உள்ளடக்கத்துக்குச் செல்

கிண்ணியா நகரசபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிண்ணியா நகரசபை
வகை
வகை
உள்ளூராட்சி
உறுப்பினர்கள்15
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2025

கிண்ணியா நகரசபை (Kinniya Urban Council, கிண்ணியா நகராட்சி மன்றம்) இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கிண்ணியா நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும். இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 8 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 7 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2]

வட்டாரங்கள்

[தொகு]

கிண்ணியா நகரசபைக்கு பின்வரும் 8 வட்டாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன:[3]

  1. பெரியாத்துமுனை
  2. கிண்ணியா
  3. சின்ன கிண்ணியா
  4. மாஞ்சோலைச்சேனை
  5. மாஞ்சோலை
  6. அண்ணல்நகர்
  7. பைசால்நகர்
  8. ஆலங்கேணி

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2006 உள்ளூராட்சித் தேர்தல்கள்

[தொகு]

30 மார்ச் 2006 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய தேசியக் கட்சி / சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 6,061 39.33% 4
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 5,904 38.31% 2
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 1,393 9.04% 1
  சுயேச்சைக் குழு 3 1,310 8.50% 0
  சுயேச்சைக் குழு 1 724 4.70% 0
  சுயேச்சைக் குழு 2 19 0.12% 0
செல்லுபடியான வாக்குகள் 15,411 100.00% 7
செல்லாத வாக்குகள் 584
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 15,995
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 20,704
வாக்குவீதம் 77.26%

2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்

[தொகு]

17 மார்ச் 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[5]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இடங்கள்
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 6,876 46.50% 5
  ஐக்கிய தேசியக் கட்சி 3,727 25.21% 1
  சுயேச்சைக் குழு 1 3,285 22.22% 1
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 704 4.76% 0
இலங்கை லிபரல் கட்சி 135 0.91% 0
  மக்கள் விடுதலை முன்னணி 41 0.28% 0
  சுயேச்சைக் குழு 6 7 0.05% 0
  சுயேச்சைக் குழு 2 4 0.03% 0
  சுயேச்சைக் குழு 4 3 0.02% 0
  சுயேச்சைக் குழு 7 3 0.02% 0
  சுயேச்சைக் குழு 5 1 0.01% 0
  சுயேச்சைக் குழு 3 0 0.00% 0
  சுயேச்சைக் குழு 8 0 0.00% 0
செல்லுபடியான வாக்குகள் 14,786 100.00% 7
செல்லாத வாக்குகள் 436
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 15,222
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 21,069
வாக்குவீதம் 72.25%

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்

[தொகு]

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 5 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 13 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[3]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 5,627 27.41% 4 0 4
  அகில இலங்கை மக்கள் காங்கிரசு 4,505 21.95% 3 0 3
  ஐக்கிய தேசியக் கட்சி 3,651 17.79% 0 2 2
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 2,459 11.98% 0 1 1
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 1,277 6.22% 0 1 1
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 887 4.32% 1 0 1
  சுயேச்சைக் குழு 702 3.42% 0 0 0
தேசிய காங்கிரசு 653 3.18% 0 0 0
  இலங்கை பொதுசன முன்னணி 621 3.03% 0 0 0
சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி 136 0.66% 0 0 0
  மக்கள் விடுதலை முன்னணி 10 0.05% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 20,528 100.00% 8 5 13
செல்லாத வாக்குகள் 243
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 20,771
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 25,410
வாக்குவீதம் 81.74%

கிண்ணியா நகரசபைக்குத் தலைவராக சாகுல் அமீது முகம்மது நலீம் (ஐதேக), அயூப் துவான் சப்ரீன் (முகா) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[3]

2025 உள்ளூராட்சித் தேர்தல்கள்

[தொகு]

2025 மே 6 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[6] 8 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 7 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 15 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  ஐக்கிய மக்கள் சக்தி 5,747 27.72% 2 2 4
  அகில இலங்கை மக்கள் காங்கிரசு 5,059 24.40% 4 0 4
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 4,872 23.50% 1 2 3
  தேசிய மக்கள் சக்தி 2,714 13.09% 0 2 2
  மக்கள் கூட்டணி 785 3.79% 0 1 1
  அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு 603 2.91% 0 1 1
தேசிய காங்கிரசு 461 2.22% 0 0 0
  இலங்கைத் தமிழரசுக் கட்சி 430 2.07% 0 0 0
  இலங்கை பொதுசன முன்னணி 62 0.30% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 20,733 100.00% 8 7 15
செல்லாத வாக்குகள் 178
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 20,911
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 29,131
வாக்குவீதம் 71.78%

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. 2.0 2.1 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. 3.0 3.1 3.2 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  4. "Local Authorities Election 2006 Final Results Kinniya Urban Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-08-05. Retrieved 2017-03-18.
  5. "Local Authorities Election - 17.03.2011 Trincomalee District Kinniya Urban Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-08-05. Retrieved 2017-03-18.
  6. "Local Authorities Election - 6.05.2025 Jaffna District Point Pedro Urban Council" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 23 May 2025. Retrieved 23 May 2025.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிண்ணியா_நகரசபை&oldid=4290391" இலிருந்து மீள்விக்கப்பட்டது