கமல்ஜித் நீரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கமல்ஜித் நீரு, அல்லது சாதாரனமாக நீரு என்றழைக்கப்படும் இவர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த பஞ்சாபி நாட்டுப்புறப் பாடகி மற்றும் நடனக் கலைஞர் ஆவார். [1] இந்தியாவில் பிறந்து தற்போது கனடாவில் வாழ்ந்து வரும் இவர் புகழ்பெற்ற மேடை நிகழ்ச்சிகளுக்காகவும் அதே போல் அவரது குரல் வளத்தாலும் நன்கு அறியப்பட்டவராக திகழ்கிறார்.[2] அவர் இதுவரை மொத்தம் பத்து இசைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார். சீதி தே சீதி, ஜடோன் மேரா லக் ஹில்டா, ருர்ஹா மண்டி ஜாவே, மற்றும் பீஜ் கயே குர்த்தி லால் ஆகியவை இவரது மிகவும் பிரபலமான பாடல்கள் ஆகும்.[3]

சுயசரிதை[தொகு]

கமல்ஜித் நீரு இங்கிலாந்தில் பொழுதுபோக்காக தனது இசை வாழ்க்கையைத் தொடங்கிய அந்தக் காலக் கட்டத்தில் அங்குள்ள பஞ்சாபி சமூக மக்கள் அவா்களின் சொந்த இசை அடையாளத்தை உருவாக்கத் தொடங்கி இருந்தனா்.. முதலில் அங்கு பாடப்பட்ட பஞ்சாபி இசை அனைத்தும் பஞ்சாபின் பூா்வீக வழி வந்தவையாக இருந்தன. இருப்பினும் ஆரம்ப கட்டத்தில் ஒரு சிறிய பங்க்ரா இசைக் குழுக்கள் தங்களின் துள்ளலிசையால் மிக விரைவாக பிரபலமடைந்தது. இக்குழுக்களுக்கு அலாப் குரூப், ஹீரா குரூப், அப்னா சங்கீத், ஏ.எஸ்.காங் மற்றும் டி.சி.எஸ் போன்ற கலைஞர்கள் தலைமை தாங்கினர்.

ஒரு நாள், இரவு உணவருந்திக் கொண்டிருந்த போது, இங்கிலாந்தில் நன்கு அறியப்பட்ட இசை இயக்குநராக இருந்த ஒரு குடும்ப நண்பரான பல்தேவ் மஸ்தானா, கமல்ஜித் நீருவை தனது குழுவான தி சாத்தியிஸில் சேர அழைப்பு விடுத்தார்.

கமல்ஜித் நீருவின் முதல் இசைத் தொகுப்பு சக கலைஞரான துப்பட்டே காலே உர்தேவுடன் இணைந்து 1982 ஆம் ஆண்டில் எச்.எம்.வி என்ற புகழ்பெற்ற இசை வெளியீட்டு நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த இசைக் தொகுப்பில், அவா் பேஜா பேஜா ஹோஜூ மித்ரா என்ற தனிப்பாடலை பாடினார்.

இந்த இசைத் தொகுப்பில் அவரது தனிப்பாடலின் வெற்றியைத் தொடர்ந்து, நேரு தனது 9 தனி இசைத் தொகுப்புகளுடன் , மற்ற 7 கலைஞர்களான ஹான்ஸ் ராஜ் ஹான்ஸ், சர்தூல் சிக்கந்தர், ஹர்பஜன் மான், சபர் கோட்டி, சத்விந்தர் புகா, அமர் நூரி மற்றும் மறைந்த பர்மிந்தர் சந்து ஆகியோரைது பாடல்களையும் நீரு வெளியிட்டார்.

இவர் தனது இசைப் பயண வாழ்க்கையைத் தொடங்கிய போது, ஆணாதிக்க சூழல் நிறைந்த பஞ்சாபி இசை உலகில் ஒரு பெண் பாடகியாகவும் ஒரு மேடைக் கலைஞராகவும் எந்தவொரு புகழோ அல்லது அளவிடக்கூடிய வெற்றியைப் பெறுவதும் மிகவும் கடினமானதுஎன்று றப்பட்டு வந்த சூழலில். நீருவால் இந்த தடைகளை மீறி கணிசமான வெற்றிகளைப் பெற முடிந்ததாகக் கூறப்பகிறது.

நீரு பஞ்சாபில் உள்ள ஒவ்வொரு நகரத்திலும் தனது இசை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.மேலும் அவா் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, துபாய், சிங்கப்பூர், மலேசியா, ஹாலந்து, இங்கிலாந்து, கனடா மற்றும் அமெரிக்காவில் போன்ற வெளிநாடுகளிலும் தன்னுடைய பஞ்சாபி பாரம்பரிய இசை கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

நீரு முதலில் இந்தியாவின் கன்னாவைச் சேர்ந்தவர். அவருடன் பிறந்தவா்கள் மொத்தம் ஐந்து பேர். மேலும் அவரது தந்தை இந்திய ராணுவத்தில் ஒரு அதிகாரியாக இருந்தார், தந்தையின் பணி நிமித்தம் காரணமாக நீரு குழந்தையாக இருந்த போதே இந்தியா முழுவதும் பயணம் செய்தார். பள்ளியில் இருந்தபோது, அவர் ஒரு தீவிர தடகள வீராங்கணையாக இருந்தார், மேலும் நீச்சல் போட்டிகளிலும் ஆர்வம் காட்டினார். திருமணத்திற்கு முன்பு, அவர் தனது மருத்துவத்திற்கு முந்தைய கல்வியை படித்துக் கொண்டிருந்தார், இருப்பினும், அவர் திருமணம் செய்துகொண்டபோது, 1980 இல் ஐக்கிய இராச்சியத்திற்கு குடிபெயர்ந்தார், பின்னர் தனது கல்விப் படிப்பை நிறுத்தி வைத்து விட்டு இசையில் தனது பொழுதுபோக்கைத் தொடங்கினார் பின்னர் இதுவே அவரது தொழிலாக மாறிப் போனது.[4]

1991 ஆம் ஆண்டில், நீரு தனது குடும்பத்துடன் கனடாவின் வான்கூவர் சென்றார் அங்கும் தனது பாடல் கச்சேரி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்தார்.

நீரு தற்போது கனடாவின் வான்கூவரில் தனது தந்தை, கணவர் சுக்பீர் (ஓய்வு பெற்ற வணிக விமானி) காவல் அதிகாரியான அவரது மகன் ஆகியோருடன் வசித்து வருகிறார்.

திரைப்படத்துறை[தொகு]

ஆண்டு தலைப்பு மொழி பங்கு
1998 சர்தாரி பஞ்சாபி சுயமான இசைக் காணொலி
1999 வித்ரோ பஞ்சாபி பின்னணி பாடகர்

மேற்கோள்கள்[தொகு]

  1. Express India News Service, Punjabi music show on Dec 15, Saturday, December 14, 2002
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-08-06. பார்க்கப்பட்ட நாள் 2020-03-30.
  3. https://gaana.com/artist/kamaljeet-neeru
  4. https://www.in.com/entertainment/regional/punjabi-singer-kamaljit-neeru-to-mark-her-acting-debut-soon-294907.htm[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கமல்ஜித்_நீரு&oldid=3547892" இலிருந்து மீள்விக்கப்பட்டது