கிமு 1

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆயிரமாண்டு: 1-ஆம் ஆயிரமாண்டு கிமு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:

ஆண்டு கி.மு. 1 (1 BC) என்பது யூலியன் நாட்காட்டியில் வெள்ளிக்கிழமையில் அல்லது சனிக்கிழமையில் தொடங்கிய ஒரு சாதாரண ஆண்டாகும். இவ்வாண்டு அக்காலத்தில் இலெந்தூலசு, பீசோ தூதர்களின் ஆண்டு (Year of the Consulship of Lentulus and Piso) அல்லது பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் ஆண்டு 753 எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு கி.மு. 1 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. இதற்கு அடுத்த ஆண்டு கிபி 1 ஆகும், யூலியன் நாட்காட்டியில் "ஆண்டு 0" வழக்கில் இருக்கவில்லை.

நிகழ்வுகள்[தொகு]

சீனா[தொகு]

 • ஆன் பேரரசர் ஆய் இறந்ததை அடுத்து அவரது அகவை 8 உடன்பிறவா சகோதரன் பிங் பேரரசரானார்.[1]
 • ஆன் பேரரசர் ஆயியின் காதலர் டொங் சியான் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.[2]

உரோமைப் பேரரசு[தொகு]

 • முடிக்குரிய இளவரசர் கையசு சீசர் தனது கௌரவத்தைப் பெறும் முயற்சியாக லிவில்லாவைத் திருமணம் செய்தார்.[3]
 • கார்ட்டாசெனாவில் உரோமை நாடக அரங்கம் கட்டி முடிக்கப்பட்டது.[4]
 • அவுலசு செசீனா செவரசு தூதராக பேரரசர் அகசுத்தசினால் நியமிக்கப்பட்டார்.[5]

இந்தியா[தொகு]

 • குணதாள சதகர்ணியின் பின்னர் மூன்றாம் சதகர்ணி சாதவாகன மன்னராக முடிசூடினார்.[6]

சமயம்[தொகு]

 • கிறித்தவத்தில் இயேசுவின் மதிப்பிடப்பட்ட பிறப்பு, அவரது அனோ டொமினி காலத்தில் தியோனீசியஸ் எக்சிக்கசு என்பவரால் கொடுக்கப்பட்டது; பெரும்பாலான அறிஞர்களின் கூற்றுப்படி, தியோனீசியசு "அவதாரம்" என்ற சொல்லைப் பயன்படுத்தினார், ஆனால் அவர் இயேசுவின் கருத்தரிப்பையா அல்லது பிறப்பையா குறித்தார் என்பது அறியப்படவில்லை. இருப்பினும், குறைந்தபட்சம் ஒரு அறிஞராவது தியோனீசியசு இயேசுவின் அவதாரத்தை அடுத்த ஆண்டு கிபி 1 இல் வைத்தார் என்று கூறுகிறார்.[7][8] பெரும்பாலான இன்றைய அறிஞர்கள் தியோனிசியசின் கணக்கீடுகளை அதிகாரபூர்வமானதாகக் கருதவில்லை, அத்துடன் கிறித்துவின் பிறப்பு பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகக் குறிப்பிடுகின்றனர்.[9]

இறப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Furth, Charlotte (1991). "Passions of the Cut Sleeve: The Male Homosexual Tradition in China. By Bret Hinsch. Berkeley: University of California Press, 1990. xvii, 232 pp. $22.50.". The Journal of Asian Studies 50 (4): 911–912. doi:10.2307/2058567. பன்னாட்டுத் தர தொடர் எண்:0021-9118. http://dx.doi.org/10.2307/2058567. 
 2. Hinsch, Bret. (1990) Passions of the Cut Sleeve. University of California Press.
 3. "Cassius Dio - Book 55". penelope.uchicago.edu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-25.{{cite web}}: CS1 maint: url-status (link)
 4. "Cartagena Roman Theatre Museum". murciatoday.com. பார்க்கப்பட்ட நாள் 2021-05-26.
 5. Syne, Ronald (1995). Anatolica : studies in Strabo. Clarendon Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-814943-3. இணையக் கணினி நூலக மையம்:30318791. http://worldcat.org/oclc/30318791. 
 6. Singh, Rajesh Kumar (2013). Ajanta Paintings: 86 Panels of Jatakas and Other Themes.. Hari Sena. பக். 15–16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788192510750. 
 7. Georges Declercq, Anno Domini: The origins of the Christian Era (Turnhout, Belgium: Brepols, 2000), pp.143–147.
 8. G. Declercq, "Dionysius Exiguus and the introduction of the Christian Era", Sacris Erudiri 41 (2002) 165–246, pp.242–246. Annotated version of a portion of Anno Domini.
 9. James D. G. Dunn, Jesus Remembered, Eerdmans Publishing (2003), page 324.
 10. Fairbank, John (1986). The Cambridge History of China: Volume 1, The Ch'in and Han Empires, 221 BC-AD 220. Cambridge University Press. பக். 227. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780521243278. https://books.google.com/books?id=A2HKxK5N2sAC&q=Emperor+Ai+of+Han+%2215+august%22&pg=PA227. 
 11. Loewe, Michael (2018). Crisis and Conflict in Han China. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780429849107. https://books.google.com/books?id=BrJqDwAAQBAJ&q=Emperor+Ai+of+Han+%2215+august%22&pg=PT190. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிமு_1&oldid=3692362" இலிருந்து மீள்விக்கப்பட்டது