ஒலிக்குறைப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலி குறைப்பான்

ஒலிகுறைப்பான் ((muffler) என்பது ஒரு இயந்திரத்தின் செயற்பாட்டில் இருந்து உற்பத்தியாகும் ஒலியைக் குறைக்கப் பயன்படும் கருவி ஆகும்.

விபரிப்பு[தொகு]

ஒரு வாகன பொறியில் அதிக அழுத்தத்தில் காற்றுடன் எரிபொருள் கலக்கப்பட்டு பற்ற வைக்கப்படுகிறது. அதன் மூலம் கிடைக்கும் விசையே வாகனம் ஓடப்பயன்படுகிறது. எரிபொருள்-காற்றுக்கலவை பற்றவைக்கும் போது அது கிட்டத்தட்ட ஒரு வெடிகுண்டு போல சத்தம் எழுப்பும். எரிந்ததும் வரும் புகையை வெளியேற்றினால் தான் அடுத்த சுற்றுக்கு எஞ்சின் தயாராகும். அந்த புகை கிட்ட தட்ட 1200 செல்சியசு வெப்ப நிலையில் இருக்கும். அதிக அழுத்தத்துடன் வெளிவரும் புகை விரிவடைவதால் பலத்த சத்தத்துடன் புகை வெளிவரும். இந்த ஓசையுடன் வாகனத்தை ஓட்ட முடியாது என குறைக்கப் பயன்படுவதுதான் புகைப்போக்கி ஒலி குறைப்பான்.

செயல்படும்விதம்[தொகு]

  1. ஒலி உறிஞ்சுதல்
  2. ஒலி எதிரொலித்தல்
  3. ஒலி தடுத்தல்

இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ, அல்லதும் மூன்றும் இணைந்தோ ஒரு ஒலிக்குறைப்பான் செய்யப்படும். அது வாகனத்தின் தன்மை, செலவிடும் தொகைக்கு ஏற்ப மாறும். ஒரு சிலிண்டர், பல சிலிண்டர்கள் உள்ள எஞ்சின்கள் உள்ளது, அவற்றை ஒரு குழாய் மூலம் ஒன்றாக இணைத்து (exhaust port and manifold) ஒலிக்குறைப்பானுடன் இணைக்கபட்டிருக்கும்.

ஒலிக்குறைப்பான் உள்ளே ஒரு குழாயில் சிறு துளைகள் இட்டு அதன் மீது கண்ணாடி இழைகள் (glasswool) கொண்டு சுற்றி அதன் மூலம் புகையை வர வைப்பார்கள். ஒலியை கண்ணாடி இழை உறிஞ்சி குறைக்கும், மேலும் புகையின் அழுத்தம் குறைவிக்கப்படும். அதன் பின்னர் புகை வெளியேற்றப்படும். இதில் நேரானப்பாதை, எதிர்ப்பாதை வெளியேற்றம் என்ற இரண்டு முறை இருக்கிறது.

ஓரே குழல் மூலம் புகை உள்ளே வந்து வெளியேருவது நேரானாது. ஒரு குழல் மூலம் வந்த புகை, அதனுடன் தொடர்பில்லாத மற்றொரு குழல் மூலம் வெளியேற்றப்படுவது. இதில் புகை சுற்றுப்பதையில் செல்வதால் ஒலியின் வலிமை அதிகம் குறையும்.

மேற்சொன்ன முறையில் ஒலி உறிஞ்சுதல், தடுத்தல் என்ற இரண்டும் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

கண்ணாடி இழையை விட அதிக பயன் உள்ள ஒலிக்குறைப்பான், ரெசனோட்டர் (resonator) வகை ஒலி எதிரொலித்தல் ஒலிக்குறைப்பான் ஆகும்.

இதில் புகை சிறு துளைகள் உள்ள குழாய் மூலம் ரெசனோட்டர் அறை என்ற ஒன்றின் உள் செலுத்தப்படும், அந்த அறையில் சில பள்ளங்கள்/புடைப்புகள் இருக்கும் அதில் பட்டு எதிரொலிக்கும் ஒலி சரியாக உள்ளே வரும் ஒலியின் கட்டத்திற்கு (phase) எதிரான கட்டத்தில் உள்ள ஒலியாக (opposite phase) இருக்கும். இரண்டு ஒலி அலைகளும் ஒன்றின் மீது ஒன்று மோதி வலுவிழந்து விடும். பின்னர் புகை அடுத்த அறைக்கு எடுத்து செல்லப்பட்டு நேர் குழல் அல்லது எதிர்ப்பாதை குழல் வழியாக வெளியில் எடுத்து செல்லப்படும்.

எல்லா வகை ஒலிக்குறைப்பானிலும் குறுகிய குழாயில் வரும் புகை அகன்ற ஒலிக்குறைப்பானுக்கு வரும் போது மெதுவாக விரிவடைய வைப்பதன் மூலம் அழுத்தம் வெப்பம் குறையும், மேலும் ஒலியை வலுவிழக்க செய்ய சுற்றுப்பாதை , ஒலி உறிஞ்சும் பொருள், எதிர்க்கட்ட ஒலியை கொண்டு ஒலியை குறைத்தல் ஆகியவற்ற்றின் அடிப்படையில் தான் எல்லாவகை ஒலிக்குறைப்பான்களும் செயல் படுகிறது.

எஞ்சினின் திறனுக்கு ஏற்ப ஒலிக்குறைப்பானின் குழல் நீளம், அதில் பயன்படுத்தப்படும் பொருட்கள்,வடிவம் மாறும் , இல்லை எனில் ஒரு எதிர் அழுத்தம் (back pressure) ஏற்பட்டு புகை மீண்டும் எஞ்சினுள் செல்லும், அது எஞ்சினைப்பாதிக்கும். அப்படி எதிர் அழுத்தம் ஏற்படாமல் இருக்க எஞ்சினின் சக்தியைக்கொண்டு ஒரு விசையை ஒலிக்குறைப்பானுக்கு தருவதை டர்போ சார்ஜிங் என்பார்கள்.

சிறிய வாகனங்களில் ரெசனோட்டர் அறை, எல்லாம் ஒரே குழல் உள்ளேயே வைத்து இருக்கும். கார் போன்ற வாகனங்களுக்கு தனியே அடுத்தடுத்து புகைப்போக்கியின் பாதையில் இருக்கும்.வெளிநாட்டுக்கார்கள் சத்தம் குறைவாக இயங்க காரணம் அவர்கள் பொருத்தும் ரெசனோட்டரின் தரம் தான் காரணம்.

தற்போது ரெசனோட்டரில் எதிரொலி மூலம் ஒலியை மட்டுப்படுத்துவதற்கு பதில் ஒரு மின்னணு கருவி மூலம் ஒரு எதிர்க்கட்ட ஒலியை உருவாக்கி புகை, ஒலி வரும் திசைக்கு எதிரில் அனுப்பி ஒலியை வலுவிழக்க செய்து குறைக்கலாம் எனக் கண்டுபிடித்துள்ளார்கள். இம்முறை இன்னும் வாகனங்களில் நடைமுறைக்கு வரவில்லை.

இவற்றையும் பாக்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிக்குறைப்பான்&oldid=2768219" இலிருந்து மீள்விக்கப்பட்டது