பேச்சு:தினக்குரல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

//இலங்கையின் இணையத்தில் பார்க்கப்படும் அச்சிடப்படும் பத்திரிகைகளில் முதலாவதாகும்//

இத்தகவலை மீள உறுதிப்படுத்த இயலுமா? தமிழ், ஆங்கிலம், சிங்களம் என்று எல்லா மொழி இதழ்களிலும் முதன்மையானதா? இல்லை, தமிழ் இதழ்களிலா--ரவி 17:25, 24 மே 2008 (UTC)

--ரவி 17:25, 24 மே 2008 (UTC)

ரவி, இந்தத்தகவல் பழையது இப்போதைய புள்ளிவிரங்கள் மாறிவிட்டது. இப்போது முதல் 100க்குள் இப்பத்திரிகை இல்லையென்பதால் கட்டுரையில் இருந்து நீக்கிவிட்டேன். --உமாபதி \பேச்சு 03:31, 25 மே 2008 (UTC)

இடங்களிற்கு, இடங்களுக்கு - எது சரி?--ரவி 17:25, 24 மே 2008 (UTC)

எனது தமிழ் அறிவைப் பொறுத்தவரையில் இடங்களுக்கு என்பது பேச்சு வழக்கு. இடங்களிற்கு என்பதே எழுதும் தமிழ் என நினைக்கின்றேன்.--நிரோஜன் சக்திவேல் 21:11, 24 மே 2008 (UTC)

இல்லை நிரோ. கு என்பது நான்காம் வேற்றுமை. "இல், இன்" என்பது ஐந்தாம் வேற்றுமை. உங்களுக்கு என்பது நான்காம் வேற்றுமை. எங்கள் + கு = எங்கட்கு என்றும், உங்கள் என்பது உங்கட்கு என்றும் வரும். ஆனால் பல இடங்களில் உகரம் இடைவந்து நான்காம் வேற்றுமையால் வல்லினம் மிகும் என்னும் விதியால் மக்கள் என்பது மக்கள் + உ +க்+கு = மக்களுக்கு என்றும். அதே போல உங்களுக்கு, எங்களுக்கு, மாந்தர்களுக்கு, பெண்களுக்கு என்று வரும். அவனுக்கு, அவளுக்கு, இவருக்கு என்றெல்லாமும் வரும். "அவனுக்குக் கொடுத்தேன்", "மக்களுக்குத் தேவை நல்ல அரசாட்சி" என்பன இலக்கணப்படி சரியான ஆட்சிகள். இல் என்பது ஐந்தாம் வேற்றுமையை ஆங்கிலத்தில் ablative என்பார்கள். "அறிவில் சிறந்தவர் சீனர்" என்பதில் வரும் அறிவு + "இல்" என்பது அறிவு என்னும் "பண்பு" அல்லது திறத்தில் சிறந்தவர் என்று "ஒப்பு" என்னும் ஒப்பீட்டுப் பொருளிலோ "ஏது" என்னும் காரணப்பொருளிலோ வருவதாகக் கொள்ளலாம். ஐந்தாம் வேற்றுமை "நீங்கல், ஒப்பு, எல்லை, ஏது (காரணம்)" என்னும் பொருள்களில் வரும் என்று கூறுவார்கள். "எல்லை"ப் பொருளுக்கு எடுத்துக்காட்டாக, "இந்தியாவின் வடக்கு இமயம்". இங்கே "இன்" என்னும் ஐந்தாம் வேற்றுமை "எல்லை"ப் பொருளில் வருகின்றது. "வறுமையின் கொடியது அறியாமை" என்று கூறினால், அதில் வறுமை என்னும் சொல்லுடன் வரும் "இன்", வருமையைக் காட்டிலும் கொடியது அறியாமை என்று பொருள் வரும். அது "ஒப்பு" என்னும் வகையைச் சேர்ந்த ஐந்தாம் வேற்றுமை. எனவே உங்களில் சிறந்தவர் யார் என்றால் உங்களுக்குள்ளே சிறந்தவர் யார் என்று பொருள். 10 இடங்களில் நான்காவதாக உள்ளது என்பது சரி. "எத்தனையாவது இடங்களுக்குள் இருக்க வேண்டுமென்று நினைக்கிறாய்" என்று கேட்டால், "முதல் ஆறு இடங்களில் ஒன்றிலாவது இருக்க விரும்புகிறேன்" என்று மறுமொழி தரலாம். எனவே "இடங்களில்" என்பதும் "இடங்களுக்கு" என்பதும் சரியான வழக்கு. --செல்வா 14:11, 25 மே 2008 (UTC)

அருமையான விளக்கம். நன்றி செல்வா. முன்பே உள்ளுணர்வால் இடங்களுக்கு என்பது தான் சரியென உணர்ந்தேன். ஆனால், உங்களைப் போல் காரண விளக்கத்தோடு தோன்றவில்லை. நல்ல உரைகளைப் பார்த்துப் பழகியே உள்ளுணர்வைச் சரிப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தப் பிழை இணையத்தில் மிகவும் மலிந்து காணப்படுகிறது. எனவே, தெளிவா இருப்பவர்களையும் குழப்புகிறது :) --ரவி 16:26, 25 மே 2008 (UTC)

இன்னொன்றையும் இங்கு சொல்வது தேவை. மகர ஒற்றில் முடியும் சொற்களுக்கு "அத்து" என்னும் சாரியை வந்தபின் வேற்றுமை இட வேண்டும். எடுத்துக்காட்டுகள்:
மரம் + அத்து + ஐ = மரத்தை
மரம் + அத்து + கு = மரத்துக்கு
படம் + அத்து + கு = படத்துக்கு

அத்து என்னும் சாரியை தவிர "அக்கு, அம், அன், இக்கு, இன், ஒன், வற்று, அம்" என்று பல சாரியைகள் உள்ளன. ஒரு சில இடங்களில் ஒன்றுக்கு மேலும் சாரியைகள் வரும்.
மரம் + அத்து + கு = மரத்துக்கு என்று வருவது போக,
மரம் + அத்து + இன் +உ +கு = மரத்தினுக்கு என்றும் வரும்.

இவற்றையும் கருத்தில் கொள்ளுதல் வேண்டும்.

--செல்வா 01:29, 27 மே 2008 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தினக்குரல்&oldid=245161" இருந்து மீள்விக்கப்பட்டது