கலீபா முகமது அசதுல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கலீபா முகமது அசதுல்லா (Khalifa Mohammad Asadullah) இந்திய துணைக் கண்டத்தில் நூலக இயக்கத்தின் முன்னோடியாக இருந்தார். 1947 ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்ற போது பாக்கித்தானைத் தேர்ந்தெடுத்த முதல் முக்கிய நூலகர் ஆவார் [1] [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

1980 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 6 ஆம் தேதியன்று பிரித்தானிய இந்தியாவின் (இப்போது பாக்கித்தான்) லாகூரில் சிம்லாவைச் சேர்ந்த மௌல்வி முகமது சியாவுல்லா மற்றும் ஆலம் இயான் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். [3] தனது அடிப்படைக் கல்வியை லாகூரில் பெற்றார் மற்றும் லாகூரில் உள்ள ஃபார்மன் கிறிசுட்டியன் கல்லூரியில் [2] 1913 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார்.

1908 ஆம் ஆண்டில் இவர் லாகூரில் அமீதா பேகத்தை மணந்து 14 குழந்தைகளுக்குத் தந்தையானார். பாக்கித்தான் அரசில் அறிவியல் விருது பெற்ற கலீஃபா முகமது இப்திகாருல்லா , கலீஃபா முகமது நசீமுல்லா, கலீஃபா முகமது அமீதுல்லா, கலீபா முகமது இக்சானுல்லா, கலீஃபா முகமது இயஃபருல்லா (பாக்கித்தான் கடற்படைத் தளபதி), கலீபா முகமது அமினுல்லா ஆகியோர் இவரது பிள்ளைகளில் அடங்குவர். ஏவிஎம் சயீதுல்லா கான் மற்றும் பாக்கித்தான் தூதர் என்வர் முராத் ஆகியோர் இவரது மருமகன்களில் அடங்குவர்; சைப்-உன்-நிசா அமிதுல்லாவும் இவரது மகளாவார். பாக்கித்தானிய நாவலாசிரியர் உசுமா அசுலம் கான் இவரது கொள்ளுப் பேத்தியாவார்.

1915 ஆம் ஆண்டில் இவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அமெரிக்க நூலகர் ஆசா டான் டிக்கின்சனின் கீழ் படித்தார். [4]

தொழில்[தொகு]

1916 ஆம் ஆண்டில் லாகூரில் உள்ள அரசுக் கல்லூரியின் முதல் தகுதிபெற்ற நூலகர் ஆனார். [5] பின்னர் 1919 ஆம் ஆண்டில் அரசு முகமது ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியின் (தற்போது அலிகார் முசுலிம் பல்கலைக்கழகம் ) நூலகர் ஆனார் [1] 1921 ஆம் ஆண்டில் புது தில்லி மற்றும் சிம்லாவில் உள்ள இம்பீரியல் செயலக நூலகத்தில் சேர்ந்தார். 8 ஆண்டுகள் இப்பதவியில் இருந்தார். [1]

பாக்கித்தான்[தொகு]

1947 ஆம் ஆண்டு பாக்கித்தான் சுதந்திரம் அடைந்த பிறகு, கல்வி அமைச்சகத்தில் சிறப்புப் பணி அதிகாரியாக நியமிக்கப்பட்டார். [1]

1933 ஆம் ஆண்டில் இவர் இந்திய நூலக சங்கத்தின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும், 1933 முதல் 1947 வரை அதன் முதல் செயலாளராகவும் இருந்தார் [1] பிரித்தானிய இந்தியாவில் உள்ள இந்திய இம்பீரியல் நூலகத்தில் 1930 – 1947 ஆம் ஆண்டு வரை நூலகராகவும் இயக்குநராகவும் பணியாற்றினார். [6]

கௌரவங்கள்[தொகு]

1935 ஆம் ஆண்டில் கான் பகதூர்என்ற பட்டத்துடன் கௌரவிக்கப்பட்டார் [5] [4]

இறப்பு[தொகு]

23 நவம்பர் 1949 அன்று பாக்கித்தானின் லாகூரில் இவர் பக்கவாதத்தால் இறந்தார். [1] லாகூரில் உள்ள பெரோசுபூர் சாலை கல்லறையில் உள்ள இவரது குடும்பப் பிரிவில் அடக்கம் செய்யப்பட்டார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Syed Jalaluddin Haider, Pg 3, Online at: Pioneers of Library Movement in Pakistan Retrieved 10 April 2018
  2. 2.0 2.1 2.2 Afzal Haq Qarshi (5 November 1999). "Khalifa Mohammad Asadullah: A Pioneer of Library Movement in South Asia" (PDF). Pakistani Librarian (magazine). பார்க்கப்பட்ட நாள் 10 April 2018.
  3. Biographical Encyclopedia of the World, Institute for Research in Biography, Inc, New York, NY, USA 1st edition, 1940
  4. 4.0 4.1 Libraries and Librarianship in India on GoogleBooks website Retrieved 10 April 2018
  5. 5.0 5.1 First Librarian at Government College University, Lahore in 1916 (Read about Mohammad Asadullah on website under Libraries) பரணிடப்பட்டது 7 சனவரி 2019 at the வந்தவழி இயந்திரம் Retrieved 10 April 2018
  6. K. M. Asadullah listed as Director and Librarian of the Imperial Library of India (1930 – 1947) பரணிடப்பட்டது 17 சூன் 2016 at the வந்தவழி இயந்திரம் National Library of India website (Historical Background), Retrieved 10 April 2018
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலீபா_முகமது_அசதுல்லா&oldid=3824106" இலிருந்து மீள்விக்கப்பட்டது