உள்ளடக்கத்துக்குச் செல்

மஞ்சிமா மோகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மஞ்சுமா மோகன்
Manjima Mohan
பிறப்பு11 மார்ச்சு 1993 (1993-03-11) (அகவை 31)
இந்தியா,கேரளம், திருவனந்தபுரம்
தேசியம்இந்தியர்
பணிநடிகை.
செயற்பாட்டுக்
காலம்
1998 – தற்போதுவரை
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஒரு வடக்கன் செல்பி, அச்சம் என்பது மடமையடா,சாகசம் ஸ்வாசகம் சகிபோ
பெற்றோர்விபின் மோகன்
கலாமண்டலம் கிரிஜா

மஞ்சிமா மோகன் (ஆங்கில மொழி: Manjima Mohan) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளம், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இவர் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். இவர் தன் திரைப்பட வாழ்வை 1990 களின் இறுதியில் 2000 த்தின் துவக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக துவக்கினார்.

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

மஞ்சிமா மோகனின் பெற்றோர் திரைப்பட ஒளிப்பதிவாளர் விப்பின் மோகன் மற்றும் நடனக்கலைஞர் கலாமண்டலம் கிரிஜா ஆகியோராவர். இவர் கேரளத்தின் திருவனந்தபுரத்தில் நிர்மலா பவன் மேல்நிலைப்பள்ளியில் 12 வகுப்புவரை படித்தார். இவர் சென்னை  ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் கணிதவியலில் இளங்கலை பட்டம் முடித்தார்.[1] நடிகர் கவுதம் கார்த்திக்கை திருமணம் செய்துள்ளார்.

திரைப்பட வாழ்வு

[தொகு]

இவருக்கு நடிப்பில் ஆர்வம் இருந்தபோதிலும், "தனக்கு நம்பிக்கை இருக்கவில்லை" என குறிப்பிட்டுள்ளார்.[2] படத்தில் நடிக்க துவங்கியபோது அது திகிலூட்டுவதாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். ஜி. பிரஜாத் இயக்கத்தில் வினித் ஸ்ரீநிவாசனின் திரைக்கதையில் ஒரு வடக்கன் செல்பி படத்தில், முன்னணி பெண் பாத்திரத்தில் நடித்தார்.[3]

ஒரு வடக்கன் செல்பி படம் வெளியானதைத் தொடர்ந்து, மஞ்சிமா தனது தனது முதல் தமிழ் திரைப்படமான கௌதம் மேனனின் இயக்கத்தில் அச்சம் என்பது மடமையடா படத்தில் அறிமுகமானார்.

திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு பெயர் பாத்திரம் மொழி குறிப்பு
1998 கலியோஞ்சல்

இளவயது அம்மு மலையாளம் குழந்தை நட்சத்திரம்
1998 மயில்பீலீக்கவு

காயத்திரியின் உறவினர் மலையாளம் குழந்தை நட்சத்திரம்
1999 சாப்பல்யம்

ஸ்ரீதும்போல் மலையாளம் குழந்தை நட்சத்திரம்
2000 பிரியம்

அனு
மலையாளம் குழந்தை நட்சத்திரம்
2000 தென்காசிப்பட்டணம்

இளவயது டிவோட்டி மலையாளம் குழந்தை நட்சத்திரம்
2000 மதுரமனோம்பர்கட்டு  மாயா மலையாளம் கேரள மாநிலத்தின் சிறந்த குழந்தை நடசத்திர விருது
2001 சுந்தர புருசன்

சூரியநாராயணனின் மகள்  மலையாளம் குழந்தை நட்சத்திரம்
2002 தாண்டவம்


மலையாளம் குழந்தை நட்சத்திரம்
2015 ஒரு வடக்கன் செல்பி

டைசி ஜார்ஜ் மலையாளம் கதாநாயகியாக அறிமுகம்
2016 அச்சம் என்பது மடமையடா லீலா தமிழ் கதாநாயகியாக அறிமுகம்
2016 சாகசம் ஸ்வாசக சகிப்பொ லீலா தெலுங்கு கதாநாயகியாக அறிமுகம்
2016 முடி சூடா மன்னன் தமிழ் படப்பிடிப்பில்
2016 கௌரவ் நாராயணனின் பெயரிடப்படாதப் படம் தமிழ் படப்பிடிப்பில் சத்தியன்

|}

மேற்கோள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சிமா_மோகன்&oldid=4114299" இலிருந்து மீள்விக்கப்பட்டது