கங்காவதார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கங்காவதார்
இயக்கம்சி. கே. சச்சி
தயாரிப்புகே. எஸ். எஸ். பிக்சர்ஸ்
நடிப்புநாகர்கோவில் கே. மகாதேவன்
காளி என். ரத்தினம்
பி. ஜி. வெங்கடேசன்
சி. வி. வி. பந்துலு
டி. எஸ். துரைராஜ்
என். சி. வசந்தகோகிலம்
டி. எஸ். தமயந்தி
பத்மா
வி. என். ஜானகி
வெளியீடுபெப்ரவரி 13, 1942
ஓட்டம்.
நீளம்16977 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கங்காவதார் என்பது 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் இந்துத் தொன்மவியல் திரைப்படமாகும். இப்படத்தை சி. கே. சச்சி என்று பிரபலமாக அறியப்பட்ட சி. கே. சதாசிவம் இயக்கினார்.[1] வெளிவந்த இத்திரைப்படமானது சென்னை சுந்தரம் சவுண்ட் ஸ்டுடியோவால் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் என். சி. வசந்தகோகிலம் நடித்தார்.[2][3]

கதை[தொகு]

கங்கை தேவி பூமிக்கு இறங்குவது தொடர்பான இந்து தொன்மவியில் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகப்பட்டது.

நடிப்பு[தொகு]

தி இந்து நாளிதழில் வெளியான இப்படத்தின் படத்தின் விமர்சனக் கட்டுரையிலிருந்து இந்தப் பட்டியல் எடுக்கப்பட்டது.[2]

நடிகர்கள்

நடிகைகள்

தயாரிப்பு[தொகு]

இந்தப் படத்தை சென்னை அடையாறு சுந்தரம் சவுண்ட் ஸ்டுடியோ தயாரித்துள்ளது.[2]

பாடல்[தொகு]

இந்தப் படத்தில் என். சி. வசந்தகோகிலம் பாடிய பாடல்களின் பட்டியல்.

  1. "பாங்கனச்சோலை அலங்காரம்"
  2. "கலைவாணி அருள் புரிவாய்"
  3. "ஆனந்தம் அளவில்லா மிக ஆனந்தம்"
  4. "இதுவென்ன வேதனை"
  5. "ஜய ஜய புவனபதே பாலய ஜய கருணாஜலதே"
  6. "ஆனந்த மாயா வானுலகிதே"
  7. "காவின் மனோகரக் காட்சியின் மான்பே"

வரவேற்பு[தொகு]

திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை 2012 இல் எழுதுகையில், "படம் முக்கியமாக அதன் இசை மற்றும் என். சி. வசந்தகோகிலத்தின் பாடல்களால் மிகவும் நன்றாக இருந்தது." என குறிப்பிட்டார்[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Ashish Rajadhyaksha; Paul Willemen. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. p. 594.
  2. 2.0 2.1 2.2 2.3 Randor Guy (5 May 2012). "Gangavathar 1942". தி இந்து இம் மூலத்தில் இருந்து 21 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170121013341/http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/gangavathar-1942/article3388979.ece. 
  3. "Gangavatar". இந்தியன் எக்சுபிரசு: pp. 3. 14 February 1942. https://news.google.com/newspapers?id=0K0-AAAAIBAJ&sjid=RkwMAAAAIBAJ&pg=4197%2C3683852. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்காவதார்&oldid=3847949" இலிருந்து மீள்விக்கப்பட்டது