உள்ளடக்கத்துக்குச் செல்

தினக்குரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தினக்குரல்
வகைநாளிதழ்
உரிமையாளர்(கள்)ஏசியன் மீடியா பப்ளிக்கேசன்சு (பிரை) லிமிட்.
நிறுவியது1997
மொழிதமிழ்
தலைமையகம்இல. 68, எலி அவுசு வீதி, முகத்துவாரம், கொழும்பு, இலங்கை
இணையத்தளம்thinakkural.lk

தினக்குரல் இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் ஆகும். இப்பத்திரிகை வீரகேசரி ஆசிரியர்களுக்கு இடையேயான கருத்து முரண்பாடுகள் ஊடாக 1997 ஆம் ஆண்டில் பொன் இராசகோபால் தலைமையில் பிரிந்து வெளியேறிய ஆசிரியர்களால் உருவாக்கப்பட்ட பத்திரிகையாகும்.[1] தினக்குரல், வடக்கு கிழக்குப் பகுதிகளில் மிகவும் அறியப்பட்ட நாளிதழ் என்றாலும் ஓராண்டிற்கு மேலாக இலங்கையின் கிழக்கு மாகாணமான திருகோணமலை, மட்டக்களப்பில் தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளால் தடை செய்யப்பட்டிருந்தது.[1] தினக்குரல் யாழ்ப்பாணத்திற்கு தனியான பதிப்பும் ஏனைய இடங்களிற்கு தனியான பதிப்புமாக வெளியாகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Sri Lanka: Tamil language daily called "Thinakkural"; name of its Editor-in-Chief; whether he and his family experienced harassment, detentions and abuse by security personnel". UNHCR. 14 May 2003. பார்க்கப்பட்ட நாள் April 27, 2012.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்பு

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினக்குரல்&oldid=3590977" இலிருந்து மீள்விக்கப்பட்டது