கேஏ வரிசை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கேஏ வரிசையின் (Ka band) அதிர்வெண் 26.5–40 GHz ஆகும்.[1] இதன் அலைநீளம் 0.75 சென்றிமீட்டர்கள் முதல் 1 சென்றிமீட்டருக்கும் சற்று அதிகம் வரை ஆகும். இது கே வரிசையின் ஒரு பகுதியாகும். கேஏ வரிசை என்பது கே வரிசையில் மேலே (K-above) என்பதாகும். இதில் 30/20 GHz செயற்கைக் கோள் தகவல் மேலேற்றத் (uplink) தொடர்பில் பயன்படுத்தப்படுகிறது.[2] ராணுவ விமானங்களிலும், மேலும் வாகனங்களில் வேகத்தை அளவிடவும் பயன்படுத்தப்படுகிறது.[3] வானியல் தொலைநோக்கிகளில் பெறப்பட்ட அலைகளை இந்த வரிசையில் தரவிறக்கம் (downlink) செய்கின்றனர். இதில் கே என்பது ஜெர்மானிய மொழியில் கர்ஸ் (kurz) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதற்கு குட்டை அல்லது கட்டை(short) என்று பொருள்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. R. Ludwig, P. Bretchko, RF Circuit Design, Theory and Applications, Prentice Hall NJ, 2000.
  2. http://www.tech-faq.com/ka-band.shtml
  3. http://hypertextbook.com/facts/2000/MaxLipkin.shtml
  4. http://www.itwissen.info/definition/lexikon/K-Band-K-band.html (german)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கேஏ_வரிசை&oldid=2746212" இருந்து மீள்விக்கப்பட்டது