உள்ளடக்கத்துக்குச் செல்

தாக்குதல் மரைகுழல் துப்பாக்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஏகே-47,இதுவே உலகில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் தாக்குதல் சுடுகலன்

தாக்குதல் நீள் துப்பாக்கி (Assault Rifile), தாக்குதல் துப்பாக்கியான இந்தவகைத் துப்பாக்கிகளில் அதிக பயன்பாட்டில் இருப்பது ஏகே-47 வகை சுடுகலன்கள் தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை சுடுகலன்கள் பல தோட்டாக்களை வெளிப்படுத்தும் எந்திர சுடுகலனாகவும் அல்லது ஒரு நேரத்தில் ஒரேயொரு தோட்டாவை வெளிப்படுத்தும் வகை சுடுகலன் என இருவகையாகப் பயன்படுத்தப்படுகிறது. காலாட்படையின் நிரந்தர படைக்கலனாக பல நாட்டு இராணுவத்தில் பயன்பாட்டில் இருந்துவருகின்றது. இரண்டாம் உலகப்போரிலும் எம்-1 காரண்ட் வகை சுடுகலன்கள் பயன்படுத்தப்பட்டன அவை சற்று பெரியதாகவும் சற்று கடினமானவையாகவும் இருந்தன. தற்பொழுது கையாள்வதற்கு மிகவும் எளிதானவைகளாக தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஏகே-47, எம்-16 போன்றவை சில தாக்குதல் சுடுகலன்களுக்கு உதாரணமாகக் கூறலாம்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Assault rifle". Encyclopædia Britannica. (3 July 2010). 
  2. C. Taylor, The Fighting Rifle: A Complete Study of the Rifle in Combat, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87947-308-8
  3. F.A. Moyer Special Forces Foreign Weapons Handbook, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87364-009-8