கிரேக்க-இத்தாலியப் போர்
கிரேக்க-இத்தாலியப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் உலகப் போரின் பால்கன் போர்த்தொடரின் பகுதி | |||||||
கிரேக்க பீரங்கிக் குழு |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
இத்தாலி | கிரேக்க நாடு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
செபாஸ்தியானோ பிராஸ்கா(9 நவம்பர் வரை) உபால்டோ சொட்டு (டிசம்பர் மத்தியப் பகுதி வரை) ஊகோ காவலேரோ | அலெக்சாந்தர் பாபாகோஸ் | ||||||
பலம் | |||||||
565,000 பேர்[1] 463 வானூர்திகள்[2] 163 டாங்குகள் | < 300,000 பேர் 77 வானூர்திகள்[2] |
||||||
இழப்புகள் | |||||||
13,755[3][4][5] மாண்டவர் 50,874[3][4] காயமடைந்தவர் 25,067 காணாமல் போனவர் (21,153[4] போர்க்கைதிகள்) 64 வானூர்திகள்[2] | 13,325 மாண்டவர் 42,485 காயமடைந்தவர் 1,237 காணாமல் போனவர் 1,531[6] போர்க்கைதிகள் 52 வானூர்திகள்[2] மொத்தம்: ~83,578 |
கிரேக்க-இத்தாலியப் போர் (Greco-Italian War) இரண்டாம் உலகப் போரின் போது பாசிச இத்தாலிக்கும் கிரீசுக்கும் இடையே நடந்த ஒரு போர். இது 1940இன் போர், கிரீசுக்கானப் போர் என்றும் அழைக்கப்படுகிறது. பால்கன் போர்த்தொடரின் ஒரு பகுதியான இதில் இத்தாலி கிரீசைத் தாக்கிக் கைப்பற்ற முயன்று தோற்றது.
பாசிச சர்வாதிகாரி முசோலினியின் தலைமையிலான இத்தாலி அச்சு நாடுகள் கூட்டணியில் நாசி ஜெர்மனிக்கு அடுத்தபடியான நிலையை பெற்றிருந்தது. இரண்டாம் உலகப் போரின் ஆரம்பத்தில் மேற்கு ஐரோப்பாவில் ஜெர்மானியப் படைகளுக்குக் கிடைத்த தொடர் வெற்றியினைக் கண்ட முசோலினி அதே போல இத்தாலிக்கும் நிகழ வேண்டுமென விரும்பினார். பிற நாடுகளைக் கைப்பற்றி இத்தாலியின் பரப்பளவை அதிகரிக்க ஆசைப்பட்டார். 1939ல் அல்பேனியா நாட்டினை இத்தாலிய படைகள் ஆக்கிரமித்தன. அடுத்து கிரேக்க நாட்டினைக் கைப்பற்ற முடிவு செய்தார். கிரேக்கர்கள் இத்தாலியின் சரணடைவு ஆணையை நிராகரித்து விட்டதால் அக்டோபர் 28, 1940ல் இத்தாலியப் படைகள் கிரீசு மீது படையெடுத்தன. கிரீசைக் கைப்பற்றி அங்கொரு கைப்பாவை அரசை நிறுவுவதும், கிரீசின் பல பகுதிகளை இத்தாலியுடன் இணைப்பதும் முசோலினியின் குறிக்கோள்.
அல்பேனிய நிலப்பகுதியிலிருந்து நிகழ்ந்த இப்படையெடுப்பை எதிர்கொள்ள கிரேக்கப்படைகள் தயாராக இருந்தன. ஒரு மாத காலத்துக்குள் இத்தாலியப் படையெடுப்பை முறியடித்து விட்டன. நவம்பர் 14ம் தேதி ஒரு பெரும் எதிர்த் தாக்குதலையும் தொடங்கின. அடுத்த சில மாதங்களுக்கு அல்பேனிய - கிரீசு எல்லையில் கடும் சண்டை நடந்தது. ஆனால் எத்தரப்புக்கும் தெளிவான வெற்றி கிட்டாமல் தேக்க நிலை உருவானது. கிரேக்கப் படைகளின் கவனம் அல்பேனிய எல்லையில் இருந்ததை பயன்படுத்திக் கொண்டு வடக்கு கிரீசில் இத்தாலியப் படைகள் மார்ச் 9, 1941ல் இன்னொரு தாக்குதலைத் தொடங்கினர். ஆனால் பத்து நாட்களுக்குள் கிரேக்கப் படைகள் அத்தாக்குதலைச் சமாளித்து முறியடித்து விட்டன. இத்தாலியால் தனியாக கிரீசைத் தோற்கடிக்க இயலாது என்பதை ஒப்புக்கொண்ட முசோலினி இட்லரின் உதவியை நாடினார். இட்லரின் ஆணைப்படி முசோலினிக்கு உதவ ஜெர்மானியப் படைகள் ஏப்ரல் 6ம் தேதி கிரீசு மீது படையெடுத்தன.
