காட்டு மைனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Acridotheres|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
காட்டு மைனா
A. f. fuscus
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Acridotheres
இனம்: வார்ப்புரு:Taxonomy/AcridotheresA. fuscus
இருசொற் பெயரீடு
Acridotheres fuscus
(Wagler, 1827)[2]
Subspecies
வேறு பெயர்கள்
 • Aethiopsar fuscus
 • Maina cristelloides Hodgson, 1836[3]
 • Acridotheres cristatelloides Cabanis, 1850[4]

காட்டு மைனா ( jungle myna, (Acridotheres fuscus ) என்பது ஸ்டார்லிங் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மைனா ஆகும். இது இந்திய துணைக்கண்டத்தின் பெரும்பகுதி முழுவதும் பரவலாக காணப்படுகிறது. என்றாலும் இது இந்தியாவின் வறண்ட பகுதிகளில் இல்லை. இதன் நெற்றியின் முன் செங்குத்தாக உள்ள கறுப்புத் தூவிகளால் இதை எளிதில் அடையாளம் காண இயலும். இது ஜாவன் மைனா மற்றும் வெளிர்-வயிற்று மைனாக்கள் ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்புடையது. அவை கடந்த காலத்தில் இதன் துணையினமாக கருதப்பட்டன. இதன் துணையினங்களைப் பொறுத்து இதன் விழிப்படலம் வெண்மை, மஞ்சள், நீல நிறங்களில் காணப்படும். ஆரஞ்சு-மஞ்சள் அலகின் அடிப்பகுதி கருமையாக இருக்கும். பிஜி, தைவான், அந்தமான் தீவுகள், யப்பானின் சில பகுதிகள் உட்பட உலகின் பல பகுதிகளிலும் இது வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ அறிமுகப்படுத்தப்பட்டது. பசிபிக் பெருங்கடலில் உள்ள சில தீவுகளுக்கும் இந்த இனம் பரவியுள்ளது.

விளக்கம்[தொகு]

காட்டு மைனா சுமார் 23-சென்டிமீட்டர் (9.1 அங்) நீளம் கொண்டது. இதன் இறகுகள் சாம்பல் நிறத்திலும், தலையும், இறக்கைகளில் கருமையாக இருக்கும். இறகுகளைக் கொண்டு பாலினங்களிடையே வேறுபாடு அறியமுடியாது. இறக்கைளின் அடிப்பகுதியில் பெரிய வெள்ளைத் திட்டு காணப்படும். அந்த திட்டானது இப்பறவை பறக்கும்போது தெளிவாகத் தெரியும், மேலும் வால் இறகுகளின் முனைகள் வெள்ளை நிறத்தில் அமைந்துள்ளன. அலகடியில் நெற்றியின் முன் சில கறுப்புத் தூவிகள் செங்குத்தாக நிற்கும். அலகும், கால்களும் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் இருக்கும். மேலும் சாதாரண மைனா மற்றும் பேங்க் மைனாவைப் போல கண்ணைச் சுற்றித் தூவியற்ற மஞ்சள் பகுதி இல்லை. தென்னிந்தியாவில் காணப்படும் துணையினத்தின் விழிப்படலம் நீலங் கலந்த வெண்மையாக இருக்கும். வடகிழக்கு இந்தியாவில் காணப்படும் துணையினத்தின் வாலடியும், வயிறும் புகைக் கருமையாக இருக்கும். முதிர்ச்சியடையாத பறவைகளின் தொண்டை வெளிரியதாகவும், அடிப்பகுதியின் நடுப்பகுதியானது பழுப்பு நிறமாகவும் இருக்கும்.

அசாதாரணமாக சில பறவைகளின் இறகுகள் லூசிஸ்டிக் என்னும் நிறமி இழப்பு குறைபாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. [5]

ஏ. எஃப். நீலக் கருவிழியுடன் கூடிய மஹரட்டென்சிஸ்

பரவலும் வாழ்விடமும்[தொகு]

இறக்கையின் அடிப்பகுதியிலும், வால் நுனியிலும் காணப்படும் வெண்மைத் திட்டுகள் பறக்கும்போது நன்கு புலப்படுகிறது

