கொழும்பு பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொழும்பு பல்கலைக்கழகம்
කොළඹ විශ්වවිද්‍යාලය
கொழும்பு பல்கலைக்கழகம்இலச்சினை
கொழும்பு பல்கலைக்கழகம்இலச்சினை

குறிக்கோள்: சமக்கிருதம்: बुद्धिः शर्वत्र भ्रजते (புத்தி சர்வாத்ர பிரஜதே)
"அறிவு எங்கும் பரந்துள்ளது"
நிறுவல்: 1921
வகை: பொது
நிதி உதவி: ரூ.1.461 பில்லியன் [1]
வேந்தர்: அதி வணக்கத்துக்குரிய ஒஸ்வால்ட் கொமிஸ்
துணைவேந்தர்: பேரா. சணிக்கா ஹிரிம்புறேகம
பீடங்கள்: 240[1]
ஆசிரியர்கள்: 1,600[1]
மாணவர்கள்: 11,275[1]
இளநிலை மாணவர்: 8,638[1]
முதுநிலை மாணவர்: 2,637[1]
அமைவிடம்: கொழும்பு, இலங்கை
வளாகம்: நகரம்
வெளியீடு: University of Colombo Review,
The Ceylon Journal of Medical Science
நிறம்: நாவலும் வெள்ளையும்         
தடகள விளையாட்டுக்கள்: 29 விளையாட்டுக்குழுக்கள்
சார்பு: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு,
பொதுநலவாய பல்கலைக்கழகங்களுடன் இணைந்து,
International Association of Universities
இணையத்தளம்: இணையத்தளம்

கொழும்பு பல்கலைக்கழகம் (University of Colombo[1]) இலங்கையின் மிகப் பெரிய பல்கலைக்கழகமாகும். இது தலைநகர் கொழும்பில் அமைந்துள்ளது. இதுவே இலங்கையில் மிகப்பழமையான உயர்கல்வி நிலையமும் ஆகும். 1921 ஆம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரி என்ற பெயரில் இது ஆரம்பிக்கப்பட்டது. ஆனாலும் இதன் வரலாறு 1870 இல் இருந்து ஆரம்பிக்கின்றது[2].

மேற்பார்வை[தொகு]

இப் பல்கலைக்கழகம் மத்திய அரசிடமிருந்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) மூலம் கணிசமான அளவு நிதியுதவியைப் பெற்றுக் கொள்கின்றது. அதனால் ஏனைய பல்கலைக்கழகங்களை போன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதற்கும் பீடாதிபதியையும், நிர்வாகக் குழுவையும் நியமித்துள்ளது. இப் பல்கலைக்கழகத்தின் குறிக்கோள், "Buddhih Sarvatra Bhrajate" ஆகும். அதாவது "அறிவு எங்கும் பரந்துள்ளது ஆகும்".சுமார் பதினோராயிரம் மாணவர்களுடன் இது ஏழு பீடங்களையும் 41 திணைக்களங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் அநேகமான பீடங்கள் உள்வாரிப் பட்டப் படிப்பையும், வெளிவாரிப் பட்டப் படிப்பையும் வழங்குவதுடன் வெளி மாணவர்களுக்கு சில வகுப்புக்களையும் நடாத்தி வருகின்றது.

அமைவிடம்[தொகு]

கொழும்பு பல்கலைக்கழகமானது 50 ஏக்கர் நிலப்பரப்பில் கொழும்பு நகரத்தின் இதயம் என அறியப்படும் கருவாத் தோட்டம் எனும் இடத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாக நிலையம் "கொலிஜ் ஹவுஸ்" எனும் இடத்தில் உள்ளது.

கொலிஜ் ஹவுஸ், முதுமாணிப் பட்டப் படிப்பு பீடம் மற்றும் உயிர்வேதியியல் கல்விக்கழகம், மூலக்கூற்று உயிரியல், உயிரித் தொழில்நுட்பம், IBMBB போன்றனவும் தேஸ்டன் வீதிக்கும் இராணி வீதிக்கும், இந்தியா இல்லத்துக்கும் இடையே அமைந்துள்ளது. மேலும் தேஸ்டன் வீதிக்கும் ரீட் வீதிக்கும் இடையே ரோயல் கல்லூரிக்கு அருகே புதிய கலை அரங்கம், பல்கலைக்கழக விளையாட்டு மைதானம், அறிவியல் பீடம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழக கணினிக் கல்லூரி [UCSC] என்பனவும் அமைந்துள்ளது. ரீட் வீதியின் அடுத்த பக்கத்தில் பல்கலைக்கழக நூலகம், கலைப் பீடம், சட்ட பீடம் மற்றும் விளையாட்டு உள்ளரங்கம் என்பனவும் அமைந்துள்ளது.

