பிரான்சிஸ் புக்கானன்-ஹாமில்டன்
முனைவர் பிரான்சிஸ் புக்கானன்-ஹாமில்டன் (Francis Buchanan-Hamilton), பொதுவாக பிரான்சிஸ் ஹாமில்டன் என்றழைக்கப்படுபவர் (1762-1829) கிழக்கிந்திய கம்பனியில் மருத்துவ அலுவலராக பணிபுரிந்தவராவார். ஆய்வாளர் மற்றும் இயற்கை ஆர்வலர்.
பிறப்பு
[தொகு]இவர் ச்பிட்டல் தாமஸ் புக்கானன் மற்றும் எலிசபெத் ஹாமில்டனின் மூன்றாவது மகன். 15ஆம் நாள் பிப்ரவரி மாதம் 1762ல் பிறந்தார்.
முக்கியத்துவம்
[தொகு]கிழக்கிந்தியக் கம்பெனியின் கவர்னர் ஜெனரல் வெல்லஸ்லியின் அவர்களின் உத்தரவின் பேரில் சென்னையிலிருந்து மேற்குக் கடற்கரையிலுள்ள கனரா வரை, தரை வழியே பயணம் மேற்கொண்டார். ஆங்கிலம் மற்றும் ஐரோப்பிய மொழிகளை மட்டும் அறிந்த ஆங்கிலேய அதிகாரிகளால், ஆட்சியைச் சிறப்பாக நடத்த இயலாது என்பதை உணர்ந்த கம்பெனி அரசு, கலெக்டர், நீதிபதி, காவல்துறை அதிகாரிகள் போன்றோர் உள்ளூர் மொழியைக் கற்க வேண்டும்; அதற்கான தேர்வுகளில் தேர்ச்சி பெறவேண்டும் என்று 1800-ஆம் ஆண்டிலேயே உத்தரவைப் பிறப்பித்தது.[1][2][3]
இவரின் படைப்புகள்
[தொகு]- சென்னையிலிருந்து ஒரு பயணம் (A Journey from Madras through the countries of Mysore, Canura, and Malabar) [4]
- நேபால் இராச்சியம் (1819) (Account of the Kingdom of Nepal)
- இந்து மதம் கடவுள்களின் வம்சாவளிகள் (A Genealogy of the Hindu Gods (1819))
- கங்கை மீன்கள் பற்றிய கணக்கு An Account of the Fishes of the Ganges (1822)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Guide to Records, Coimbatore District, pg.139
- ↑ http://www.thoguppukal.in/2012/02/blog-post_6267.html[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-08-13. பார்க்கப்பட்ட நாள் 2013-11-17.
- ↑ https://archive.org/details/journeyfrommadra01hami