குர் மண்டி சிவன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குர் மண்டி சிவன் கோயில் (Gur Mandi Siva Temple) (ஷிவ் மந்திர்) எனும் இந்த சிவன் கோயில், இந்திய பஞ்சாப் பிராந்தியத்தின் பஞ்சாப் மாகாண ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள 'குர் மண்டி' என்னும் ஊரின் கிருஷ்ணா நகர் பகுதியில் அமைந்துள்ளது. குர் மண்டியின் சுறுசுறுப்பான சந்தைப்பகுதியில் தாபிக்கப்பட்டுள்ள இச்சிவன் கோயில், இப்பகுதியின் மிக தொன்மையான கோயில்களில் ஒன்றாக அறியப்படுகிறது.[1]

கோயில் சிறப்பு[தொகு]

சிவபெருமான் மூலவராக வீற்றிருக்கும் இக்கோயிலின் பிரதான வாயில், இசுலாமிய பாரம்பரிய கட்டிடக்கலை பாணியிலும், எஞ்சிய பிறப் பகுதிகள் இந்து சமய மரபு மாற நடையிலும் கட்டப்பட்டள்ளது. லிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள இக்கோயிலின் பகுதியில், துளசி மந்திர், கர்த்தார்பூர் குருத்வாரா மற்றும் தேவி தாலாப் மந்திர் போன்ற பல கோயில்கள் உள்ளன.[1]

கோயில் வரலாறு[தொகு]

தனித்துவமான இந்துக்கோயிலாக இது, 'சுல்தான்பூர் லோதி நவாப்' (Sultanpur Lodhi Nawab) ஆட்சிக்காலத்தின்போது கட்டப்பட்டிருக்கிறது.[2] காலங்காலமாக செவிவழிச் செய்திகளின்படி, இந்த நவாப், திருமணமான ஒரு இந்துப்பெண் மீது இச்சை கொண்டதாகவும் தீவிர சிவபக்தையான அந்த பெண், பாசுகி எனும் தெய்வப்பாம்பால் காப்பாற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பின்னர் மனந்திருந்திய அந்த நவாப் மன்னிப்பு கேட்டுக்கொண்டு அந்த பெண்ணின் கட்டளைப்படி இந்த சிவன் கோயிலை தாபித்ததாகக் கூறப்படுகிறது. மேற்சொன்ன செய்திப்படி, ஒரு இந்துக்கோயிலை பள்ளிவாசல் காத்துநிற்கின்ற தோரணையில் கட்டப்பட்ட இக்கோயில், சமயம், இனப்பாகுபாடற்று விளங்குவது குறிப்பிடத்தக்கது.[3]

உபத் தகவல்கள்[தொகு]

  • விசேட நாட்கள்: ஷிவ் மந்திர் எனும் இச்சிவன் கோயில், ஆண்டு முழுவதும் திறக்கப்படுகிறது. நாள்தோறும் சிவபக்தர்கள் பெருமளவில் வந்தவண்ணம் இருப்பினும், குறிப்பாக சிவராத்திரி மற்றும் மற்ற இந்து சமய விழாக்களின் போது கூடுதலான கூட்டங்கள் குமிழுவதாக அறியப்படுகிறது.[4]

வருகை தகவல்[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
  2. www.indianmirror.com | Shiv Mandir, Jalandhar (ஆங்கிலம்)|வலைக்காணல்: 20/07/2016
  3. Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).
  4. 4.0 4.1 4.2 4.3 Lua error in Module:Citation/CS1/Date_validation at line 148: attempt to index field 'quarter' (a nil value).