங்களை இது கண்டுபிடிக்கிறது. இது 2013 மே மாதம் மீண்டும் பழுதடைந்த போதிலும் சோலார் ரேடியேசன் மூலம் தொலை நோக்கியை செயல்பட செய்யலாம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். மொத்தமாக 80 நாட்கள் கண்காணிப்பில் 60,000 நட்சதிரங்கள், 7,000 இடப்பெயர்வு சமிக்ஞைகள் போன்ற வற்றை இது கண்டுபிடித்துள்ளது. இதன் முடிவுகள் ஒரு சதவீதம் மட்டுமே தவறாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். [6] [7]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெப்லர்_(விண்கலம்)&oldid=1999170" இருந்து மீள்விக்கப்பட்டது