களத்தில் சந்திப்போம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
களத்தில் சந்திப்போம்
இயக்கம்என். ராஜசேகர்
தயாரிப்புஆர். பி. சௌத்ரி
கதைஎன். ராஜசேகர்
ஆர். அசோக் (உரையாடல்கள்)
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புஜீவா
அருள்நிதி
மஞ்சிமா மோகன்
பிரியா பவானி சங்கர்
பிரயகா மார்ட்டின்
ஒளிப்பதிவுஅபிநந்தன் இராமானுஜம்
படத்தொகுப்புதினேஷ் பொன்ராஜ்
கலையகம்சூப்பர் குட் பிலிம்ஸ்
வெளியீடுபெப்ரவரி 5, 2021 (2021-02-05)
ஓட்டம்138 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

களத்தில் சந்திப்போம் (Kalathil Santhippom) என்பது 2021ஆம் ஆண்டு ஆர். அசோக் எழுதிய உரையாடல்களுடன் என். ராஜசேகர் எழுதி இயக்கிய இந்திய தமிழ் மொழி விளையாட்டு மசாலா திரைப்படமாகும். இந்த படத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன் ,பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.[1] இந்தப் படம் கபடி விளையாட்டையும், ஆரம்பத்தில் போட்டியாளர்களாக கருதப்பட்ட அசோக், ஆனந்த் ஆகிய இருவரின் நட்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் நடித்த நடிகர் நாடோடிகள் கோபால் திரைப்பட வெளியீட்டிற்கு முன்னதாக 5 மார்ச் 2020இல் இறந்து போனார். இது 5 பிப்ரவரி 2021 அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டு, விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[2][3]

நடிகர்[தொகு]

கதைச் சுருக்கம்[தொகு]

ஆனந்த் ( அருள்நிதி ), அசோக் ( ஜீவா ) ஆகிய இருவரும் சடுகுடு மைதானத்தில் போட்டியாளர்கள். ஆனால் மைதானத்திற்கு வெளியே நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். திரைப்படம் அடிப்படையில் அவர்கள் குடும்பங்கள் மற்றும் தனிப்பட்ட காதல் உறவுகள் தொடர்பாக அவர்கள் ஒன்றாக எதிர்கொள்ளும் தடைகளை ஆராய்கிறது. அதையெல்லாம் அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை ஆராயும் படமாகச் செல்கிறது.

படத்தின் இசையையும் பின்னணி இசையையும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாடல்களை பா.விஜய், விவேகா ஆகிய இருவரும் எழுதியுள்ளனர். "யார் அந்த ஓவியத்தாய்"என்ற முதல் தனிப்பாடல் 26 அக்டோபர் 2020இல் வெளியிடப்பட்டது. பார்வையாளர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.[4]

சான்றுகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]