ஒலியடக்கி (துப்பாக்கி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஒலி அடக்கி (துப்பாக்கி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
கழற்றவல்ல ஒலியடக்கிகளுடன் சுடுகலன்கள், மேலிருந்து கீழாக: ஊசி, ஏ.ஆர்.15, ஹெக்லர் அண்ட் கோக் யூ.எஸ்.பி, பெரெட்டா 92எப்.எஸ், எஸ்.ஐ.ஜி. மஸ்கிட்டோ.
ஒலி அடக்கி பொருத்திய சி.சட் 452 ஆணி-இயக்க விளிம்புதட்டு மரைத் துமுக்கி 
வி.எஸ்.எஸ். வின்ட்டோரேஸ் மறைசுடு மரைத்துமுக்கி மற்றும் ஏ.எஸ் வால் தாக்குதல் மரைத்துமுக்கியில் உள்ள ஒருங்கிணைந்த ஒலியடக்கி.

ஒலி அடக்கி (ஆங்கிலம்: suppressor, silencer) என்பது, சுடுகலனை சுடும்போது ஏற்படும் வெடியொளியையும், சப்தத்தையும் குறைக்கவல்ல; (துப்பாக்கியின் குழலுடன் இணைக்கப்படும்) கருவியாகும். ஒலியடக்கிகள் பொதுவாக, சப்தத்தை குறைக்கும் அக இயங்குமுறைகளை கொண்ட உலோக உருளையாகும். வெளியேறும் உந்துவாயுக்களின்  வேகத்தை குறைப்பதன்மூலம், சுடும் சப்தத்தை குறைப்பது மட்டுமல்லாமல், தோட்டாவின்  வேகத்தையும் இது அதிகரிக்கிறது 

வரலாறு [தொகு]

அமெரிக்க கண்டுபிடிப்பாளர், ஹைரம் பெர்சி மாக்சிம் வணிகரீதியாக வெற்றிபெற்ற ஒலியடக்கி மாதிரியை, சுமார் 1902-ல் கண்டுபிடித்தவர் ஆவார் (காப்புரிமம் பெற்றது மார்ச் 30, 1909). இவர் மாக்சிம் துப்பாக்கியை கண்டுபிடித்த ஹைரம் ஸ்டீவென்ஸ் மாக்சிம்மின் மகன் ஆவார்.[1][2][3] மாக்சிம் அவரது கருவிக்கு மாக்சிம் ஒலியடக்கி என்று வணிகக்குறிப் பெயரிட்டார்.[4] உள் எரிபொறிக்கான ஒலிக்குறைப்பான்களும் சமகாலத்திலேயே மாக்சிம் உருவாக்கினார்.

சுடுகலன் இரைச்சல் கூறுகள்[தொகு]

முக்கியத்துவத்தின் அடிப்படையில், சுடுகலன் உண்டாக்கும் மூன்று விதமான சப்தங்கள், கீழ்வருமாறு:

  • வெடியொலி (தோட்டாவிற்கு பின் வெளியேறும் அதி-உஷ்ண, அதி-அழுத்த வாயுக்கள்)
  • ஒலி முழக்கம் (மீயொலிவேகம் கொண்ட பொருட்களால் உண்டாகும் அதிர்வலைகளுடன் தொடர்புடைய ஒலி)
  • இயந்திர இரைச்சல் (சுடுகலனின் நகரும் பாகங்களால் )

முதன்மையான இரு காரணங்களாகிய -வெடியொலி மற்றும் ஒலி முழக்கம் - ஆகியவற்றால் தோன்றும் இரைச்சலை மட்டுமே இந்த ஒலியடக்கி பாதிக்கும். ஆனால், இயந்திர இரைச்சலை ஓரளவுக்கு குறைக்க முடிந்தாலும், முழுமையாக நீக்க முடியாதது ஆகும். இந்த காரணத்தால் தான், ஒரு சுடுகலனை சப்தமில்லாமல் ஆக்குவது மிகவும் கடினம்.

வடிவமும் கட்டமைப்பும் [தொகு]

4 ஒலி தணிப்பான்களையும், குழலை "பின்வளைத்த" விரிவுகலனையும் காட்டும், பி.ஆர் டோட் கை பின்வளைவு புரிதுமுக்கி ஒலியடக்கியின் குறுக்கு-வெட்டு வரைபடம். வாயுவை திசைமாற்றும் விதமாக, ஒலி தணிப்பானும் அலைவளைபானும் கச்சிதமான வடிவம் கொண்டுள்ளன. 
வைம் .22 கேலிபர் புரிதுமுக்கி ஒலியடக்கியின் குறுக்கு-வெட்டு வரைபடம். இது குறுகிய விரிவுகலனுடன் 13 நெகிழியால் ஆன ஒலி தணிப்பான்களை உடையது. இந்த ஒலித்தணிப்பான்கள் குறுக்கும் நெடுக்குமாக வைக்கப்பட்டுள்ள தட்டையான பரப்பினால் வாயுவை தொடர்ந்து திசைதிருப்பி விரிவடையச் செய்கிறது.
அமெரிக்க கடற்படையின் ஹஷ் பப்பி மாக்2 ஒலியடக்கியின் குறுக்கு-வெட்டு வரைபடம். இதில் துடைப்பான் (wipe), தோட்டா இதை கடக்கும்போது அதன் பின்னுள்ள உந்துவாயுவை வடிகட்டும்.
எச்&கே 1971 காப்புரிமையில் இருந்து, ஹெக்லர் அண்ட் கோக் எம்.பி 5 எஸ்.டி-ன் ஆரம்ப ஒலியடக்கி மாதிரியின் குறுக்கு-வெட்டு படம்.

ஒலியடக்கி என்பது விரிவுகலன் உடைய, எஃகு, அலுமினியம், அல்லது தைட்டானியம் போன்றவற்றால் ஆன காலியான உலோகக் குழாய் ஆகும். இக்கருவி, கைத்துப்பாக்கி, துணையியந்திர துமுக்கி, அல்லது புரிதுமுக்கியின் சன்னவாயோடு இணைப்பதற்காக உருளை வடிவில் இருக்கும்.

மேலும் பார்க்க [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. "US Patent 958935 - Google Patents"[தொடர்பிழந்த இணைப்பு].
  2. USAR, William S. Brophy (1 May 1989). Marlin Firearms: A History of the Guns and the Company That Made Them. Stackpole Books. பக். 653. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8117-4694-6. https://books.google.com/books?id=mdC3DAAAQBAJ&pg=PA653. "During the early 1900s, Hiram Percy Maxim designed and patented gun silencers. His efforts were directed toward both military and sporting arms and resulted in his forming the Maxim Silencer Company, Hartford, Conn." 
  3. Freeman, Morton S. (18 December 1997). A New Dictionary of Eponyms. Oxford University Press, USA. பக். 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-509354-4. https://books.google.com/books?id=dujiiVP2KJIC&pg=PA165. 

மூலங்கள் [தொகு]