கள நிலவரம்
[தொகு]முதல் இத்தாலியத் தாக்குதல் அக்டோபர் 28 – நவம்பர் 13, 1940. |
கிரேக்க எதிர்த் தாக்குதல் நவம்பர் 14, 1940 – மார்ச், 1941. |
இரண்டாவது இத்தாலியத் தாக்குதல் மார்ச் 9 – ஏப்ரல் 23, 1941. |
குறிப்புகள்
[தொகு]- ↑ Richter (1998), 119, 144
- ↑ 2.0 2.1 2.2 2.3 Hellenic Air Force History accessed 25 March 2008
- ↑ 3.0 3.1 3.2 Mario Montanari, La campagna di Grecia, Rome 1980, page 805
- ↑ 4.0 4.1 4.2 4.3 Giorgio Rochat, Le guerre italiane 1935–1943. Dall'impero d'Etiopia alla disfatta, Einaudi, 2005, p. 279
- ↑ Mario Cervi, Storia della guerra di Grecia, BUR, 2005, page 267
- ↑ Rodogno (2006), pages 446
மேற்கோள்கள்
[தொகு]- Bauer, Eddy (2000) [1979]. The History of World War II (Revised edition ed.). London, UK: Orbis Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85605-552-3.
{{cite book}}
:|edition=
has extra text (help); Unknown parameter|coauthors=
ignored (help) - Beevor, Antony (1992). Crete: The Battle and the Resistance. Penguin Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-016787-0.
- Buell, Hal. (2002). World War II, Album & Chronicle. New York: Tess Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-57912-271-X.
- Cervi, Mario (1972). The Hollow Legions. London: Chatto and Windus. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7011-1351-0.
- Ciano, Count Galeazzo (1947). The Ciano Diaries 1939–1943, Mudderidge Ed. London
- De Felice, Renzo (1990). Mussolini l'Alleato: Italia in guerra 1940–1943. Torino: Rizzoli Ed.
- Goulis and Maïdis, Ο Δεύτερος Παγκόσμιος Πόλεμος (The Second World War), (in Greek) (Filologiki G. Bibi, 1967)
- Hadjipateras, C.N., Greece 1940–41 Eyewitnessed, (Efstathiadis Group, 1996) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 960-226-533-7
- Hellenic Army General Staff (1997). An Abridged History of the Greek-Italian and Greek-German War, 1940–1941 (Land Operations). Athens: Army History Directorate Editions. இணையக் கணினி நூலக மைய எண் 45409635.
- David Irving, Hitler's War and the War Path (2002). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-872197-10-8
- Keegan, John (2005). The Second World War. Penguin. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-14-303573-8.
- MacGregor, Knox (1986). Mussolini Unleashed, 1939–1941: Politics and Strategy in Fascist Italy's last war. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-33835-2.
- Knox, MacGregor (2000). Hitler's Italian Allies: Royal Armed Forces, Fascist Regime, and the War of 1940–43. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-79047-6.
- La Campagna di Grecia, Italian official history (in Italian), 1980.
- Lamb, Richard (1998). Mussolini as Diplomat. London: John Murray Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-88064-244-0
- Mack Smith, Denis (1976). Mussolini's Roman Empire Fromm Ed. London (1949).
- Papagos, Alexandros (1949). The Battle of Greece 1940–1941 Athens: J.M. Scazikis “Alpha”, editions. ASIN B0007J4DRU.
- Prasca, Sebastiano Visconti (1946). Io Ho Aggredito La Grecia, Rizzoli.
- Ian Allan Pubs. The Balkans and North Africa 1941–42 (Blitzkrieg Series #4).
- Leni Riefenstahl, Leni Riefenstahl: A Memoir. (Picador New York, USA. 1987) pages 295 பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-11926-7
- Rodogno, Davide (2006). Fascism's European Empire: Italian Occupation During the Second World War. Cambridge, UK: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0521845151.
- The Greek Army in World War II, A six volume series, Greek official history (in Greek).
- Verzijl, J.H.W. (1970). International Law in Historical Perspective. Brill Archive. p. 396.
- Walker, Ian W. (2003). Iron Hulls, Iron Hearts; Mussolini's Elite Armoured Divisions in North Africa. Ramsbury: The Crowood Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-86126-646-4.
- Electris, Theodore (2008). Written on the Knee: A Diary from the Greek-Italian Front of WWII. Scarletta. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780979824937.