குமாரி தங்கம்
தோற்றம்
குமாரி தங்கம் | |
|---|---|
| பிறப்பு | அம்முகுட்டி பார்வதி தங்கம் 2 சூன் திருவனந்தபுரம், கேரளம், இந்தியா |
| இறப்பு | 8 மார்ச்சு 2011 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| பணி | நடிகை |
| செயற்பாட்டுக் காலம் | 1952–1970 |
| வாழ்க்கைத் துணை | பி. கே. சத்யபால் |
| பிள்ளைகள் | 3 |
| உறவினர்கள் | சிறீலதா (மருமகள்) திருவிதாங்கூர் சகோதரிகள் |
குமாரி தங்கம் (Kumari Thankam) என்பவர் இந்தியாவில் மலையாளத் திரைப்படத் துறையில் நடித்த ஓர் இந்திய நடிகை ஆவார். இவர் 1950களின் பிற்பகுதியிலும் 1960களிலும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருந்தார். இவர் 1952-இல் ஆத்மசாகியில் அறிமுகமானார். இவர் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார்.
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]குமாரி திருவனந்தபுரத்தின் அருகிலுள்ள பூஜபுராவிலிருந்து பிறந்தவர். லலிதா-பத்மினி-ராகினி மூவரின் சகோதரரான தயாரிப்பாளர் பி. கே. சத்யபால் என்பவரை மணந்தார். இவர்களுக்கு மறைந்த எஸ். பத்மநாபன், மறைந்த எஸ். ஜெயபால் மற்றும் ஆஷா என்ற மூன்று குழந்தைகள் இருந்தனர்.[1] மார்ச் 8, 2011 அன்று சென்னை செனாய் நகரில் தங்கம் காலமானார்.
திரைப்படவியல்
[தொகு]நடிகையாக
[தொகு]| ஆண்டு | தலைப்பு | பாத்திரம் | குறிப்புகள் |
|---|---|---|---|
| 1952 | ஆத்மசாகி | ||
| விசப்பிந்தே வில்லி | |||
| 1953 | திருமலை | ||
| லோகநீதி | |||
| பொன்கதிர் | |||
| 1954 | பாலியாசாகி | ||
| அவான் வருணு | |||
| 1955 | சி. ஐ. டி. | ||
| அனிதா | ஜெயந்தி | ||
| 1956 | மந்திரவாதி | கல்யாணி | |
| மினுன்னதெல்லம் பொன்னல்ல | |||
| கூடப்பிரப்பு | |||
| 1957 | ஜெயில்பள்ளி | சுதா | |
| தேவா சுந்தரி | |||
| அச்சனும் மகனும் | சரசு | ||
| 1970 | மூடல்மாஞ்சு | ||
| 1976 | மதுராம் திருமாதுரம் |
பாடகர்
[தொகு]- வண்ணாலும் மோகனனே... மினுன்னத்தள்ளம் பொன்னல்ல (1957)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Actress Thankam passes away | KeralaBoxOffice.com". Archived from the original on 24 December 2013. Retrieved 21 November 2013.