உள்ளடக்கத்துக்குச் செல்

சாவகச்சேரி நகரசபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாவகச்சேரி நகர சபை
வகை
வகை
தலைமை
தலைவர்
வடிவேல் சிறிபிரகாசு, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு
14 சூன் 2025 முதல்
துணைத் தலைவர்
ஞானப்பிரகாசம் கிசோர், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு
14 சூன் 2025 முதல்
கட்டமைப்பு
உறுப்பினர்கள்18
அரசியல் குழுக்கள்
அரசு (8)

எதிர் (10)

தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
2025

சாவகச்சேரி நகரசபை (Chavakachcheri Urban Council) அல்லது சாவகச்சேரி நகராட்சி மன்றம் இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள சாவகச்சேரி நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும்.[1] இந்த நகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த நகரசபைப் பகுதி 11 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, சாவகச்சேரி நகரசபைக்கு 11 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 7 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 18 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[2][3]

வட்டாரங்கள்

[தொகு]

26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள சாவகச்சேரி நகரசபையின் ஆளுகைப் பிரதேசம் 11 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[4]

  1. கல்வயல்
  2. சாவகச்சேரி வடக்கு
  3. மண்டுவில்
  4. மீசாலை மேற்கு
  5. மீசாலை கிழக்கு
  6. சங்கத்தானை
  7. சாவகச்சேரி நகரம்
  8. நுணாவில் கிழக்கு மத்தி
  9. நுணாவில் மேற்கு
  10. கோயில் குடியிருப்பு - கடல்
  11. கோயில் குடியிருப்பு ஏ (தரைப்பகுதி)

தேர்தல் முடிவுகள்

[தொகு]

1983 உள்ளூராட்சித் தேர்தல்

[தொகு]

18 மே 1983 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[5]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 தமிழர் விடுதலைக் கூட்டணி 1,71892.12%11
 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 1095.84%0
 ஐக்கிய தேசியக் கட்சி 382.04%0
செல்லுபடியான வாக்குகள் 1,865100.00%11
செல்லாத வாக்குகள் 20
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 1,885
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 12,050
வாக்குவீதம் 15.64%

1998 உள்ளூராட்சித் தேர்தல்

[தொகு]

29 சனவரி 1998 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[6][7]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 சனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) 1,14641.52%6
 ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி 83530.25%3
 ஈழ மக்கள் சனநாயகக் கட்சி 68024.64%2
 தமிழீழ விடுதலை இயக்கம் 993.59%0
செல்லுபடியான வாக்குகள் 2,760100.00%11
செல்லாத வாக்குகள் 527
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 3,287
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 14,802
வாக்குவீதம் 22.21%

2011 உள்ளூராட்சித் தேர்தல்

[தொகு]

23 யூலை 2011 அன்று இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[8][9]

கூட்டணிகளும் கட்சிகளும்வாக்குகள்%இடங்கள்
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 4,30776.84%9
 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 1,23221.98%2
ஐக்கிய சோசலிசக் கட்சி 380.68%0
 ஐக்கிய தேசியக் கட்சி 280.50%0
செல்லுபடியான வாக்குகள் 5,605100.00%11
செல்லாத வாக்குகள் 347
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 5,952
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 10,987
வாக்குவீதம் 54.17%

2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்

[தொகு]

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 11 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 7 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 18 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2][3] தேர்தல் முடிவுகள் வருமாறு:[4]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள்%வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 2,77931.39%606
 இலங்கைத் தமிழரசுக் கட்சி 2,48128.02%325
 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1,37215.50%123
 சிறீ லங்கா சுதந்திரக் கட்சி 1,02911.62%112
தமிழர் சமூக சனநாயகக் கட்சி 5185.85%011
 ஐக்கிய தேசியக் கட்சி 3443.89%011
 தமிழர் விடுதலைக் கூட்டணி 2612.95%000
ஐக்கிய சோசலிசக் கட்சி 100.11%000
செல்லுபடியான வாக்குகள் 8,854100.00%11718
செல்லாத வாக்குகள் 121
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 8,975
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 12,490
வாக்குவீதம் 71.85%

2018 தேர்தலில் சாவகச்சேரி நகரசபைக்குத் தலைவராக சிவமங்கை இராமநாதன் (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக அருணாசலம் பாலமயூரன் (மீசாலை மேற்கு, இலங்கைத் தமிழரசுக் கட்சி) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[4]

2025 உள்ளூராட்சித் தேர்தல்கள்

[தொகு]

2025 மே 6 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[10] 11 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 7 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 18 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள்%வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
 அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் 2,95934.65%426
 இலங்கைத் தமிழரசுக் கட்சி 2,59430.38%336
 தேசிய மக்கள் சக்தி 1,44516.92%213
சனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி 7388.64%022
 ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 5356.27%011
 ஐக்கிய தேசியக் கட்சி 200.23%000
 ஐக்கிய மக்கள் சக்தி 450.53%000
 சுயேச்சைக் குழு 2032.38%000
செல்லுபடியான வாக்குகள் 8,539100.00%11718
செல்லாத வாக்குகள் 108
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 8,647
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 13,996
வாக்குவீதம் 61.78%

2025 தேர்தலில் சாவகச்சேரி நகரசபையின் தலைவராக வடிவேல் சிறிபிரகாசு (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு), துணைத் தலைவராக0ஞானப்பிரகாசம் கிசோர் (அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசு) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Chavakachcheri Urban Council". இலங்கை அரசு. Archived from the original on 2012-08-05. Retrieved 2011-08-20.
  2. 1 2 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017.
  3. 1 2 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017.
  4. 1 2 3 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  5. Sarveswaran, K. (2005). The Tamil United Liberation Front: Rise and Decline of a Moderate Ethnic Party in Sri Lanka (1976-2000). Jawaharlal Nehru University.
  6. "Election commissioner releases results". TamilNet. 30 January 1998.
  7. D.B.S. Jeyaraj (15 February 1998). "The Jaffna Elections". Tamil Times XVII (2): 12–15. பன்னாட்டுத் தர தொடர் எண்:0266-4488.
  8. "Local Authorities Election - 23.07.2011 Jaffna District Chavakachcheri Urban Council". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-06-07. Retrieved 2017-03-18.
  9. "Local Authorities Election - 2011" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 21 December 2018. Retrieved 18 June 2025.
  10. "Local Authorities Election - 6.05.2025 Jaffna District Chavakachcheri Urban Council" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 23 May 2025. Retrieved 23 May 2025.
  11. "சாவகச்சேரி நகரசபையில் ஆட்சியமைத்தது சைக்கிள்- சங்கு கூட்டணி!". தமிழ்முரசம். Archived from the original on 28 சூன் 2025. Retrieved 28 சூன் 2025.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சாவகச்சேரி_நகரசபை&oldid=4318261" இலிருந்து மீள்விக்கப்பட்டது