மேலும் கருவாத் தோட்டத்துக்கு வெளியேயும் மருத்துவ பீடமானது கின்சி வீதியில் கொழும்பு மருத்துவ பொது மருத்துவமனைக்கு எதிராகவும் மற்றும் வெளிவாரி மருத்துவப் படிப்பு நிலையம் நோரிஸ் கனல் வீதியில் அமைந்துள்ளது. மேலும் ஆயுர்வேத மருத்துவ நிலையம் நாவல என்ற கொழும்பின் புறநகர்ப் பகுதில் உள்ளது. இப் பல்கலைக்கழகத்தின் ஏனைய சொத்துக்களான சிறி பாளி வளாகம், ஹோரோனவின் வேவலவில் உள்ளதுடன் விவசாய மற்றும் கிராமிய விஞ்ஞானம் அம்பாந்தோட்டையில் உள்ளது.

வரலாறு[தொகு]

இலங்கை வைத்திய கல்லூரி[தொகு]

கொழும்பு பல்கலைக்கழக ஆரம்பமானது இலங்கை வைத்திய கல்லூரியின் உருவாக்கத்துடன் ஆனி மாதம் 1870 இல் ஆரம்பிக்கின்றது. இதுவே தெற்காசியாவில் அமைக்கப்பட்ட ஐரோப்பாவின் இரண்டாவது மருத்துவ பாடசாலை ஆகும். 1880 ஆம் ஆண்டில் இப் பாடசாலை கல்லூரியாக மாற்றப்பட்டதுடன், இது மருத்துவம் செய்வதற்கும் சிகிச்சை செய்வதற்கும் அனுமதிக்கப்பட்டது. இது 1940 வரை தொடர்ந்தது. 1889 இல் இக்கல்லூரி ஐக்கிய இராச்சியத்தின் பொது மருத்துவ நிலையமாக அங்கீகரிக்கப்பட்டது.

இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரி[தொகு]

இலங்கை பல்கலைக்கழகச் சங்கமானது (CUA), 1906 இல் மேற்கின் கல்வியறிவு மிக்க குழுவொன்றினால் சேர்.பொன்னம்பலம் ராமநாதன் தலைமை தாங்க, ஒரு உள்நாட்டு பல்கலைக்கழகமாக அமைக்க ஆலோசிக்கப் பட்டது. இலங்கை பல்கலைக் கழகச் சங்கத்தின்(CUA) எதிர்பார்ப்புக்களை உணர்ந்த இலங்கையின் பிரித்தானிய அரசாங்கம் 1913 இல் ஒரு பல்கலைக்கழக கல்லூரியை அமைக்கத் தீர்மானித்தது.

எப்படியோ நிலையத்தின் அமைப்பும் அமைக்கப்பட வேண்டும் என வாதங்கள் எழுந்தன. அதன் அமைவிடத்தாலும் உலகப் போரின் காரணத்தாலும் உருவாக்க வேலைப்பாடுகள் 1920 வரை நிறுத்தி வைக்கப்பட்டன. பின்பு அரசாங்கம் ரெஜினா வலவ்வா என்ற தனியார் குடியிருப்பை வாங்கியது. இதுவே பின்னர் "கொலிஜ் ஹவுஸ்" என்று அழைக்கப்பட்டது. இது வாங்கப்பட்டதன் காரணம் எட்வர்ட் ப்ரண்டிஸ் டென்ஹமின் பரிந்துரையின் கீழ் பல்கலைக்கழக கல்லூரி அமைப்பதன் நிமித்தமாகும். இலங்கை பல்கலைக்கழக கல்லூரியானது ராயல் கல்லூரியின் கட்டடத்தில் தை மாதம் 1921 ஆம் ஆண்டு திறந்து வைக்கப் பட்டது. இப் பல்கலைக்கழக கல்லூரியானது லண்டன் பல்கலைக்கழகத்துடன் சேர்க்கப்பட்டதுடன் இது லண்டன் பல்கலைக்கழக வெளிவாரி பட்டப் படிப்பை வழங்கி வந்தது. இருந்தாலும் இது இலங்கைக்கே உரிய பல்கலைக்கழகமாக கருதப் பட்டது. இது இரண்டு திணைக்களங்களை கொண்டிருந்தது. அவை கலை மற்றும் விஞ்ஞான திணைக்களங்களாகும். [3]

