இந்திய நூலகச் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய நூலகச் சங்கம் ( Indian Library Association ) என்பது 1933 செப்டம்பர் 13 அன்று கல்கத்தாவில் (தற்போது கொல்கத்தா ) நடைபெற்ற முதல் அகில இந்திய நூலக மாநாட்டின் போது சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் (XXI இன் 1860) கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு சங்கமாகும். இசங்கத்தில் உறுப்பினர்களாக மாநில நூலகச் சங்கங்களும், நூலகங்களும் இருக்கின்றன. இவ்வாறு 7000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டதாக இந்தியாவில் நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறையில் மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற தொழில்முறை அமைப்பாக இது உள்ளது. இதன் தலைமையகம் இந்தியாவின் தில்லியில் அமைந்துள்ளது.

குறிக்கோள்கள்[தொகு]

சங்கத்தின் முக்கிய நோக்கங்கள்:

  • நாட்டில் நூலக இயக்கத்தை ஊக்குவித்தல்
  • நூலகம் மற்றும் தகவல் அறிவியல் கல்வியை மேம்படுத்துதல்
  • பயிற்சி மற்றும் ஆராய்ச்சி, நூலக பணியாளர்களை மேம்படுத்துதல்
  • தேசிய மற்றும் சர்வதேச அளவிலான ஒத்துழைப்பு
  • தரநிலைகள், அளவுகோல், சேவைகள், வழிகாட்டுதல்களை மேம்படுத்துதல்
  • தொழில்முறைஞர், வெளியீட்டாளர்களுக்கான குறைகளை தீர்த்தல்
  • நூலகங்கள், ஆவண மையங்களை நிறுவுதல் மற்றும் அவற்றை நிறுவுவதற்கும் வேலை செய்வதற்கும் உதவி செய்தல்
  • இந்தியாவிற்கு பொருத்தமான நூலக சட்டத்தை மேம்படுத்துதல்

மாநாடுகள்[தொகு]

இதன் 53வது ஆண்டு மாநாடு 2007 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நடைபெற்றது. இதன் 54வது ஆண்டு மாநாடு 2008 இல் மும்பையில் நடைபெற்றது. இதன் 55வது ஆண்டு மாநாடு, நொய்டா பெருநகரில் உள்ள பிர்லா மேலாண்மை தொழில்நுட்பக் கல்விக்கழகத்தில் 2010 சனவரி 21-24 ஆகிய நாட்களில் நடைபெற்றது. 63வது ஆண்டு மாநாடு லக்னோவில் உள்ள பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் 2017 நவம்பர் 23-25 நாட்களில் "நூலகம் மற்றும் தகவல் அறிவியல் தொழிலின் நிலையான வளர்ச்சி" என்ற தலைப்பில் நடைபெற்றது. இது எல்ஐஎஸ் துறை மற்றும் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் லக்னோவின் கௌதம புத்தர் மத்திய நூலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச மாநாடு ஆகும்.

துவக்கக்கால உறுப்பினர்கள்[தொகு]

  • சி. வூல்னர்
  • முகமது ஷஃபி
  • அப்துல் மஜித்
  • முகமது காசிம் அலி
  • அப்னாஷி ராம் தல்வார்
  • பி. சி. நியோகி
  • ஏ. எம். ஆர். மாண்டேக்
  • ஆர். கோபாலன்
  • எஸ். இராமசுப்பையர்
  • ராம் லபயா
  • திரிவிக்ரம ராவ்
  • எஸ். பஷிருதீன்
  • டாக்டர். எம். ஓ. தாமஸ்
  • எஸ். மகேந்திர சிங்
  • டாக்டர் வாலி முகமது
  • எஸ். ஆர். ரங்கநாதன்
  • கே. எம். அசதுல்லா
  • சாந்த் ராம் பாட்டியா
  • கே. செல்லையா
  • சாரதா பிரசாத் சின்ஹா
  • சிதேந்திர தேவ் ராய் மகாசயா
  • டி. சி. தத்தா
  • குமார் முனீந்திர தேவ்
  • ஆர். மகாசயா
  • உபேந்திர சந்திர தாஸ்
  • லாபு ராம்
  • அய்யங்கி வெங்கட ரமணய்யா
  • மஞ்சந்தா
  • யூசுபுதீன் அகமத்

ஜர்னல் ஆஃப் இந்தியன் லைப்ரரி அசோசியேஷன் என்பது இந்திய நூலக சங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழாகும். இந்த இதழ் நூலகம் மற்றும் தகவல் அறிவியலின் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இது 1965 முதல் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இதழாக இருந்து வருகிறது. இந்த இதழ் காலாண்டு வெளியீடாக வெளிவருகிறது.

குறிப்புகள்[தொகு]

  • Ravindra N Sharma. "The Indian Library Association" in Encyclopedia of Library and Information Science. Marcel Dekker Inc. New York. Basel. 1985. Volume 38. Supplement 3. Page 230 et seq.
  • Jagdish Chandra Mehta. 50 Years of Indian Library Association, 1933-1983: Golden Jubilee. 1983.
  • http://www.ilaindia.net/
  • http://www.ilaindia.net/jila/index.php/jila

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_நூலகச்_சங்கம்&oldid=3682595" இலிருந்து மீள்விக்கப்பட்டது