காபோன் செம்பகம்
காபோன் செம்பகம் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | குக்குலிபார்மிசு
|
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. anselli
|
இருசொற் பெயரீடு | |
Centropus anselli சார்ப்பி, 1874 |
காபோன் செம்பகம் (Gabon coucal-சென்ட்ரோபசு அன்செல்லி) என்பது குகுலிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை குயில் சிற்றினம் ஆகும். இது முக்கியமாக காபோனில் காணப்படுகிறது. கமரூன், அங்கோலா, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, மேற்கு காங்கோ பேசின் மற்றும் எக்குவடோரியல் கினி ஆகிய அண்டை பகுதிகளிலும் காணப்படுகிறது.
விளக்கம்
[தொகு]காபோன் செம்பகம் 46 முதல் 58 cm (18 முதல் 23 அங்) நீளம் வரை வளரும் பெரிய அளவிலான செம்பகம் ஆகும் நீளம். ஆண் பெண் பறவைகள் ஒரே மாதிரியானவை. முதிர்ச்சியடைந்த பறவையின் தலை, கழுத்தின் பக்கங்கள் மற்றும் முதுகு கருப்பு, ஊதா நிறத்தில் பளபளப்பாகக் காணப்படும். இறக்கைகள் அடர் பழுப்பு மற்றும் அடர் கசுகொட்டை நிறத்திலும் வால் கருப்பு-வெண்கலம் பச்சை நிறத்தில் பளபளப்பானது. கண்கள் சிவப்பாகவும், அலகு கருப்பாகவும், பாதங்கள் கருப்பாகவும் இருக்கும். இளம் பறவைகள் முதிர்ச்சியடைந்த பறவைகள் போலத் தோற்றமுடையன ஆனால், கருப்பு நிறமானது பெரும்பாலும் அடர் பழுப்பு நிறமாக மாறுகின்றது.
பரவலும் வாழிடமும்
[தொகு]காபோன் செம்பகம் வெப்பமண்டல மேற்கு மத்திய ஆபிரிக்காவில் காணப்படுகிறது. இதன் வரம்பில் காபோன் மற்றும் தெற்கு காமரூன், தென்மேற்கு மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, மேற்கு காங்கோ, மத்திய காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் வடமேற்கு அங்கோலாவின் சுற்றியுள்ள நாடுகள் அடங்கும். இது நன்கு வளர்ந்த காடு, இரண்டாம் நிலை காடு, வன விளிம்புகள், சதுப்புநிலம் மற்றும் பயிரிடப்படாத விவசாய நிலங்களில் வாழ்கிறது.[2]
சூழலியல்
[தொகு]காபோன் செம்பகம் ஒரு மறைந்து வாழும் பறவை, அடர்ந்த அடிமரத்தில் பார்ப்பது எளிதல்ல, ஆனால் குறிப்பாக ஒரு நாள் துவங்கும் நேரத்திலும் முடியும் நேரத்திலும் இதன் அழைப்பைக் கேட்கலாம். இது பெரும்பாலும் தரையில், வெட்டுக்கிளிகள், வண்டுகள், மெல்லுடலி, தவளைகள், பறவைகள், பல்லிகள் மற்றும் சிறிய பாம்புகளை உண்ணும்.இனப்பெருக்கம் பெரும்பாலும் மழைக்காலத்தில் அல்லது ஈரமான பகுதிகளில், இரண்டு ஈரமான பருவங்களுக்கு இடையில் வறண்ட இடைவெளியில் நடைபெறுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2016). "Centropus anselli". IUCN Red List of Threatened Species 2016: e.T22684266A93022489. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22684266A93022489.en. https://www.iucnredlist.org/species/22684266/93022489. பார்த்த நாள்: 12 November 2021.
- ↑ Erritzøe, Johannes; Mann, Clive F.; Brammer, Frederik; Fuller, Richard A. (2012). Cuckoos of the World. Bloomsbury Publishing. p. 162. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-4267-7.Erritzøe, Johannes; Mann, Clive F.; Brammer, Frederik; Fuller, Richard A. (2012).