உள்ளடக்கத்துக்குச் செல்

காளிம்பொங்

ஆள்கூறுகள்: 27°04′N 88°28′E / 27.06°N 88.47°E / 27.06; 88.47
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காளிம்பொங்
நகரம்
காளிம்பொங் நகரத்தின் காட்சி
காளிம்பொங் நகரத்தின் காட்சி
காளிம்பொங் is located in மேற்கு வங்காளம்
காளிம்பொங்
காளிம்பொங்
இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் காளிம்பொங் நகரத்தின் அமைவிடம்
காளிம்பொங் is located in இந்தியா
காளிம்பொங்
காளிம்பொங்
காளிம்பொங் (இந்தியா)
ஆள்கூறுகள்: 27°04′N 88°28′E / 27.06°N 88.47°E / 27.06; 88.47
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்காளிம்பொங்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்காளிம்பொங் நகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்9 km2 (3 sq mi)
ஏற்றம்
1,247 m (4,091 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்49,403
 • அடர்த்தி5,692/km2 (14,740/sq mi)
மொழிகள்
 • அலுவல்வங்காளம் மற்றும் நேபாளி [1][2]
 • கூடுதல் மொழிஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
734 301
தொலைபேசி குறியீடு03552
வாகனப் பதிவுWB-78, 79
மக்களவைத் தொகுதிடார்ஜீலிங்
சட்டமன்றத் தொகுதிகாளிம்பொங்
இணையதளம்www.kalimpong.org
வடகிழக்கு இந்தியாவில் தன்னாட்சி பெற்ற பகுதிகளில் ஒன்றான கோர்க்காலாந்தின் காளிம்பொங் மாவட்டம்

காளிம்பொங் (Kalimpong) இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள காளிம்பொங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். [3] இது கடல் மட்டத்திலிருந்து 1250 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.[4] வடகிழக்கு இந்தியவின் தன்னாட்சி பெற்ற பகுதிகளில் ஒன்றான கோர்க்காலாந்து தன்னாட்சிப் பகுதியில்[5] காளிம்பொங் மாவட்டம் உள்ளது. இதன் அருகே சிலிகுரி நகரம் அமைந்துள்ளது. இந்நகரத்தின் கோடைக்கால உயர்வெப்பம் 27°C மற்றும் குளிர்கால வெப்பம் 6°C ஆகும். இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் சிலிகுரியில் உள்ளது. இந்நகரத்திற்கு அருகே வடக்கில் சிக்கிம் மற்றும் வடகிழக்கில் பூட்டான் எல்லைகளாக உள்ளது.

மலைவாழிடமான காளிம்பொங் நகரத்தில் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியாளர்கள் ஆட்சிக் காலத்தில் பல கல்வி நிறுவனங்களை நிறுவினர்.[6] இதனருகில் அமைந்த பெரிய நகரம் டார்ஜீலிங் ஆகும். இந்நகரத்தில் நேபாள மொழி பேசும் கூர்க்கா இன மக்கள் அதிகம் வாழ்கின்றனர்.

காளிபொங் மாவட்டத்தின் தியோலா மலையின் மிக உயரமான இடத்தில் உள்ள விடுதி
கிழக்கு இமயமலைத் தொடரின் காட்சி

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, 23 வார்டுகள் கொண்ட காளிம்பொங் நகராட்சியின் மொத்த மக்கள்தொகை 49,403 ஆகும். அதில் 25,100 ஆண்கள் மற்றும் 24,303 பெண்கள் உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 968 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 90.2% ஆகவுள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 32,454, முஸ்லீம்கள் 2,111, கிறித்தவர்கள் 6,224, பௌத்தர்கள் 8,106 மற்றும் பிறர் 508 ஆகவுள்ளனர். இந்நகர மக்கள்தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,741 மற்றும் 10,230 ஆகவுள்ளனர்.[7] இந்நகரத்தில் நேபாள மொழி பேசும் கூர்க்கா இன மக்கள் அதிகம் வாழ்கினறனர்.