இலங்கை பல்கலைக்கழகம்[தொகு]

இலங்கை பல்கலைக்கழகமானது 1ஆம் திகதி 1942 ஆம் ஆண்டு இலங்கை பல்கலைக்கழக சட்ட இல.20 இன் கீழ் இலங்கை ஸ்டேட் கவுன்சிலால் 2 ஆம் உலகப் போருக்கு எதிராக அமைக்கப்பட்டது. இலங்கை பல்கலைக்கழக கல்லூரியும் இலங்கை மருத்துவ கல்லூரியும் சேர்த்து இலங்கை பல்கலைக்கழகமாக கொலிஜ் ஹவுசை தலைமை பீடமாக வைத்து உருவாக்கப்பட்டது. இரண்டு கலை மற்றும் விஞ்சான திணைக்களங்களும் பீடங்களாக உயர்த்தப்பட்டன. மருத்துவக் கல்லூரி மருத்துவ பீடமாக மாற்றப் பட்டதுடன் கருடன் ஹவ்ஸில் அமைக்கப்பட்டன. பல்கலைக்கழக கல்லூரி இராணி வீதியில் வில்லா வேநேஜியாவில் அமைக்கப்பட்டது. விடுதி வசதிகள் யூனியன் விடுதில் மூன்று மண்டபங்களைக் கொண்டதுடன் ப்ரோடி மற்றும் அகுயனஸ் விடுதிகளுடன் இயங்கின.[4]

சட்டத் திணைக்களமும், விவசாய மற்றும் விலங்கு விஞ்ஞானமும் 1949 இல் புதிய கட்டடங்களில் பேராதனைக்கு மாற்றப்பட்டது. எப்படியோ மீண்டும் சட்ட திணைக்களம் மீண்டும் கொழும்புக்கு 1965 இல் கொண்டு வரப்பட்டது. பின்னர் 1952 இல் கலைப் பீடமும் குழுப் பாடங்களும் பல்கலைக்கழக நிர்வாகத்துடனும் நூலகத்துடனும் பேராதனைக்கு மாற்றப்பட்டன.

பேராதனையில் இருந்த இலங்கைப் பல்கலைக்கழகத்தின் பகுதிகள் பல்கலைக்கழக வளாகங்களாக 1966 வரை இயங்கின. ஆனால் 1966 இல் இவை இரண்டாகப் பிரிக்கப்பட்டன. கொழும்பில் இருந்த பகுதி இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு ஆகவும் பேராதனையில் இருந்த பகுதி இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை ஆகவும் மாற்றப்பட்டன.

இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு வளாகம்[தொகு]

இந்த பல்கலைக்கழக வேறாக்கம் பாராளுமன்றத்தில் 1967 அறிவிக்கப்பட்டது. கல்வி அமைச்சினாலும் கலாசார அமைச்சினாலும் பகுதி 34 இன் இல. 20 சட்டத்தின் கீழ் 1966 இல் இது பதியப்பட்டது. ஒரு புதிய நிலையம் 1 ஆம் திகதி ஐப்பசி 1967 ஆம் ஆண்டு கலை, சட்டம், விஞ்ஞானம் மற்றும் மருத்துவம் போன்ற பதிப்புக்களுடன் 5000 மாணவர்களுடனும் 300 கல்வி கற்பிப்போருடனும் நடைமுறைக்கு வந்தது.

இலங்கைப் பல்கலைக்கழக சட்ட இல. 1 , 1972 இல் மாற்றப் பட்டது. நான்கு பல்கலைக்கழகங்கள் ஆன இலங்கைப் பல்கலைக்கழகம், பேராதனை, கொழும்பு வித்யோதயா பல்கலைக்கழகம் மற்றும் வித்யாலங்கார பல்கலைக்கழகம் ஆகியனவற்றின் தோற்றத்தின் பின் கட்டுபெத்தவில் உள்ள இலங்கை தொழில் நுட்பக் கல்லூரியானது இதன் வளாகமாக ஆக யுனிவர்சிட்டி ஒப் ஸ்ரீலங்கா என அழைக்கப்பட்டது. கொலிஜ் ஹவ்ஸில் அமைக்கப்பட்டது. இது நெடு நாள் நீடிக்கவில்லை. மீண்டும் 16 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் 1978 ஆம் ஆண்டு அமைப்பு மாற்றப்பட்டு கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை [University of Colombo, Sri Lanka] என பெயர் மாற்றப் பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகம்[தொகு]

