எஸ்பிபிபிகே சத்தியநாராயண ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ்பிபிபிகே சத்யநாராயண ராவ்
நாடாளுமன்ற உறுப்பினர்
அமைச்சர்மாவாஜ்பாயி அரசாங்கத்தில் மாநிலங்களுக்கான அமைச்சராக இருந்தார்.
தொகுதிராஜமன்றி
பதவியில்
1999–2001
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு23 September 1921
கபிலேசுவரபுரம், கோனசீமா மாவட்டம், கோதாவரி மாவட்டம், பிரித்தானிய இந்தியா
இறப்பு21 Jan 2011
Hyderabad
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்இராஜராஜேசுவரி தேவி
As of June, 2014

ஸ்ரீ பலுசு பிரபாகர புச்சி கிருஷ்ண சத்யநாராயண ராவ், எஸ்பிபிபிகே சத்யநாராயண ராவ் (23 செப்டம்பர் 1921 - 21 ஜனவரி 2011) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு தெலுங்கு இந்தியத் தொழிலதிபர், அரசியல்வாதி மற்றும் கபிலேஸ்வரபுரத்தின் பெருநிலக்கிழார் ஆவார். [1] இவர் மத்திய அமைச்சராகவும் இந்தியாவின் வடக்கு சர்க்கார் மாவட்டங்களில் தீவிர செயல்பாட்டாளராகவும் இருந்தார். [2] [3] 1999 முதல் 2001 வரை இரண்டு ஆண்டுகள் வாஜ்பாய் அரசில் வேளாண்மைத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். இவர் 1958 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் வடக்கு சர்க்கார் மாவட்டங்களின் பட்டதாரிகள் தொகுதியில் இருந்து ஆந்திரப்பிரதேச சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது இறுதிச் சடங்குகள் அவரது சொந்த கிராமத்தில் நடைபெற்றது.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

எஸ்பிபிபிகே சத்யநாராயண ராவ் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள கபிலேஸ்வரபுரம் சமஸ்தானத்தின் பெருநிலக்கழாரான ஸ்ரீ பலுசு புட்சி சர்வராயுடு மற்றும் அவரது மனைவி எஸ்பி லட்சுமி வெங்கட சுப்பம்மா ராவ் ஆகியோருக்கு 23 செப்டம்பர் 1921 அன்று பிறந்தார் [4] [5] இவருக்கு எஸ்.பி.பி பட்டாபி ராம ராவ் என்ற சகோதரர் இருந்தார், இவர் ஆந்திரப் பிரதேசத்தின் ஒருங்கிணைந்த சென்னை மாகாண அமைச்சராகவும், ராஜமுந்திரி மக்களவைத் தொகுதியிலிருந்து 5 வது மக்களவை, 6 வது மக்களவை, 7 வது மக்களவை உறுப்பினராகவும் இருந்தார்.

தொழில்[தொகு]

எஸ்பிபிபிகே சத்தியநாராயண ராவ் 1953 முதல் 1964 வரை கிராமத் தலைவராகவும், 1959 முதல் 1964 வரை பஞ்சாயத்து ஒன்றியத் தலைவராகவும், 1964 முதல் 1976 வரை கிழக்கு கோதாவரி மாவட்ட ஊராட்சித் தலைவராகவும் பணியாற்றினார் [1] பின்னர், ராவ் 1958 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் வடக்கு சர்க்கார் மாவட்ட பட்டதாரிகள் தொகுதியில் இருந்து ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] இவர் பாஜகவின் உறுப்பினராக ராஜமுந்திரியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் மத்திய விவசாயத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றினார். எஸ்பிபிபிகே சத்யநாராயண ராவ் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் ஜனதா கட்சிக்கு மாறினார், என்.டி.ராமராவ் பதவி வகித்த காலத்தில் தெலுங்கு தேசம் கட்சியில் (டிடிபி) சேர்ந்தார், பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் (பிஜேபி) இணைந்தார். [5]

எஸ்பிஎஸ்பிபிகே சத்தியநாராயண ராவ் 1967 இல் பெத்தபுரத்தில் எஸ்ஆர்விபிஎஸ்ஜெபி மகாராணி கல்லூரியையும் நிறுவினார் [1] கபிலேஸ்வரபுரத்தில் தனது தந்தையின் பெயரில் சர்வராய ஹரிகதா பாடசாலையை நிறுவினார். நன்கு அறியப்பட்ட ஹரிகதா கலைஞர்களின் போதனைகள் மூலம் இளம் கலைஞர்களுக்கு ஹரிகதா கலையில் பயிற்சி அளிப்பதற்காக இந்த ஹரிகதா பாடசாலா அறியப்படுகிறது. ராவ் நிறுவிய இந்த நிறுவனத்தில் சமஸ்கிருதத்தில் நிகழ்த்திய ஒரே பெண் அரிகதா கலைஞரான தலிபர்த்தி உமா மகேஸ்வரி போன்ற அரிகதா கலைஞர்கள் பயிற்சி பெற்றனர். ராவ் தனது குடும்பத்தினரால் நிறுவப்பட்ட கபிலேஸ்வரபுரத்தில் வேத பாடசாலையையும் ஆதரித்தார். சர்வராயா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்த அவர், தெலுங்கு கவிஞர் போத்தனாவின் ஆந்திர பாகவதம் உட்பட இந்து இலக்கியப் படைப்புகளை அச்சிட 1991 இல் ஸ்ரீ சர்வராய தர்மிகா வித்யா அறக்கட்டளையை நிறுவினார்.

எஸ்பிபிபிகே சத்யநாராயண ராவ் மற்றும் கபிலேஸ்வபுரம் பாலுசு பெருநிலக்கிழார் குடும்பத்தைச் சேர்ந்த பிற உறுப்பினர்கள் 1959 ஆம் ஆண்டு காக்கிநாடாவில் உள்ள செல்லேரு மற்றும் சர்வராயா டெக்ஸ்டைல்ஸில் நூற்பு ஆலைகளைக் கட்டி ஸ்ரீ சர்வராயா சுகர்ஸ் நிறுவனத்தை நிறுவினர். [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 "Ex-Union minister SBPBK dead". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2021-07-06. பிழை காட்டு: Invalid <ref> tag; name ":0" defined multiple times with different content
  2. "Ex-Union minister SBPBK dead | Siasat". siasat.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-02.
  3. "Former Union Minister passes away - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2014-03-02.
  4. "Members : Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-06.
  5. 5.0 5.1 "rediff.com: I have nothing against anybody: Satyanarayana Rao". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-06. பிழை காட்டு: Invalid <ref> tag; name ":1" defined multiple times with different content
  6. Damodaran, Harish (2018-11-25) (in en). India's New Capitalists: Caste, Business, and Industry in a Modern Nation. Hachette India. பக். 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-93-5195-280-0. https://books.google.com/books?id=GG58DwAAQBAJ&dq=kapileswarapuram+zamindar&pg=PT113.