காட்டு மைனா நேபாளம், வங்காளதேசம், இந்தியாவிலிருந்து வெப்பமண்டல தெற்கு ஆசியாவில் பொதுவாக வசிக்கின்றது. இதன் துணை இனமான ஃபஸ்கஸ் வட இந்தியா முழுவதும் மேற்கு அபு மலையிலிருந்து கிழக்கே ஒடிசாவில் புரி வரை காணப்படுகிறது. [6] இது அந்தமான் தீவுகள் மற்றும் பிஜியில் கரும்புத் தோட்டங்களில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 1890 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. [7] இவை நியுவாஃபோ போன்ற சில பசிபிக் தீவுகளில் தாங்களாகவே பரவின அங்கு இவை லோரி ( வினி ) போன்ற பூர்வீக பறவை இனங்களுக்கு அச்சுறுத்தலாக மாறி, குறிப்பாக மரப் பொந்துகளுக்காக பூர்வீகப் பறவைகளுடன் போட்டியிடுகின்றன. [8] ஆசியாவின் பல பகுதிகளில், இவை செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. மேலும் தைவான் போன்ற பல இடங்களில் காட்டுப் பறவைகளாகவும் மாறியுள்ளன. [9] யப்பான் [10] மற்றும் மேற்கு சமோவாவில் இப்பறவைகள் இனப்பெருக்கம் செய்பவையாக மாறியுள்ளன. [11]

இந்த சாதாரணக் பாசரைன் பொதுவாக விளைநிலங்களைச் சார்ந்த காட்டுப் பகுதியில் காணப்படுகிறது. பெரும்பாலும் திறந்த நீர்நிலைக்கு அருகில் காணப்படுகிறது. குறிப்பாக இனப்பெருக்க காலத்திற்குப் பிறகு இவை தன் வாழிட எல்லைக்கு வெளியே செல்லக்கூடும். [12]

நடத்தையும் சூழலியலும்[தொகு]

மேற்கு வங்காளத்தில் கருங்கரிச்சானோடு எருமையின் மீது அமர்ந்து உணவு தேடுதல்

காட்டு மைனாக்கள் முக்கியமாக பூச்சிகள், பழங்கள், விதைகளை உண்பவையாகும். இதற்காக இவை முக்கியமாக மற்ற மைனா இனங்களுடன் சேர்ந்து நிலத்தில் உணவு தேடுகின்றன. இவை உண்ணிச்செடி போன்ற உயரம் குறைந்த புதர்களின் பழங்களை உணவாகக் கொள்கின்றன. மேலும் எரித்ரினா போன்ற பெரிய பூக்களில் இருந்து தேன் எடுக்கிறன (அலகடியிலும், நெற்றியிலும் தூரிகைகள் போலக் காணப்படும் தூவிகள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவக்கூடும்) மற்றும் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்பதோடியா காம்பானுலாட்டா போன்ற மரங்களின் பூக்களில் சேகரிக்கப்பட்ட நீரையும் உண்கின்றன. [13] [14] இவை பெரிய மேய்ச்சல் பாலூட்டிகளின் மீது அமர்ந்து, அவற்றின் உடலில் உள்ள புற ஒட்டுண்ணிகளை எடுக்கின்றன, [15] மேலும் மேய்ச்சல் விலங்கு நடக்கும்போது தாவரங்களில் இருந்து பறக்கும் பூச்சிகளைப் பிடிக்கின்றன. வயல்களில் உழவில் ஈடுபடும் விவசாயியை இப்பறவைகள் பின்தொடரும். நகர்ப்புறங்களில் உள்ள சமையலறைக் கழிவுகளையும் இவை உணவாகத் தேடி வருகின்றன. [16] இவை தங்கள் குஞ்சுகளுக்கு உணவளிக்க சிறிய எலிகள் உட்பட பெரிய இரையைக் எடுக்கலாம். [17]

தென்னிந்தியாவில் (தெற்கத்தியக் காட்டு மைனா) பெப்ரவரி முதல் மே வரையிலும், வட இந்தியாவில் ஏப்ரல் முதல் சூலை வரையிலும் கோடைக்கும் மழைக்கு முன் பருவத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. [18] இவை மரங்களில் உள்ள பழைய பொந்துகளிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட கட்டுமானங்களில், தரையில் இருந்து இரண்டு முதல் ஆறு மீட்டர் உயரம் வரை உள்ள துளைகளையும் கூடாக பயன்படுத்துகின்றன. மரங்களில் உள்ள பழை பொந்துகளுக்காக, இவை மற்ற பறவைகளுடன் போட்டியிடுகின்றன. [19]

மேற்கோள்கள்[தொகு]