16 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் 1978 ஆம் ஆண்டு இலங்கைப் பல்கலைக்கழகம், 4 பல்கலைக்களகங்களாக பேராதனை, கொழும்பு வித்யோதயா பல்கலைக்கழகம், பின்னர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம்], இலங்கை பல்கலைக்கழகம் மற்றும் வித்தாலங்கார [களனி பல்கலைக்கழகம்] பல்கலைக்கழகம் என பிரிக்கப்பட்டது.

1978 இல் கொழும்பு பல்கலைக்கழகம் மருத்துவம், கலை, விஞ்ஞானம், கல்வி மற்றும் சட்டம் போன்ற பீடங்களைக் கொண்டிருந்தது. பின்னர் விரிவாக்கத்தின் பொது 1980 இல் முகாமைத்துவ பீடம் ஆரம்பிக்கப்பட்டது. ஸ்ரீ பாளி வளாகம் அரசாங்க கசட் மூலம் ௧௯௯௬ ஆரம்பிக்கப்பட்டது. 1978 இல் தபால் மூல மருத்துவ படிப்பும், வேலை பார்ப்போர் கல்வி அமைப்பும் ஆயுர்வேத மருத்துவ படிப்பும் கொழும்பு பல்கலைக்கழத்தில் சேர்க்கப்பட்டன. கணினி தொழில்நுட்ப நிலையம்(ICT) 1987 இல் அமைக்கப்பட்டது. இதுவே பின்னர் கணினிக் கல்லூரியாக 22இல் மாற்றப்பட்டது.

முகாமைத்துவமும் நிர்வாக அமைப்பும்[தொகு]

கொழும்பு பல்கலைக்கழகமானது அரசாங்கத்தில் தங்கியுள்ள ஒரு பொது பல்கலைக்கழகம் ஆகும். இது நிதியுதவியை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடமிருந்து பெற்றுக் கொள்கின்றது. இதனால் நிர்வாகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவால் கட்டுப் படுத்தப்படுகின்றது. உள்வாரிப் பட்டப் படிப்புக்கள் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. பல்கலைக்கழக நிர்வாகம் முன்னைய இலங்கைப் பல்கலைக்கழக இரட்டை அமைப்பைப் போலவே அமைந்துள்ளது. அதாவது கவுன்சிலும் செனட்டும் ஆகும். அநேகமான அலுவலகர்களுக்கான விண்ணப்பங்கள் இவற்றை மையமாகக் கொண்டே அமைகின்றன. இருந்தாலும் அவற்றில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பங்களிப்பும் உள்ளது.

பல்கலைக்கழக அலுவலகர்கள்[தொகு]

பீடாதிபதி

துணை பீடாதிபதியால் அநேகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் பல்கலைக்கழக பீடாதிபதியே பட்டப் படிப்புக்களுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தலைமை தாங்குகின்றார். இலங்கை ஜனாதிபதியால் விடுக்கப்படும் வேண்டுகோள்கள் ஒரு தனிப்பட்ட நபரால் அதாவது அலுவலகராலோ அல்லது துணை பொது சங்கத்தினராலோ நிறைவேற்றப்படும். தற்போதைய பீடாதிபதி அதி வணக்கத்துக்குரிய ஒஸ்வால்ட் கொமிஸ் ஆவார்.

துணை பீடாதிபதி

இலங்கை ஜனாதிபதியால் விடுக்கப்படும் வேண்டுகோள்கள் துணை பீடாதிபதியால் நாளாந்த முகாமுத்துவம் மூலம் கட்டுப்படுத்தப்படுகின்றது. தற்போதைய துணை பீடாதிபதி பேரா. சணிக்கா ஹிரிம்புறேகம ஆவார்.இவரது வெற்றிடம் பேரா. த. ஹெட்டியாராச்சியால் நிரப்பபப்பட்டது.

தலைமைக் கல்வி மேற்பார்வையாளர்

தலைமைக் கல்வி மேட்பார்வையாளராக ஸ்ரீ பாளி வளாகத்தின் கலைஞர்.டுடோர் வீரசிங்கே அவர்கள் விளங்குகின்றார்.

