எஸ். ஏ. ஐ. மத்தியு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருட்திரு எஸ். ஏ. ஐ. மத்தியு
SAI.Mathew.jpg
பிறப்புநவம்பர் 24, 1939(1939-11-24)
உலப்பனை, கண்டி
இறப்பு6 சூன் 2016(2016-06-06) (அகவை 76)
கல்முனை, அம்பாறை மாவட்டம்
தேசியம்இலங்கையர்
கல்விமுதுமாணி (கொழும்பு பல்கலைக்கழகம்)
இளமாணி (பேராதனைப் பல்கலைக்கழகம்)
பணிஓய்வுநிலை வலயக் கல்விப் பணிப்பாளர்
பணியகம்அரசுப்பணி
சமயம்கிறித்தவம்
பெற்றோர்சந்தனம்
அக்னஸ்

அருட்திரு எஸ். ஏ. ஐ. மத்தியு (நவம்பர் 24, 1939சூன் 6, 2016) இலங்கையின் கல்விமானும் சமூக சேவையாளரும் பன்னூலாசிரியருமாவார்.[1]

பிறப்பு[தொகு]

இலங்கையின் மத்திய மாகாணத் தலைநகர் கண்டியில் உலப்பனையிலுள்ள மகாவிலாவில் 1939 ஆம் ஆண்டு நவம்பர் 24ந் திகதி பிறந்தார். இவருக்குத் தாய் தந்தையர் இட்ட பெயர் அந்தோணிமுத்து ஆகும்.

துறவறம்[தொகு]

1959 செப்டம்பர் 15 இல் புனித வளனார் சபையில் இணைந்த இவர் 1960 செப்டம்பர் 15 இல் முழுத் துறவியானார். அருட் சகோதரர் மத்தியு எனப் பெயரிடப்பட்டார்.

கல்வியும் கல்விப்பணியும்[தொகு]

ஆரம்பக் கல்வியை கம்பளை சென். ஜோசப் கல்லூரியில் கற்றார். ஆரம்பத்தில் தோட்டப் பாடசாலை ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்தார். கொழும்பு அக்குவைனாசில் இறையியல் கற்றபின் இலங்கையின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணிப் பட்டத்தையும், பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பயின்று கல்வியியல் டிப்புளோமாவையும் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுக்கொண்டார்.

கலைப் பங்களிப்பு[தொகு]

இவருடைய நூல்கள்[தொகு]

 • கர்மயோகி பவுல்
 • உலகக் கலைகள் ஒரு பார்வை (ஆய்வு நூல்)
 • 50 ஆம் ஆண்டை நோக்கி ஜோசப் வாஸ் இலங்கைத் திருச்சபையில் ஏற்படுத்திய தாக்கம்
 • வரலாறு தரும் மட்டக்களப்பு (ஆய்வு நூல்)
 • ஞானயோகி பவுல்
 • அலைபுயலின் நிலைகலன்
 • சட்டம், சமயம், ஆட்சி (ஆராய்ச்சி நூல்)
 • 200 Years of Methodism in East Lanka- Historical Educational prospective

மரணம்[தொகு]

சில காலம் நோய்வாய்ப்பட்டிருந்த இவர் 2016 சூன் 6 ஆம் திகதி கல்முனை ஆதார வைத்தியசாலையில் காலமானர். இவரது உடல் சூன் 7 அன்று கல்முனை கார்மேல் பற்றிமாக் கல்லூரி தேசிய பாடசாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஆராதனையின் பின் கல்முனை இருதயநாதர் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி ஆராதனைகளின் பின் கல்முனை சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.[1]

இவரைப் பற்றி வெளியிடப்பட்ட நூல்கள்[தொகு]

 1. பகிரதம்
 2. அரம்
 3. சிறியன சிந்தியாதே

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "ஆளுமைமிகு மனிதநேயன் மத்தியூவுக்கு கல்முனையில் மக்கள் வெள்ளம் இறுதி அஞ்சலி". தினகரன். 6 சூன் 2016. 2016-06-09 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 சூன் 2016 அன்று பார்க்கப்பட்டது.

உசாத்துணைகள்[தொகு]

 1. துறவற வாழ்வில் பொன்விழாக் காணும் அருட்திரு.எஸ்.ஏ.ஐ.மத்தியு- தினக்குரல், மே 1, 2010
 2. அருட் சகோதரர் எஸ் ஏ ஐ மத்தியு அடிகளாரின் துறவற வாழ்விற்கு 50 ஆண்டுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=எஸ்._ஏ._ஐ._மத்தியு&oldid=3546312" இருந்து மீள்விக்கப்பட்டது