டோன் விண்கலம்
ஓவியரின் கைவண்ணத்தில் டோன் விண்கலமும் வெஸ்டா (இடது) சிறுகோளும், செரசு குறுங்கோளும் (வலது) | |
இயக்குபவர் | நாசா |
---|---|
திட்ட வகை | இலக்கு அணுகல் / விண்சுற்றுக்கலன் |
அணுகிய விண்பொருள் | செவ்வாய் |
செயற்கைக்கோள் | வெஸ்டா, செரசு |
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள் | வெஸ்டா: சூலை 16, 2011, 06:00 UTC[1] செரசு: பெப்ரவரி 2015 |
ஏவப்பட்ட நாள் | 2007-09-27 11:34:00 UTC[2] (13 ஆண்டுகள், 4 மாதங்கள், 24 நாட்கள் ago) செரசு: பெப்ரவரி 2015 (திட்டம்) |
ஏவுகலம் | டெல்ட்டா II |
ஏவு தளம் | கேப் கனவேரல் வான்படைத் தளம் |
திட்டக் காலம் | சூலை 2015 வரை |
தே.வி.அ.த.மை எண் | 2007-043A |
இணைய தளம் | dawn.jpl.nasa.gov |
நிறை | 1,250 கிகி (2,800 இறா) |
திறன் | 1000 வா |
சுற்றுப்பாதை உறுப்புகள் | |
சுற்றுப்பாதையின் வட்டவிலகல் | ~ வட்டம் |
சாய்வு | முனைவு |
டோன் (Dawn) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் அனுப்பப்பட்ட ஒரு தானியங்கி விண்கலம் ஆகும். டோன் விண்கலம் செருமனி, இத்தாலி, மற்றும் நெதர்லாந்து ஆகிய ஐரோப்பிய நாடுகளின் கூட்டுடன் அமைக்கப்பட்டது. இது சிறுகோள் பட்டையில் காணப்படும் மிக முக்கியமான வெஸ்டா என்ற சிறுகோள், செரசு என்ற குறுங்கோள் ஆகியவற்றை நோக்கி 2007 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் நாள் ஏவப்பட்டது.
டோன் விண்கலம் 2011 சூலை 16 ஆம் நாள் வெஸ்டாவின் சுற்றுப்பாதையை அடைந்தது[3]. இது 2012 செப்டம்பர் 5 வரை அதனை ஆய்வு செய்தது[4][5]. பின்னர் 2015 பெப்ரவரியில் செரசு குறுங்கோளை அடையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது[6]. இவற்றை அடையும் முதல் விண்கலமாக இது இருக்கும்.
வான்பொருள் ஒன்றின் சுற்றுப்பாதைக்குள் சென்று அதனை ஆராய்ந்த பின்னர் அச்சுற்றுப் பாதையில் இருந்து விலகி வேறொரு வான்பொருளுக்குச் செல்லவிருக்கும் முதலாவது விண்கலம் இதுவாகும். பல விண்பொருட்களை ஆராய்ச் சென்ற ஏனைய விண்கலங்கள் (வொயேஜர் திட்டம் உட்பட) விண்பொருட்களை அணுகியவையே ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]
- ↑ http://www.nasa.gov/mission_pages/dawn/news/dawn20110714.html
- ↑ "NASA's Dawn Spacecraft Begins Science Orbits of Vesta". நாசா. 2011-08-01. http://dawn.jpl.nasa.gov/feature_stories/spacecraft_begins_science_orbits.asp. பார்த்த நாள்: 2011-08-06.
- ↑ Dawn probe orbits asteroid Vesta, பிபிசி, சூலை 17, 2011
- ↑ "NASA's Dawn Spacecraft Hits Snag on Trip to 2 Asteroids". ஸ்பேசு.காம். ஆகத்து 15, 2012. பார்க்கப்பட்ட நாள் August 27, 2012.
- ↑ "Dawn Gets Extra Time to Explore Vesta". நாசா. 2012-04-18. பார்க்கப்பட்ட நாள் 2012-04-24.
- ↑ "DAWN — A Journey to the Beginning of the Solar System". Dawn Mission Timeline. Jet Propulsion Laboratory. பார்க்கப்பட்ட நாள் 2012-03-18.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் டோன் விண்கலம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- Where is Dawn Now—from JPL, images updated regularly