மாணவர் சங்கங்கள்

கொழும்பு பல்கலைக்கழகத்தில் 10,000 கும் மேற்பட்ட வெளி மாணவர்கள் வெளி வாரிப் பட்டப் படிப்பைத் தொடர்கின்றார்கள்.கொழும்பு பல்கலைக்கழகத்தில் 43 க்கும் மேற்பட்ட கலாசார,கல்வி மற்றும் மதம் சார்ந்த மாணவர் சங்கங்களும் நடாத்தப்படுகின்றன. ஒவ்வொரு பல்கலைக்கழகங்களும் தங்களுக்கே சொந்ததமான மாணவர் சமூகங்களைக் கொண்டு விளங்குகின்றன.

கொழும்பு பல்கலைக்கழக நிலையங்களும் கல்லூரிகளும்[தொகு]

கொழும்பு பல்கலைக்கழகம் 7 பீடங்களை கொண்டுள்ளது. இவை 41 திணைக்களங்களை கொண்டுள்ளதுடன் ஒரு சிறு வளாகத்தையும் ஒரு கணனிக் கல்லூரியையும் கொண்டுள்ளது.கணனிக் கல்லூரியானது தன்னகத்தே 5 தினைக்களங்களைக் கொண்டுள்ளது. மேலும் இது 6 நிலையங்களையும் 5 சென்டர்களையும் ,நான்கு பீடங்களையும் கொண்டுள்ளது(விஞ்சான பீடம்,சட்ட பீடம், மருத்துவ பீடம்,கலைப் பீடம் மற்றும் கல்விப் பீடம்). தற்போது கொழும்பு பல்கலைக்கழக கணனிக் கல்லூரியும் 2002 இல் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

அங்கே 6 தபால் மூல பட்டப் படிப்பு நிலையங்கள் உள்ளன. இவற்றில் மூன்று வெளியே அமைந்துள்ளன.

பல்கலைக்கழக நூலகம்[தொகு]

கொழும்பு பல்கலைக்கழக நூலகம் ஆனது நூலக வலையமைப்பின் மத்திய நிலையம் ஆகும். இது பிரதான நூலகம் ஒன்றையும் இரண்டு கிளை நூலகங்களையும் கொண்டுள்ளது. இருந்தாலும் கொழும்பு மருத்துவக் கல்லூரி நூலகம் 1870 இல் அமைக்கப்பட்டதாகும். 400 ,000க்கும் மேற்பட்ட ஆவணங்களைக் கொண்டுள்ளதால் இது இலங்கையின் பெரிய நூலகங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.

உலகளவிலான தொடர்புகள்[தொகு]

கொழும்புப் பல்கலைக்கழகம் உலகம் பூராகவும் தொடர்புகளைக் கொண்டுள்ளது. 1921இல் இது பலகலைக்கழக கல்லூரியாக இருந்த போதே லண்டன் பல்கலைக்கலகத்துடன் இயங்கி வந்துள்ளது. தற்போது கல்வி சார்ந்தும்,ஆராய்ச்சி சார்ந்தும்,மாணவர் பரிமாற்றம் சார்ந்தும் உலகளவில் தொடர்புகளைக் கொண்டுள்ளது.

மாணவர் வாழ்வு[தொகு]

ஒவ்வொரு பீடமும் சொந்த மாணவர் ஒன்றியத்தை கொண்டுள்ளது. அதாவது ஒன்றிய அங்கத்தவர்கள் பீட மாணவர்களால் தேர்ந்தெடுக்கப் படுகின்றார்கள்.

தங்குமிட வசதிகள்

பல்கலைக்கழகமானது ஏழு விடுதிகளை அநேகமான வீடுகளை வாடகைக்கு எடுத்தி நடாத்தி வருகின்றது.இதனால் 2973 மாணவர்கள் வருடாந்தம் பயன் பெறுகின்றது.

சங்கங்களும் விளையாட்டுகளும்[தொகு]

பல்கலைக்கழகத்தில் 43 மாணவர் சமூகங்களும், சங்கங்களும் பல நடவைக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

விளையாட்டு நடவடிக்கைகள் சுகாதாரத் திணைக்களத்தால் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் நடாத்தப் படுகின்றன. கொழும்புப் பல்கலைக்கழகம் இலங்கைப் கிரிகெட் சபை,கால்பந்து சம்மேளனம், டென்னிஸ் சங்கம் மற்றும் கொழும்பு ரோவிங் சங்கத்துடனும் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புக்கள்[தொகு]