உள்ளடக்கத்துக்குச் செல்

காரி காஸ்பரொவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காரி கஸ்பாரொவ் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காரி காஸ்பரொவ்
காரி காஸ்பரொவ் 2007
முழுப் பெயர்காரி கிமோவிச் காஸ்பரொவ்
நாடு உருசியா
பட்டம்கிராண்ட்மாஸ்டர்
உலக வாகையாளர்1985–2000
உச்சத் தரவுகோள்2851 (ஜூலை 1999)

காரி காஸ்பரொவ் (Гарри Кимович Каспаров, (பி: ஏப்ரல் 13, 1963, அசர்பைஜான்), உருசியாவின் முதற்தர சதுரங்க ஆட்டவீரரும் முன்னாள் உலக சதுரங்க ஆட்ட வீரரும், எழுத்தாளரும், அரசியல்வாதியும் ஆவார். 2008ம் ஆண்டுக்கான ரஷ்ய அதிபர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார்.

காஸ்பரொவ் வயதில் குறைந்த உலக சதுரங்க ஆட்ட வீரராக (சாம்பியன்) 1985இல் தெரிவானார். 1993 வரை இவர் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (ஃபீடே) உலக சதுரங்க சாம்பியன் பட்டத்தை இவர் வைத்திருந்தார். 1993 இல் ஃபீடே உடனான முரண்பாட்டினை அடுத்து அவ்வமைப்பிலிருந்து விலகி Professional Chess Association என்ற அமைப்பை ஆரம்பித்தார். 200ம் ஆண்டு வரையில் விளாடிமிர் கிராம்னிக்குடன் விளையாடித் தோற்கும் வரையில் காஸ்பரொவ் "மரபுவழி" உலக சதுரங்க வீரர் ("Classical" World Chess Championship) பட்டத்தை தனக்கே தக்க வைத்திருந்தார். பெப்ரவரி 10, 1996 இல் ஐபிஎம்மின் "டீப் புளூ" கணினி இவரை ஆறு ஆட்டத் தொடரில் முதற்தடவையாக ஒரு ஆட்டத்தில் வென்று சாதனை படைத்தது. ஆனாலும் மற்றைய ஐந்து ஆட்டங்களில் மூன்றில் வென்றும் இரண்டில் சமன் செய்தும் காஸ்பரொவ் ஆட்டத்தை வென்றார். மே 1997 இல் டீப் புளூவுடன் இடம்பெற்ற இன்னுமொரு ஆறு-ஆட்டத் தொடர்ப்போட்டியில் டீப் புளூ 3.5-2.5 என்ற கணக்கில் காஸ்பரொவை வென்றது. இதுவே கணினி ஒன்று முதற்தடவையாக மனிதருடன் இடம்பெற்ற போட்டித் தொடரை வென்றது இதுவே முதற்தடவையாகும்.

வெளி இணைப்புகள்

[தொகு]
விளையாட்டு தரவரிசை
முன்னர் பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு World Chess Champion
1985–93
பின்னர்
Classical World Chess Champion
1985–2000
பின்னர்
முன்னர் ரஷ்ய சதுரங்க வீரர்
2004
பின்னர்
சாதனைகள்
முன்னர்
அனத்தோலி கார்ப்பொவ்
அனத்தோலி கார்ப்பொவ்
விளாடிமிர் கிராம்னிக்
உலகத் தரவரிசையில் முதலிடம்
1 ஜனவரி 1984 – 30 ஜூன் 1985
1 ஜனவரி 1986 – 31 டிசம்பர் 1995
1 ஜூலை 1996 – 31 மார்ச் 2006
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரி_காஸ்பரொவ்&oldid=3938418" இலிருந்து மீள்விக்கப்பட்டது