உள்ளடக்கத்துக்குச் செல்

கிரீசு சண்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரீசு சண்டை
இரண்டாம் உலகப் போரின் பால்கன் போர்த்தொடரின் பகுதி

ஜெர்மானியப் படை முன்னேற்றம்
நாள் 6–30 ஏப்ரல் 1941
இடம் கிரீசு
தெளிவான அச்சு வெற்றி; கிரீசு ஆக்கிரமிக்கப்பட்டது
பிரிவினர்
அச்சு நாடுகள்:
 ஜெர்மனி
 இத்தாலி
 பல்கேரியா
நேச நாடுகள்:
 கிரேக்க நாடு
 ஐக்கிய இராச்சியம்
 ஆத்திரேலியா
 நியூசிலாந்து
தளபதிகள், தலைவர்கள்
நாட்சி ஜெர்மனி வில்லெம் லிஸ்ட்
நாட்சி ஜெர்மனி மேக்சிமிலியன் வோன் வெய்க்ஸ்
இத்தாலி எமீலியோ கிக்லியோலி
கிரேக்க நாடு அலெக்சாந்தர் பாப்பகோஸ்
ஐக்கிய இராச்சியம் ஹென்ரி வில்சன்
நியூசிலாந்து பெர்னார்ட் ஃபிரேபெர்க்
ஆத்திரேலியா தாமஸ் பிளேமி
பலம்
ஜெர்மனி:[1]
680,000 பேர்,
1,200 டாங்குகள்
700 வானூர்திகள்
1இத்தாலி:[2]
565,000 பேர்
463 வானூர்திகள்[3]
163 டாங்குகள்
மொத்தம்: 1,245,000 பேர்
1கிரீசு:[4]
430,000 பேர்
பொதுநலவாய நாடுகள்:[5]
262,612 பேர்
100 டாங்குகள்
200-300 வானூர்திகள்
இழப்புகள்
1இத்தாலி:[6]
13,755 மாண்டவர்,
63,142 காயமடைந்தவர்,
25,067 காணாமல் போனவர்
1ஜெர்மனி:[7]
1,099 மாண்டவர்,
3,752 காயமடைந்தவர்,
385 காணாமல் போனவர்

பல்கேரியா[8] > 400 மாண்டவர் / காணாமல் போனவர்

1கிரீசு:[6]
13,325 மாண்டவர்,
62,663 காயமடைந்தவர்,
1,290 காணாமல் போனவர்
பொதுநலவாய நாடுகள்:[5]
903 மாண்டவர்,
1,250 காயமடைந்தவர்,
13,958 போர்க்கைதிகள்

கிரீசு சண்டை (Battle of Greece) என்பது இரண்டாம் உலகப் போரின் போது நாசி ஜெர்மனி கிரேக்க நாட்டின் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிய நிகழ்வினைக் குறிக்கிறது. பால்கன் போர்த்தொடரின் ஒரு பகுதியான இது மாரிட்டா நடவடிக்கை (Operation Marita) என்றும் அழைக்கப்படுகிறது.

1940ல் அச்சு நாடுகள் கூட்டணியில் இடம் பெற்றிருந்த இத்தாலி, கிரீசு மீது படையெடுத்து அதனைக் கைப்பற்ற முயன்றது. ஆனால் கிரேக்கப் படைகளின் எதிர்த்தாக்குதல்களால் போர் தேக்க நிலையை அடைந்து இத்தாலியின் படையெடுப்பு தோல்வியடையும் நிலை உருவானது. இத்தாலியின் சர்வாதிகாரி முசோலினி, இட்லரிடம் தனக்கு உதவுமாறு வேண்டினார். அதற்கிசைந்த இட்லர், கிரீசைக் கைப்பற்ற ஜெர்மானியப் படைகளுக்கு உத்தரவிட்டார். ஏப்ரல் 6, 1941 அன்று பல்கேரியா மற்றும் யூகோஸ்லாவியா நாட்டுப் பகுதிகளிலிருந்து ஜெர்மானியப் படைகள் கிரீசைத் தாக்கின. கிரீசுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்திருந்த பிரிட்டன் தனது படைகளையும் பொதுநலவாயப் படைகளையும் கிரேக்கப் படைகளின் உதவிக்கு அனுப்பியது. ஆனால் ஜெர்மானியப் படைபலத்தைச் சமாளிக்க முடியாமல் நேச நாட்டுப் படைகள் பின்வாங்கின. மூன்று வார சண்டைக்குப் பின்னர் ஜெர்மானியப் படைகள் பெருவெற்றி பெற்றன. கிரீசிலிருந்த பிரித்தானியப் படைகள் பின்வாங்கி கடல்வழியாகத் தப்பின. கிரேக்கத் தலைநகர் ஏதென்சின் வீழ்ச்சியுடன் ஏப்ரல் 30ம் தேதி கிரீசு சண்டை முடிவுக்கு வந்தது. கிரேக்க அரசும் மன்னர் இரண்டாம் ஜார்ஜும் கிரீட் தீவுக்குத் தப்பினர். மே 1941ல் ஜெர்மானியப் படைகள் கிரீட்டைத் தாக்கிக் கைப்பற்றின.

அடுத்த நான்காண்டுகளுக்கு கிரீசு, நாசி ஜெர்மனி, இத்தாலி மற்றும் பல்கேரியாவால் ஆக்கிரமிக்கப்பட்டது. கிரீசு மீதான ஜெர்மானியப் படையெடுப்பு குறித்து படைத்துறை வரலாற்றாளர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. கிரீசு மீது படையெடுத்ததால் தான் சோவியத் ஒன்றியம் மீதான ஜெர்மானியத் தாக்குதல் தாமதமடைந்தது எனவும் இத்தாமதமே ஜெர்மனி இரண்டாம் உலகப் போரில் தோற்கக் காரணம் என்றும் ஒரு தரப்பினர் கருதுகின்றனர். மற்றொரு தரப்பினர் கிரீசுக்கு பிரித்தானியப் படைகளை அனுப்பியது ஒரு தேவையற்ற முயற்சியென்றும், மேல்நிலை உத்தியளவில் ஒரு பெரும் தவறு என்றும் கருதுகின்றனர்.

குறிப்புகள்

[தொகு]
  1. Collier (1971), 180
    * "Greek Wars". Encyclopaedia "The Helios". 
  2. Richter (1998), 119, 144
  3. Hellenic Air Force History accessed March 25, 2008
  4. "Campaign in Greece". The Encyclopedia Americana. 
    * Ziemke, Balkan Campaigns பரணிடப்பட்டது 2009-02-08 at the வந்தவழி இயந்திரம்
  5. 5.0 5.1 Beevor (1992), 26
    * Long (1953), 182–183 பரணிடப்பட்டது 2008-02-28 at the வந்தவழி இயந்திரம்
    * McClymont (1959), 486
    * Richter (1998), 595–597
  6. 6.0 6.1 Richter (1998), 595–597
  7. Bathe-Glodschey (1942), 246
  8. name="R595-597">Richter (1998)

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரீசு_சண்டை&oldid=3848892" இலிருந்து மீள்விக்கப்பட்டது