போக்குவரத்து

[தொகு]

சிலிகுரி - காங்டாக் நகரத்தை இணைக்கும் நெடுஞ்சாலை காளிம்பொங் நகரத்தின் வழியாகச் செல்கிறது.

கல்வி

[தொகு]

இந்நகரத்தில் 15க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளது.

தட்ப வெப்பம்

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், காளிம்பொங் (1981–2010, extremes 1920–2012)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 29.9
(85.8)
29.9
(85.8)
31.9
(89.4)
32.4
(90.3)
35.0
(95)
33.6
(92.5)
34.1
(93.4)
31.4
(88.5)
30.2
(86.4)
31.1
(88)
30.1
(86.2)
29.9
(85.8)
35.0
(95)
உயர் சராசரி °C (°F) 18.9
(66)
18.3
(64.9)
21.1
(70)
23.9
(75)
25.0
(77)
25.3
(77.5)
25.4
(77.7)
25.5
(77.9)
25.2
(77.4)
24.2
(75.6)
22.6
(72.7)
19.8
(67.6)
22.9
(73.2)
தாழ் சராசரி °C (°F) 8.4
(47.1)
9.2
(48.6)
11.4
(52.5)
13.8
(56.8)
14.7
(58.5)
15.0
(59)
15.9
(60.6)
16.3
(61.3)
16.1
(61)
14.3
(57.7)
12.0
(53.6)
9.6
(49.3)
13.1
(55.6)
பதியப்பட்ட தாழ் °C (°F) 0.4
(32.7)
1.2
(34.2)
3.8
(38.8)
6.4
(43.5)
4.4
(39.9)
4.6
(40.3)
6.4
(43.5)
7.4
(45.3)
5.9
(42.6)
6.0
(42.8)
3.9
(39)
-0.6
(30.9)
−0.6
(30.9)
மழைப்பொழிவுmm (inches) 17.7
(0.697)
24.3
(0.957)
30.3
(1.193)
96.3
(3.791)
146.5
(5.768)
352.6
(13.882)
646.0
(25.433)
402.8
(15.858)
370.3
(14.579)
80.6
(3.173)
5.3
(0.209)
7.3
(0.287)
2,180.1
(85.831)
ஈரப்பதம் 90 88 87 87 89 89 90 88 90 89 89 91 89
சராசரி மழை நாட்கள் 1.2 1.9 2.6 5.7 9.7 14.2 21.0 15.5 11.8 3.2 0.5 0.6 87.9
ஆதாரம்: India Meteorological Department[8][9]

அடிக்குறிப்புகள்

[தொகு]
  1. "Fact and Figures". www.wb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
  2. "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 85. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 10 March 2019.
  3. "Carved out of Darjeeling, Kalimpong a district today". Times of India. பார்க்கப்பட்ட நாள் 14 February 2017.
  4. "General Information". Tourism Department. Darjeeling Gorkha Hill Council. Archived from the original on 20 நவம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 8 திசம்பர் 2008.
  5. Gorkhaland Territorial Administration
  6. "Education and prospects for employment" (PDF). Government of Sikkim. p. 33. Archived from the original (PDF) on 27 March 2009. பார்க்கப்பட்ட நாள் 21 December 2008.
  7. "Kalimpong Census 2011". Archived from the original on 2020-10-20. பார்க்கப்பட்ட நாள் 2020-04-21.
  8. "Station: Kalimpong Climatological Table 1981–2010" (PDF). Climatological Normals 1981–2010. India Meteorological Department. January 2015. pp. 377–378. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.
  9. "Extremes of Temperature & Rainfall for Indian Stations (Up to 2012)" (PDF). India Meteorological Department. December 2016. p. M236. Archived from the original (PDF) on 5 February 2020. பார்க்கப்பட்ட நாள் 15 March 2020.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காளிம்பொங்&oldid=3549475" இலிருந்து மீள்விக்கப்பட்டது