உள்ளடக்கத்துக்குச் செல்

காவால் புலிகள் காப்பகம்

ஆள்கூறுகள்: 19°07′08″N 78°59′56″E / 19.1188949°N 78.9989734°E / 19.1188949; 78.9989734
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவால் புலிகள் காப்பகம்
சன்னாராம் வனம்
வன விலங்கு சரணாலயம்
காவால் புலிகள் காப்பகம் is located in தெலங்காணா
காவால் புலிகள் காப்பகம்
காவால் புலிகள் காப்பகம்
அமைவிடம், தெலுங்காணா மாநிலம்
ஆள்கூறுகள்: 19°07′08″N 78°59′56″E / 19.1188949°N 78.9989734°E / 19.1188949; 78.9989734
நாடு இந்தியா
மாநிலம்சன்னாரம், தெலுங்காணா
பரப்பளவு
 • மொத்தம்2,015.44 km2 (778.17 sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (IST)

காவால் புலிகள் காப்பகம் (Kawal Tiger Reserve) இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் மஞ்சேரியல் மாவட்டத்தின் (பழைய ஆதிலாபாத் மாவட்டம்) ஜன்னாரம் மண்டலத்தில் அமைந்துள்ளது.[1][2] காவல் வனவிலங்கு சரணாலயத்தைப் புலிகள் காப்பகமாக 2012ல் இந்திய அரசு அறிவித்தது.[3] தெலுங்காணா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள மிகப் பழமையான சரணாலயமாக இது உள்ளது. இச்சரணாலயத்தில் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் உள்ளது நன்கு அறியப்பட்டதாகும். இந்த சரணாலயத்தின் தெற்கே பாயும் கோதாவரி மற்றும் கதம் நதிகளின் நீர்ப்பிடிப்பு பகுதியாக இச்சரணாலயம் உள்ளது.[4]

வரலாறு

[தொகு]

காவால் வனவிலங்குச் சரணாலயம் 1965ஆம் நிறுவப்பட்டது. பின்னர் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972ன் கீழ் 1999ஆம் ஆண்டு இப்பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.

புலிகள் பாதுகாப்பு நிலை

[தொகு]

2012ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் புலிகள் பாதுகாப்பகமாக இது பட்டியலிடப்பட்டது.[5] இங்கு சுமார் 150 மான்கள் புலிகளின் இரையாக இப்பகுதியில் விடப்பட்டது. புலிகள் மற்றும் பிற வனவிலங்குகள் வேட்டையாடப்படுவதைத் தடுக்க புதிய சோதனை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இப்பகுதியின் பாரம்பரிய நீர் ஆதாரங்கள் மேம்படுத்தப்பட்டன.

அமைவிடம்

[தொகு]

இப்பாதுகாப்பகம் மஞ்சேரியல் மாவட்டத்தில் 18.8756 ° வ, 79.4591 ° கிழக்கிற்கு இடையில் அமைந்துள்ளது. இந்தப்பகுதியின் வடக்கில் ஆதிலாபாத் மற்றும் கொமுராம் பீம், தெற்கே கரீம்நகர் மற்றும் நிஜாமாபாத் மற்றும் மேற்கில் நாந்தேடு மாவட்டத்தால் சூழப்பட்டுள்ளது. இது மாஞ்சேரியல் மாவட்டத்தில் மாவட்டத் தலை நகரிலிருந்து சுமார் 50 km (31 mi) தொலைவிலும் ஹைதராபாத்தில் இருந்து 270 கிலோமீட்டர்கள் (170 mi) தொலைவில் அமைந்துள்ளது. இதன் அருகிலுள்ள விமான நிலையம் ஹைதராபாத்தில் உள்ளது .அமைந்துள்ளது. இது சாகியாதிரி தொடர் மலைப்பகுதியிலிருந்து மகாராஷ்டிராவின் தடோபா காடு வரை நீண்டுள்ளது (GoAP2012; ராஜகோபால் 1976).[6] இந்த சரணாலயம் 893 km2 (345 sq mi) நிலப் பரப்பளவில் அமைந்துள்ளது. அதிகரித்து வரும் மனித அத்துமீறல், பரவலான வேட்டையாடுதல், சட்டவிரோத மரம் வெட்டுதல் மற்றும் வாழ்விட இழப்பு ஆகிய காரணங்களினால் இந்த பாதுகாப்பகம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது.[7]

வனவிலங்கு

[தொகு]

தாவரங்கள்

[தொகு]

இந்த சரணாலயத்தில் மாநிலத்தின் மதிப்புமிகுதேக்கு காடுகள் அமைந்துள்ளது. அடர்த்தியான காடுகள் மனித இடையூறு இல்லாமல் உள்ளன. கதம் நதி இந்த பகுதி வழியாகப் பாய்கிறது. உலரும் இலையுதிர் கலந்த தேக்கு காடுகள் மூங்கில், தெர்மினலியா, டெரோகார்பசு, அனோஜிசசு மற்றும் கேசியாசு தாவர இனங்கள் இங்குக் காணப்படுகின்றன .

விலங்குகள்

[தொகு]

புலி, சிறுத்தை, காட்டெருமை, புள்ளிமான், சாம்பார், நீலான், குரைக்கும் மான், நாற்கொம்பு மான், மற்றும் தேன் கரடி முதலியன இந்த சரணாலயத்தில் காணப்படும் பாலுட்டிகளாகும். இவைத் தவிர பல வகையான பறவைகள் மற்றும் ஊர்வனவைகளும் இங்கு காணப்படுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kawal to be developed as eco-tourism centre". The Times of India. 2011-11-04. Archived from the original on 2013-08-05. பார்க்கப்பட்ட நாள் 2012-03-17.
  2. "Zoo park stripped of striped beauty - South India - Hyderabad - ibnlive". Ibnlive.in.com. Archived from the original on 2012-07-09. பார்க்கப்பட்ட நாள் 2012-03-17.
  3. "Kawal Wildlife Sanctuary declared tiger reserve". The Hindu. 2012-04-11. பார்க்கப்பட்ட நாள் 2015-02-06.
  4. "Kawal Wildlife Tiger Reserve". forests.telangana.gov.in. Archived from the original on 10 செப்டம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 10 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. {{<http://www.thehindu.com/todays-paper/tp-national/kawal-tiger-reserve-a-green-oasis/article3953160.ece/>}}
  6. Rathod, Bikku and Rambabu M. "Tiger Reserve in Kawal Wildlife Sanctuary: Issues and Concerns". International Journal of Innovative Research and Practices 1. பன்னாட்டுத் தர தொடர் எண்:2321-2926. (
  7. "Andhra Pradesh / Hyderabad News : 'Carry on Heaven' play to be staged tomorrow". The Hindu. 2007-10-06. Archived from the original on 2007-10-13. பார்க்கப்பட்ட நாள் 2012-03-17.

காவால் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள புலி இருப்பு: பிக்கு ரத்தோட் மற்றும் எம்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவால்_புலிகள்_காப்பகம்&oldid=3928853" இலிருந்து மீள்விக்கப்பட்டது