 1. BirdLife International (2016). "Acridotheres fuscus". IUCN Red List of Threatened Species 2016: e.T22710932A94268185. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22710932A94268185.en. https://www.iucnredlist.org/species/22710932/94268185. பார்த்த நாள்: 12 November 2021. 
 2. Wagler, Johann Georg (1827). Systema Avium. Pars I. pars 1. sumtibus J.G. Cottae. பக். 88. https://biodiversitylibrary.org/page/54130605. 
 3. Hodgson, B.H. (1836). "Additions to the ornithology of Nepal". Journal of the Asiatic Society 5: 770–781. https://biodiversitylibrary.org/page/37188950. 
 4. Sharpe, R. Bowdler (1890). Catalogue of the Birds in the British Museum. 13. London: British Museum (Natural History). பக். 86–90. https://biodiversitylibrary.org/page/8328028. 
 5. Finn, F (1902). "On some cases of abrupt variation in Indian birds". Journal of the Asiatic Society of Bengal 71 (2): 81–85. https://biodiversitylibrary.org/page/35558658. 
 6. Majumdar, N (1981). "Extension of range of the Indian Maroonbreasted sunbird, Nectarinia lotenia hindustanica (Whistler) [Aves, Nectariniidae, and the Northern Jungle Myna, Acridotheres fuscus fuscus (Wagler) [Aves, Sturnidae]"]. Journal of the Bombay Natural History Society 78 (2): 383–384. https://biodiversitylibrary.org/page/48228911. 
 7. Pernetta, John C.; Watling, D. (1978). "The introduced and native terrestrial vertebrates of Fiji". Pacific Science 32 (3): 223–244. https://scholarspace.manoa.hawaii.edu/bitstream/10125/1436/1/v32n3-223-244.pdf. 
 8. Rinke, Dieter (1986). "The status of wildlife in Tonga" (in en). Oryx 20 (3): 146–151. doi:10.1017/S0030605300019980. பன்னாட்டுத் தர தொடர் எண்:1365-3008. https://archive.org/details/sim_oryx_1986-07_20_3/page/146. 
 9. Shieh, Bao-Sen; Lin, Ya-Hui; Lee, Tsung-Wei; Chang, Chia-Chieh; Cheng, Kuan-Tzou. "Pet Trade as Sources of Introduced Bird Species in Taiwan". Taiwania 51 (2): 81–86. http://tai2.ntu.edu.tw/Taiwania/pdf/tai.2006.51.81.pdf. 
 10. Eguchi, K.; Amano, H.E. (2004). "Spread of exotic birds in Japan". Ornithological Science 3: 3–11. doi:10.2326/osj.3.3. https://www.jstage.jst.go.jp/article/osj/3/1/3_1_3/_pdf. 
 11. Evans, S. M.; Fletcher, F. J. C.; Loader, P. J.; Rooksby, F. G. (1992). "Habitat exploitation by landbirds in the changing Western Samoan environment" (in en). Bird Conservation International 2 (2): 123–129. doi:10.1017/S0959270900002355. பன்னாட்டுத் தர தொடர் எண்:1474-0001. 
 12. Dhindsa, Manjit S; Singhal, R.N. (1983). "Occurrence of the Northern Jungle Myna Acridotheres fuscus Wagler in the Punjab and Haryana". J. Bombay Nat. Hist. Soc. 80 (2): 416–417. https://biodiversitylibrary.org/page/48744026. 
 13. Watling, R.J. (1975). "Observations on the ecological separation of two introduced congeneric mynahs (Acridotheres) in Fiji". Notornis 22 (1): 37–53. https://www.notornis.osnz.org.nz/system/files/Notornis_22_1.pdf#page=41. 
 14. Raju, Aluri J. S.; Rao, S.P. (2004). "Passerine bird pollination and fruiting behaviour in a dry season blooming tree species, Erythrina suberosa Roxb. (Fabaceae) in the Eastern Ghats forests, India". Ornithological Science 3 (2): 139–144. doi:10.2326/osj.3.139. https://www.jstage.jst.go.jp/article/osj/3/2/3_2_139/_pdf. 
 15. Sazima, Ivan (2011). "Cleaner birds: a worldwide overview". Revista Brasileira de Ornitologia 19 (1): 32–47. http://repositorio.unicamp.br/bitstream/REPOSIP/55989/1/WOS000305115000004.pdf. பார்த்த நாள்: 18 October 2018. 
 16. Narang, M.L.; Lamba, B.S. (1984). A contribution to the food habits of some Indian Mynas (Aves). (Records of the Zoological Survey of India Miscellaneous Publication Occasional Paper, 44.. Calcutta: Zoological Survey of India. https://archive.org/details/dli.zoological.occpapers.044/page/n71. 
 17. Johnsingh, A.J.T. (1979). "A note on the predation of Jungle Myna (Acridotheres fuscus Wagler) on field mouse". Journal of the Bombay Natural Historical Society 76: 159. https://biodiversitylibrary.org/page/48240520. 
 18. Baker, E.C.S. (1926). The Fauna of British India, including Ceylon and Burma. Birds. Volume III. https://archive.org/details/BakerFbiBirds3. 
 19. Jha, Aniruddha (2001). "Competition between jungle myna Acridotheres fuscus and lesser golden backed woodpecker Dinopium benghalense for a nest hole". Journal of the Bombay Natural History Society 98: 115. https://biodiversitylibrary.org/page/48583324. 

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
the jungle myna
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டு_மைனா&oldid=3852360" இலிருந்து மீள்விக்கப்பட்டது