ஜலந்தர் தேவி தாலாப் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாப் ஜலந்தர் நகரில் உள்ள தேவி தாலாப் கோயில்

தேவி தாலாப் கோயில் அல்லது தேவி தாலாப் மந்திர் (Devi Talab Temple) என்றறியப்படும் இந்த கோயில், இந்திய பஞ்சாப் பகுதியில் ஜலந்தர் நகரின் இதய பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த ஆன்மிக தலமானது, 51 சக்தி பீடங்களில் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. ஜலந்தர் நகர தொடருந்து நிலையத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள இக்கோயில், பஞ்சாப் ஜலந்தரின் புராதனக் கோயில்களில் ஒன்றாகும்.[1]

தல வரலாறு[தொகு]

நாட்டுப்புற கதைகளின்படி, தேவியின் வலது மார்பகம் இந்த தலத்தில் விழுந்ததாக கருதப்படுகிறது. உன்னதமான இக்கோயிலின் மேற்கூரை, தலைகீழ் கூம்பு வடிவத்தில் கட்டமைக்கப்பட்டு, தங்கத் தகடுகள் கொண்டு மூடப்பட்டுள்ளது. தல தெய்வமாக துர்க்கை (தமிழ்: கொற்றவை) வடிவில் சக்தி வீற்றுள்ள இந்த கோயிலில், பிஷான் பைரவ் எனும் பெயரில் சிவன் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.[2]

தலத் தகவல்[தொகு]

200 ஆண்டுகள் பழமையான இந்த தேவி தாலாப் கோயிலை, சமீபத்தில் புனரமைக்கப்பட்டு நவீனமயமாக்கப்பட்டது. புனித நீரால் சுற்றிவளைக்கப்பட்ட இக்கோயில் குளத்தில் பக்தர்கள் புனித நீராடுகின்றனர். மேலும், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் அரிவல்லப் சங்கீத சம்மேளனம் (Hariballabh Sangeet Sammelan) எனும் இசை நிகழ்ச்சி இந்த கோயில் வளாகத்தில் நடத்தப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வு, சுவாமி அரி வல்லப் (Swami Hariballabh) என்பவரின் நினைவாக நடத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும், கண்டு ரசிக்கவும் நாடெங்கிலுமிருந்து ஏராளமான இசைக்கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் இந்த கோயிலுக்கு வருகைபுரிகின்றனர். மேலும், இந்த கோயிலுக்கு அருகிலேயே ஒரு காளி கோயிலும், மற்றும் பிஷான் பைரவ் எனும் சிவன் கோயிலும் முக்கியமான கோயிலாகும். அதோடு, அமர்நாத் குடைவரைக்கோயிலைப் போன்றே இந்த தேவி தலாப் கோயில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.[3]

சுற்றுலா தகவல்[தொகு]

தேவி தாலாப் கோயிலுக்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகள் வசதிக்காக, ஜலந்தர் நகரத்தில் பயணிகளுக்கு ஏதுவாக எளிய, மற்றும் வசதியுடன் கூடிய பல விடுதிகள் உள்ளது. மேலதிக தகவல்களுக்கு பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:.

புற இணைப்புகள்[தொகு]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. "About Mandir". devitalabmandir.com (ஆங்கிலம்) - 2012. http://devitalabmandir.com/. பார்த்த நாள்: 2016-07-21. 
  2. "About Mandir". devitalabmandir.com (ஆங்கிலம்) - 2012. http://devitalabmandir.com/About-Devi-Talab-Mandir.html. பார்த்த நாள்: 2016-07-21. 
  3. "About Devi Talab Mandir Information-Jalandhar". www.hoparoundindia.com (ஆங்கிலம்). Nov 9 2012. http://www.hoparoundindia.com/Punjab/Jalandhar-attractions/Devi-Talab-Mandir.aspx. பார்த்த நாள்: 2016-07-21. 
  4. "Devi Talab Mandir Info-Contact Details". www.hoparoundindia.com (ஆங்கிலம்). Nov 9 2012. http://www.hoparoundindia.com/Punjab/Jalandhar-attractions-local-info-of/Devi-Talab-Mandir.aspx. பார்த்த நாள்: 2016-07-21.