கல்பாசு மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
    இது லேபியோ கல்பாசு என்னும் இனத்தைச் சேர்ந்தது. கேரளாவில் மலைப் பகுதிகளைத் தவிர இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் பரந்து காணப்படுகிறது. இதன் உடல் சற்று கருநிறமாக இருப்பதனால் இம்மீன்கள் காக்கா மீன் என்று அழைக்கப்படுகிறது. 

உடல் அமைப்பு[தொகு]

    தலை சிறியதாகவும், தட்டையாகவும் இருக்கும். தலையின் கீழாக அதன் முனைப்பகுதியில் வாய் அமைந்துள்ளது. உதடுகள் விளிம்புகளுடன் காணப்படுகிறது. உணர் இழைகள் கருநிறத்துடன் தெளிவாக காணப்படும். முதுகுபுறத் துடுப்பில் 12 முதல் 13 கிளைகளுடன் கூடிய துடுப்பு முற்கள் உள்ளன.

உணவுப் பழக்கம்[தொகு]

    இம்மீன்கள் நீரின் அடிமட்ட உணவுப் பழக்கம் உடையது. நத்தை, புழுக்கள் போன்ற விலங்கு உயிரிகளை உணவாக உட்கொள்ளும். மேலும் மடிந்த மக்கிய கரிமப் பொருட்களையும், பாசிகளையும் உணவாக உட்கொள்ளும். அதனால் இம்மீன்கள் அனைத்துண்ணிகள் என்று அழைக்கப்படுகிறது. 

இனப்பெருக்கம்[தொகு]

    இம்மீன்கள் அதிகபட்சமாக 75 செ.மீ. நீளம் வரை வளரக்கூடியது. வளர்ச்சியின் இரண்டாம் ஆண்டில் பால் முதிர்ச்சி அடைகிறது. மற்ற பெரிய வகை கெண்டைகளைப் போலவே இம்மீன்கள் இனப்பெருக்கம் செய்கின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. ரெங்கராஜன், இரா.(2008), மீனின உயிரியல் மற்றும் நீரின வளர்ப்பு, சாரதா பதிப்பகம், சென்னை, ப. 89, 90.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பாசு_மீன்&oldid=2385579" இருந்து மீள்விக்கப்பட்டது